இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
ஒரு முட்டாளின் மனைவி   என் மனைவிக்கு என் மேல் ரொம்ப கோபம்.  அவள் ரொம்ப நாளாகக் கேட்ட ஒட்டியாணத்தை நான் வாங்கிக் கொடுக்கவில்லையாம்.  மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.  கால் பட்டினி அரைப்பட்டினியாகவே ஓடிக்கொண்டிருந்தது என் கதை.  வாங்கிக் கொடுக்காத காரணத்தையாவது சொல்லியாகணமுன்னு ஒரே ரோதனை. ஒரு நாள் ரொம்பவும் முட்டிக்கிச்சி.  "பொண்டாட்டி ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்காத நீ என்னடா புருஷன்" அப்படி இப்படின்னு லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சிட்டா.  இப்படியே போனா என்ன ஆகுறதுன்னு "குட்"ட்டைப்  போட்டு ஓடைச்சிட்டேன்.  "தோ பாரும்மா....ஒனக்கு வாங்கிக் குடுக்கக் கூடாதுன்னா இருக்கேன்? என்னைக்காவது ஒருநாளு விட்டிருக்கியா...ஒன் இடுப்பளவு எனக்குத் தெரியுமா என்ன?...ஆனா அன்பை அள்ளி அள்ளிக் கொட்டுறதுக்கு ஒன்  இதயத்தை அளக்கவேண்டிய அவசியமே இல்ல பாத்தியா?...அதான் அன்பா பொழிஞ்சிக்கிட்டு இருக்கேன்" அன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ளவே அவ கோபமெல்லாம் போயிடிச்சி.  அவளும் நம்பிட்டா...ஒரு முட்டாளுக்குப் பொய் சொல்லத் தெரியாதுல்ல...
தும்பிக்கை இல்லாத சின்ன யானை உனது வால்குழைப்பில் கதும்பும் அன்பில் குரலடைத்துப்போகும் எனக்கு. ஏன் இவ்வளவு நேரம் என்று இப்படிக் கேட்க முடிந்ததேயில்லை  வீட்டில் யாருக்கும். என்னுடன் தெருவில் நடந்துவர எத்தனை எதிரிகளை எதிர்கொண்டாய் நீ. அதிகமாய்ச் செய்ததில்லை உனக்கு. மீன்கள் எங்களுக்கு மீந்த முள் உனக்கு. பிஸ்கட் எங்களுக்கு பொரை உனக்கு. துரத்தியும் போகாமல் நாங்கள் பேருந்து ஏறியபிறகுதான் வீட்டுக்குத் திரும்புவாய் நீ. சங்கிலி போட்டுக் கட்டிவைத்ததே இல்லை கடைசி வரைக்கும். தீராத ஏக்கம்ஒன்றிருந்தது எனக்கு சட்டென்று யானையாய் மாறி  நடந்துவரவேண்டும் நீ. ஓயாத உன் குரைப்பொலி கேட்ட ஒவ்வொரு இரவும் நன்றாகத் துாங்கியிருக்கிறேன் நீ இல்லாமல் போனஇந்த நிசப்த இரவில் உற்ங்க முடியவில்லை என்னால்.                          (கல்கி 23 நவம்பர் 2014)
படம்
படம்
நாமே எதிரிகள்! அழுது புலம்பவும் அந்நிய மொழி புன்னகை பூக்க புறத்தியான் பற்கள் சிரசுக்குள் செருகும் சிறைக்கம்பிகள் குத்தி முனகும் மூளை. பச்சைக் கிளியாகும் பச்சைத் தமிழன். நாக்கு இழந்தவர்கள் நாடு ஒவ்வொருத்தரும் ஊமை! தாள முடியவில்லை தமிழ்ச் சோகம் தத்தளிக்கிறது தமிழ்த் தேசம்! அன்னிய மொழி இராணுவ ஆயுதப் பொழிவுகள்! பள்ளி கல்லூரிகளில் தமிழ் பதுங்கு குழிகளில்! மொழியை அழிக்க... மூலதனப் புயல் சனாதன சுனாமி உலகமய ஊழி! * வஞ்சிக்கப்பட்ட வரலாறு ... தமிழால் பிழைப்பு நடத்துவோரால் தமிழ் பிழைத்ததென்னும் தகவல் பிழை! தானைத் தலைவர்களின் தமிழ் நேசம் சந்தேகத்திற்கு உரியது... உணர்ச்சிக் களிமண்ணில் உருவம் கொடுத்து கடைசியில் கரைப்பது கடலில்.... தமிழுக்கு ஆயிரம் மாலைகளுடன் அலங்காரம் படுக்க...பாடை! * வியாபாரம் ஆனது விளைநிலம் கொள்ளைக் கொள்முதல் லஜ்ஜையற்ற லாபம் ஆட்சேபமில்லை... அயல்மொழிகள் பள்ளிகள் தோறும் பாடங்கள் ஆகட்டும் வீணை ராகத்திலென்ன விகற்பம்? பாட்டாளிகளுக்குப்  பாஷாணமே... பரிபாஷை ஆகாத பாஷை! தமிழ்வழிக் கல்வியே தாரக மந்திரம் ! ஒவ்வொரு தமிழனின் உயரிய
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாம்பரம் கிளை நடத்திய "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையின் இறுதிப்பகுதி... 6 ஆண்டவன் செயலென்று அநீதியை அனுமதித்தோம் அவதாரம் காக்குமென்று ஆனவரை காத்திருந்தோம் கலி முத்திப் போச்சென்று கதை கதையாய்ப் பேசிக்கொண்டோம் எது நடந்ததோ அது நன்றாக நடந்ததாய் எதிர் செயல்களையும் ஏற்றுக்கொள்ளப்பழக்கப்பட்டோம்! மனிதனே தெய்வமென்னும் மகத்தான தத்துவத்தைப் புனிதர்கள் சொல்லுகையில் புளகித்துக் கேட்டிருந்தோம் புரியாமல் விழித்திருந்தோம் இனியேனும் -- செயல்படுகிற சிந்தனை வேண்டும் சிவந்து போகிற கண்கள் வேண்டும் முள்ளிவாய்க்கால் முதல் பாலஸ்தீனம் வரை ஒற்றை உயிருக்கும் உலகம் பதில் சொல்ல... ஐ.நா. சபை நமக்கு அறிக்கை வாசிக்க... ஒவ்வொரு உலகக் குடிமகனும் உரக்கக் குரல் கொடுப்போம் காற்றில் ஏறும் நம் கவிதைக்குதிரைகள் காஸாவில் இறங்கட்டும்... கண்ணுறக்கமற்றுச் செய்வோம் கவிதைச் சவாரி கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும் கழற்றி எறிவோம் கொள்ளு தின்னோம் குடிநீர் கொள்ளோம் லஜ்ஜை கொள்வோம் லாயம் பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  தாம்பரம் கிளையில் பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்க நிகழ்வில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து.... 5 தவித்தழுகிறது தர்மம் தறுதலையாய் அலைகிறது அதர்மம்! மௌனத்தில் தலை கவிழும் மனம்! சிதைந்து போன உடல்கள் பார்த்து கதறவில்லையா கல் இமை போர்த்திய உன் கண்கள்? மூக்குக்கும் மார்புக்கும் இடையில் நடக்கிற ஒரு முழச் சுவாசம் உனது உயிர் வாழ்தலுக்கு மட்டும்தானா? உபயோகிக்காத உறுப்பு உடலுக்குள் எதற்கு? உனது மார்புக்  கூட்டுக்குள்ளிருந்து பயன்படுத்தாத பாதி பிளந்த பீட்ரூட் பெருந்துண்டைப் பாதையில் வீசு! துக்கத்தில் நீ போட்டிருக்கும் முள்ளி வாய்க்கால் முக்காட்டை மெல்ல அகற்று. தெரிகிறதா? தடித்துப் பருத்த இலங்கையின் செங்கோலில் தடவப் பட்டிருக்கும் தமிழனின் இறைச்சி! தெரிகிறதா? இஸ்ரேலிய அரச விருந்து மண்டபத்தில் பரிமாறப்பட்டிருக்கும் பாலஸ்தீனியனின் பச்சை மாமிசம்! உயிரை ஊடுருவும் உலகமய அரக்கனின்   வெவ்வேறு முகங்கள்!                                   --தொடரும்....  
தமுகச தென்சென்னை தாம்பரம் கிளை நடத்திய பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து 4  நாம் இழப்பதற்கு ஏதும் இல்லாததைப்போலவே  பெறுவதற்கும் ஒன்றும் இல்லாமலாக்குவதற்கு மூல வியூகம் செய்தபடி  மூலதனம் எவற்றைக் கேட்கிறோம் நாம்? நாம் சிந்துவதற்குச் சில கண்ணீர்த்துளிகள் நாம் எழுதுவதற்குச் சில கவிதைகள் நாம் எந்துவதற்குச் சில மெழுகுவத்திகள் நாம் பாடுவதற்குச் சில தேசிய கீதங்கள் நாம் திரிவதற்குச் சில வனங்கள் நாம் புலம்புவதற்குச் சில ஒப்பாரிகள் நாம் புழங்குவதற்கு ஒரு துண்டு நிலம் நாம் சுவாசிப்பதற்குச் சில உயிர் மூச்சுகள் நாம் சிறகடிக்க ஒரு முழ வானம் நாம் இறுதியில் வீழ்ந்து கிடக்க சொந்தமாய் ஒரு கல்லறை! பாசாங்கானது அல்ல நம் அழுகை பஞ்சுமிட்டாய் அல்ல நமது வேண்டுதல் எந்த பொம்மையை யாசித்தும் அடம் பிடிக்கவில்லை நம் அழுகுரல்! முட்டிக் குடிக்க ஒரு முலைக் காம்பு பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பதிப்பதற்குப் பாதத்தடம்!                                       ...தொடரும் ...
தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து... நேற்றைய தொடர்ச்சியாக.... 3 அந்தக் கனவுக் கொள்ளையனிடம்  கண்ணிழந்தவர்கள் ஏராளம்  அவனது தொழில் களவு. உப தொழில் உளவு  கைத்தொழில் - மூளை மழுங்கும் மூலதன வியூகம்! பொழுதுபோக்கு- நாடுகள் தோறும் நடத்தும் நாற்காலி நடனம். வேதம் ஓதும் சாத்தான் விலாசம்: வெள்ளை மாளிகை இது அமெரிக்க முலாம் பூசிய ஆயுதப்போர்! அமெரிக்காவின் ஆடு புலி ஆட்டம் மூலதனத்தின் சதுரங்கம் பணக் கொள்ளையரின் பாம்பு ஏணி பரமபதம் இனிப்பு பூசிய காரம்...ஏகாதிபத்தியம்! பூப்போல் முகமென்று புனிதம் பேசும் ஆனால்... முள்ளிவாய்க்காலில் முள் மேயும் காஸாவில் கல் மேயும் ஈராக்கில் ரத்தம் லிபியாவில் யுத்தம் சிரியா, ஈரானுக்குச் சித்தம்! நம் அரசுகளுக்கு ஆரேனும் சொல்வீரா?... அமெரிக்காவின் ஆலிங்கனத்தில் பிறப்புறுப்பு காணாமல் போவதாகப் பேச்சடிபடுகிறது! இந்திய வானிலை அறிக்கையோ இன்னும் மோசம்! இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை எனத் தீர்மானமாய்
தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து... நேற்றைய தொடர்ச்சியாக.... 2 இஸ்ரேல் அரசின் நீள்சதி நெருப்புச் சட்டியில் பொசுங்கி விழுந்த படி...பாலஸ்தீனப் புறாக்கள் பாலஸ்தீன எலும்புக்கூட்டின் மேல் பாதி ஒட்டி பாதி சரிந்த கழுத்தின் முள்ளிவாய்க்கால் முகம்போல் கனவுகள் உருக்குலைந்த "காஸா " எங்கெங்கும் எகிறிக் குதிக்கும் எறிகணைத் தவளைகள் உடல்கடல்களின் உயிர் ஆவி மொண்டு உயரே எழும்பும் புகை முகில்கள் உறுப்பு சிதைந்த உடல்கள் உயிர் பிரிகிற ஓசைகள் இறக்கைகள் பொருத்தி அசையும்  மலையாக இஸ்ரேல் கழுகு இனியும் பிய்த்துத் தின்பதற்கு தசைத் துணுக்கற்ற  கோழிக்குஞ்சாய்... பாலஸ்தீனம் இஸ்ரேல் அரசு இதுவரை செய்தவை... பழைய கல்வாரியில் ஆணி அறைந்த புதிய இயேசு முகமது நபிக்கு சிலுவை மனிதாபிமானச்  சட்டங்கள் உடைத்து மண்டையோடுகள் சர்வதேசத் தீர்மானங்களை அறுத்துத் தைத்த ராணுவச் சப்பாத்து காற்றில் ஏறும் நம் கவிதைக் குதிரைகள
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தாம்பரம் கிளையில் 2/8/2014 சனிக்கிழமை பிற்பகல் பீரங்கிகளுக்கு  எதிராக தூரிகைகள் என்கிற நிகழ்வு தொடங்க ஓவியர்கள்  சந்ரு, நடராஜன், கலைச்செல்வன், வெங்கடேசன், ரபீக், சிவப்பிரகாசம் ..... என ஏராளமான ஓவியர்கள் வரையத் தொடங்குகிறார்கள்...கண்கள் செருக பாலஸ்தீனத்து காசாவில் காயம்பட்ட உடலாக உணர்கிறோம்.  உறுப்புகள் சிதைந்த உடல்களில் ஒன்றாக நம் கண் முன்னே குழந்தையின் விரல் வந்து விழுகிறது...உணர்வுகள் கனத்துப்போக... கவியரங்கம் தொடங்கும் நேரம்...கவியரங்கத்தில் கலந்து கொள்ள கிருஷாங்கினி, ஜோசப் ராஜா, தயானி தாயுமானவன், பாரிவள்ளல், சிவப்பிரகாசம், கங்கை அரசு, தியாகராஜன், அருள்தம்பி ஆகியோர் வந்திருந்தனர். தமுகச தெருவில் தொடர்ந்து கார், பைக் சப்தங்கள் என போய்க்கொண்டே இருந்தாலும் விடாப்பிடியாக கவிதையை உள்வாங்கிய படி அமர்ந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். நான் வாசித்த தலைமைக் கவிதையிலிருந்து... பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்... பீரங்கிகள் உலோகங்களின் கூட்டுறவில் உருவாக்கப்பட்டவை தூரிகைகள் உயிர்ப்பின் குறியீடாகவும் உணர்ச்சியின் வெளியீட
கதிர்பாரதியின் கவிதையுலகம்  நேற்றுப்போல் தோன்றுகிறது...கல்கி அலுவலகத்தில் அப்பொழுது ஆசிரியர் பொறுப்பிலிருந்த திருமதி சீதா ரவி அவர்களின் அழைப்பின் பேரில் மிக நெருக்கமான ஒரு சிறு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அன்றைய விருந்தினராகக் கலந்து கொண்ட இன்னொருவர்  கவிதாயினி வைகைச்செல்வி அவர்கள். திரு.மு.மாறனும் திரு.யுவராஜ் அவர்களும் கல்கி அலுவலகத்தில் இருந்த பிற நண்பர்கள்.  திருமதி சீதா ரவி ஓர் இலக்கியப் பகிர்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அந்நிகழ்வில் பலரும் கவிதை வாசித்தார்கள்.   ஓர்  இளைஞர் வாசித்த கவிதை எனக்குள் ஒரு மின் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.  அன்றைக்கு அவர் அணிந்திருந்தது கறுப்புச் சட்டை என்பதாக என் நினைவு.  அவர் வாசித்த கவிதையின் கதைநாயகர் முக்குக்கு முக்கு குந்தவைக்கப்பட்டிருக்கும்பிள் ளையார்.  அவர் கவிதை வாசிப்பின் போது எங்கள் ஊர் சந்திகாப்பான் (கிராமங்களில் ஒவ்வொரு தெருக்கொடியிலும் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அந்த "சந்திகாப்பான்" தான் பிள்ளையார் என்பதாக ஐதீகம்) மீது ஒரு நாய் ஒண்ணுக்கடித்துக் கொண்டிருந்தது.  என்ன தைரியம் அந்த இளைஞருக்கு.  ஒத்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... சம கால சமூக அரசியல் நிகழுவுகளில் இடஒதுக்கீடு எதிர்ப்பு, தலித் எழுச்சி, பாபர் மசூதி இடிப்பு, இவற்றின் ஊடாக இந்துத்துவ சக்திகள் தங்களது பரிசோதனைகளில் புதிய வடிவெய்தி இருக்கிறார்கள்.  படுகொலை, வன்புணர்ச்சி, கொள்ளை, தீவைப்பு, போன்றவை நடந்து முடிந்த பின்னும் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது நினைவுகளில். மவுனம், அடர்ந்த மவுனம் எதிர்வினையாக கசிகிறது.  ஒட்டுமொத்த சிவில் சமூகமும், கொலை வெறியில் மகிழ்ந்த தருணங்கள் முன்னெப்போதும் இருந்ததில்லை. காவல் துறை, நீதித்துறை, அரசாங்கம் எல்லாம் மோடியின் கரசேவகர்களாகக்  கைகட்டி, வாய் பொத்தி... உச்ச நீதிகளின் "மனசாட்சி" விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட நிலையில்... இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மாற்று பத்திரிகைகள் இதர மிச்சமிருக்கும் சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மட்டுமே நம்பிக்கையளிக்கிறது. நன்றி:  குஜராத் 2002 டெஹல்கா அம்பலம் - அ .மார்க்ஸ்  - பயணி வெளியீட்டகம்  
கொசுக்களின் குருதியிலிருந்து  கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர்   மானுடத்தின் தலைவாசல்  தாய்மடி  பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும்  உள்ளங்கை  கருவறை  நாற்றங்கால்  கடவுள் வணங்கும் சந்நிதானம்  இத்தனை பெயர்களிலும்  இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும்  உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க  காலாற நடக்க வேண்டும்  பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும்  கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும்  வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும்  கம்பனுக்குள் கனிய வேண்டும்  இளங்கோவின் இதயம் வேண்டும்  பாரதியின் பதியம் வேண்டும்  கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க  காலாற நடக்க வேண்டும்  இதற்கெல்லாம்  புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில்  கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக்  கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி  எவரும் நினைப்பதில்லை  சாக்கடைக்குள் புழுவாவதே  "சாகா வரம் " குருதியில் தோய்ந்த வன்முறை வாள்  கொண்டுவந்து சேர்த்ததென்ன ?... ஈக்கள் மொய்க்கும் பிணம்
ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலும் ஆதார் அட்டையும்     சமீபத்தில் "ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்" என்கிற தனது     கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நண்பர் அய்யப்ப மாதவன் இப்படிக் குறிப்பிடுவார்.... """""ஒரு கவிஞன் காதலைத்தான் பாடவேண்டுமா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும்.  வேறு எதைப்பற்றியும் பாடும் காலங்களில்லை என்றே கூற வேண்டும்.  ஒரு எழுச்சியும் இல்லை, புரட்சியும் இல்லை.  எழுத்தாளனுக்கு அதிகாரமுமில்லை. அங்கீகாரமும் இல்லை.  அடக்குமுறை வடிவமாக எப்பவுமே இங்கிருக்கிற அரசுகள் தோன்றியவண் ணமிருக்கின்றன.  பொய் பொய்யாய் பேசிவிட்டு அரசை ஆள்கிறார்கள்.  மக்களின் மீதே எல்லாச் சுமைகளையும் திணிக்கிறார்கள்....ஒட்டுமொத்த மக்களும் விழிப்புணர்ச்சி அடையாதவரை நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம்.  ஒருவேளை உண்மையில் நம் மக்கள் அவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கூட்டாகக் குரல் கொடுத்துப் பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் எனில் அப்போதுதான் கவிஞனுக்கான மகத்தான காலம் உருவாகிவிடும்.  அப்போது கவிஞன் காதலைத் தூக்கிஎறிந்துவிட்டு மக்களின் ந