இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
லெனின் பாரதியின் “மேற்குத் தொடர்ச்சி மலை” மேற்குத் தொடர்ச்சி மலை ஆரவாரமில்லாத எளிமையின் அழகு பொருந்திய   திரைப்படம். நவீன காலத்து இயக்குநர்களில் நம்பிக்கைக்கு உரியவராகத் தன் இருப்பினைத் தனக்கே உரிய இயல்பான முறையில் தக்கவைத்துக் கொள்கிறார் புதிய இயக்குநர் லெனின் பாரதி. அடிவாரத்திலிருந்து ஏறிச் செல்வதற்கு அவ்வளவு இலகுவாக இல்லாத ஒரு மலைக்கிராமத்தை ரத்தமும் சதையுமாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் படக்காட்சிகளில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. வேறு ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த ஒருவன் எப்படி எப்படியெல்லாம் அந்த மக்களோடு ஒன்றித் தன் பேச்சினைத் தகவமைத்துக்கொள்கிறான்,   வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்கிறான் என்பதெல்லாம் கூர்ந்து நோக்கத் தக்கது. கடைசியில் அவன் வெளிநாட்டுக்காரனுடன் இணைந்து எப்படி உள்ளூர் நிலங்களை வளைத்துப் போடுகிறான், அவனது நவீனக் கந்துவட்டித்தனம் என்பதெல்லாம் அருமையாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. லோகு ரியல் எஸ்டேட், லோகு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்றெல்லாம் வளர்ந்து பிரம்மாண்டமாகிவிட்டான் என்பதை அவனுடைய பிரேஸ்லெட்டின் மூலமும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை

அண்டனூர் சுராவின் \\கொங்கை\\

அண்டனூர் சுராவின் கொங்கை குறுநாவலை முன்வைத்து **************************************** “,,,,,, துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன.” குட்டி ரேவதி ‘முலைகள்’ என்கிற தனது தொகுப்பில் இடம்பெறும் கவிதை வரிகளுடன் தொடங்கலாம்.   ஒரு நிறைவேறாத காதலில் என்கிற வரியை வேண்டுமென்றே நீக்கிவிட்டேன்.   மேலே இடம்பெற்ற இந்த மூன்று வரிகளின் வலி மிகுந்த விரிவாக்கம்தான் அண்டனூர் சுராவின் ‘கொங்கை’ என்கிற இந்தக் குறுநாவல். பெண்கள் ஆண்களைப் பற்றிய காமச் சிந்தனைகள் சம்மந்தமான விஷயங்கள் பரந்த அளவில் தெரியப்படாத தமிழ்ச் சமூகத்தில் ஆண்கள் பெண்கள் பற்றிய சிந்தனைகளில் முலைகள் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறதென்பதை அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளார் அண்டனூர் சுரா. ஆண்களின் மூளை முழுவதும் முலைகளாகத் தொங்குகின்றன. ஆண்களை மட்டுமல்ல, பெண்களும் சகப் பெண்களின் முலைகள் பற்றிய அங்கலாய்ப்புகளிலும், ஆவலாதிகளிலும் அளவுக்கதிமாகவே ஈடுபடுகின்றனர். இதைச் சர்வே பண்ணித்தான் பெண்களின் உள்ளாடை விளம்பரக் கம்பெனிகள் தங்கள் கார்ப்பரேட் கைகளை அகல விரித்திருக்கின்றன. வியாபாரச் சூத்