இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது... ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்... ஒரு சக மனிதனின் டைரிக்குறிப்புகள்  ***** உன்  உலகிற்கு நீ தரும்  உன்னத பரிசு  ரத்தம்  ***** நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு  எப்படிச் சொல்வேன்  ஏற்கெனவே யாருமறியாமல்  இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை. ***** யதார்த்தம்  நம்மைவிட நன்றாகவே  யோசிக்கிறார்கள்  நம் பிள்ளைகள்  ***** உலகின் மிக நீண்ட கவிதை  பெருமூச்சு  ***** பாட்டி எழுதிய கவிதையை  ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா  தினமும்  தாத்தாவின் பல்செட்டை ****** கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல்  ஆசுவாசம் கொண்டன புறாக்கள்   ****** என்னைவிட உபயோகமாய் இருக்க  ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்.... அம்மாவுக்கு ஒரு கைத்தடி வாங்கித்தர வேண்டும். ***** கடந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்  என்னவெனில்  வேண்டாம்  பாராளு
பாம்புக் காதுகளும் மூளைச் சங்கும்  ஆதிபெருந்தேவன்  எதையுமே   கேட்பதில்லை   என   அடம்   பிடித்துக்கொண்டிருக்கும்   செவிட்டுச்   செவிக்கு   மொண்ணையாக   விரும்பாத   மூளை   எழுதிக்கொள்ளும்   மடல் ! செவிட்டுச் செவியே,    நான்   கத்துகிற   கத்தல்   இந்திய   தேசத்துக்கே   கேட்டாலும்   கேட்கும் .... உனக்குக்   கேட்கவில்லையா ?... கேள்விகுறி   போல்   வளைந்திருக்கும்   உனது   இரண்டு   பிம்பங்களும்   எப்போது ஊமைகளாயின  ?   உனது   இரண்டு  " காட்சிப்   பிழைகளும் "   அரசு   என்கிற   இரும்பு   எந்திர   முட்டையின்   இருபுறத்திலும்   பொருத்தப்பட்ட   அலங்கார   உறுப்புகளா ?    அல்லது   கண்கள்   மூடிக்கொண்டிருக்கும் முகத்தின்   ஆணவச்    சதைப்   பிதுங்கல்களா ?   எனில் ,  கேட்கக்   கூடாது   என்பதற்காகப்   படைக்கப்பட்டிருப்பதற்குப்   பெயர்   காதுகளா ?... அழுந்தத்   தலைப்பாகைக்   கட்டிய   ஒருவனிடம்   ரகசியம்   சொன்ன ஊமையின்   கதை   ஆகிவிட்டது   என்   கதை ! நாடு   முழுவதும்   ஆர்ப்பாட்டமும்   மறியலும்   சட்டமன்றத்   தீர்மானங்களாகவும்   உலவுகிற   வால்மார்ட்   ராட்சசத்துக்கு   எதி