இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  நூல் விமர்சனம் – நா.வே.அருள் கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான் பின் அட்டைப்படம்.   அட்டை முதல் அட்டை வரை மனசில் ஒட்டிக்கொள்ளும் கவிதை அட்டைகள். இந்தியா விடுதலையாவதற்கு ஒரு மாதம் முன் பிறந்த மகாதேவன்தான் கவிதையில் ஜெயதேவன்! “மீன்காரியின் கை வளையொலியில் ஆதி இசை” கேட்கிற செவிகள்; உதிரும் பழுப்பிலையில் மரத்தைக் காண்கிற கண்கள்; உங்கள் மழையும் எனது மழையும் ஒன்றல்ல என்று உணர்கிற ஞானம் என ஜெயதேவன் கவிதைகள் கடற்கரை மணல்வெளியில் குடை ராட்டினம் போலச் சுற்றிச் சுற்றி வருகின்றன.   குதிரை, சிங்கம், புலி, மீன், பெட்டி என வித விதமான இருக்கைகளில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக உட்கார்ந்திருக்கின்றன.   அனைத்துக் குழ
படம்
  மரணத்திற்கு ஏன் இத்தனை கை கால்கள்? ஆக்டோபஸைப் போல அறைந்து கவ்வுகிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வாய்கள்? ஒவ்வொருவராகப் புசித்துக் கொண்டேயிருக்கிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வேகம்? குதிரைப் படையில் சவாரி செய்கிறதே   மரணத்திற்கு ஏன் இத்தனை ஆவேசம்? பசியடங்காமல் புவியைப் புசிக்கிறதே   அவசர அவசரமாகக் காரியமாற்ற ஆணை இடுவதாக எண்ணித்தான் ஒரு தோழன் ஒவ்வொரு ஆண்டும் கலைஇரவு நடத்திக் கலாச்சாரம் உயர்த்தினான்.   அதற்குள் செய்தாக வேண்டுமென்றுதான் ஒரு தோழன் ஆழமான அரசியலை அள்ளியள்ளி ஊட்டினான்.   நேரமிருக்காது என்று எண்ணித்தான் ஒரு தோழி கவிதைகளில் தோழமையைக் கட்டி எழுப்பினாள்.   ஒரு பொன்னுலகத்திற்கான பாதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தார்கள்.   மரணமே உன்னை நானறிவேன்…. உன்னால் முடிந்ததெல்லாம் உயர்ந்த மனிதர்களையும் செயலற்றுப் போகச் செய்வதுதான். ஏற்கெனவே அவர்கள் செய்து முடித்த செயல்களை உன்னால் நெருங்கவே முடியாது உன்னால் நெருங்கவே முடியாது.   நா.வே.அருள் 03.05.2021