இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
இது நம்ம பூமி  அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி       அநியாயம் நடந்த கதை  கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக்       காணாமல் போன கதை  வெளையாட்டுப் பருவத்துல - அவர்       வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல  - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அட       ஒசந்த சாதி கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - சிறு       கெணறு கூட ஏற்கவில்ல  பள்ளியில சமமாக - மத்த       பிள்ளையோட குந்தினாக்கா  பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா       பிரிச்சாங்க நோய் கணக்கா  தனிசாக்கில் குந்தவச்சி  - அழுக்குத்       தனி டம்ளர் ஒதுக்கிவச்சி  அனிச்சமலர் அண்ணலையே - எரி       அக்கினியில் போட்டாங்க  வழக்கறிஞர் ஆனபின்னும்  - குந்தின       வண்டிகூட தீட்டச்சாம்  அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி        அம்மணமும்  கோட்டாச்சாம்  அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த       அவமானம் பாத்தீங்களா  சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில்       சூடு கொஞ்சம் போட்டீங்களா  திருடன் போல் துரத்திப்புட்ட  - கெட்ட       தேசமிப்போ மண்டியிடும்  தெருத்தெருவா செலை வச்

கவிதை

http://kungumamthozhi.wordpress.com எந்திர வாசல்  ஒரு பெண்தான்   வேட்டையைத் தொடங்கிவைத்தவள்  தன் பிள்ளைகளுக்காக.  குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை  எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும்  தெறிக்கும் உண்மை.  இது பட்டாக்கத்தியுடன் அலையும்  ரவுடி அறியாத ராகுல ரகசியம்* அதனால்தான் இன்றும்… தாய்க்கோழி தன்  சிறகுகளைப்   பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க    குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து பயந்து திரும்பும்.  கல்வியும் கருணையும் கவிதையும்  கைவிடப்பட்ட உலகில்  துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள்.  இதயங்கள் புறக்கணித்து  எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில்  சமூகத்தின் சவக் களை.  இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம்  நிகழ்ந்ததைப் பார்த்து  நினைவிழக்க… சுயபார்வையற்ற கேமரா  தன் ஒற்றைக் கண்ணால்  உதிரம் அதிரும் காட்சிகளை  உள்விழுங்கத் திணற… கத்தி பார்த்து உயிர் உறைய  சரிந்து சாய்கிறாள் பெண் ஒருத்தி.  வழியும் குருதி வழித்தெறிந்து  சாவகாசமாய்த் துணியில் துடைத்து  கத்தியைப் பையில் திணித்து  குற்ற உணர்ச்சியற்று வெ
இது நம்ம பூமி  அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி       அநியாயம் நடந்த கதை  கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக்       காணாமல் போன கதை  வெளையாட்டுப் பருவத்துல - அவர்       வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல  - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அட       ஒசந்த சாதி கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - சிறு       கெணறு கூட ஏற்கவில்ல  பள்ளியில சமமாக - மத்த       பிள்ளையோட குந்தினாக்கா  பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா       பிரிச்சாங்க நோய் கணக்கா  தனிசாக்கில் குந்தவச்சி  - அழுக்குத்       தனி டம்ளர் ஒதுக்கிவச்சி  அனிச்சமலர் அண்ணலையே - எரி       அக்கினியில் போட்டாங்க  வழக்கறிஞர் ஆனபின்னும்  - குந்தின       வண்டிகூட தீட்டச்சாம்  அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி        அம்மணமும்  கோட்டாச்சாம்  அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த       அவமானம் பாத்தீங்களா  சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில்       சூடு கொஞ்சம் போட்டீங்களா  திருடன் போல் துரத்திப்புட்ட  - கெட்ட       தேசமிப்போ மண்டியிடும்  தெருத்தெருவா செலை வச்

ஒரு பத்திராதிபருக்கு என் பாராட்டு மலர்வளையம்

மரணத்தால் விழுங்க முடியாத மானுட விதை  புகழ்வது என் தொழிலல்ல  புதையல் எடுப்பது என் பொழுதுபோக்கு  அவ்வப்போது சில அபூர்வ புதையல்கள்  அகப்பட்டதுண்டு... சில  சமயங்களில் புலியின் உறுமல்  சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல்  பட்டாம் பூச்சியின் சிறகடிப்பு, மின்மினியின் மினுக்கட்டாம்  கொண்டலாத்தியின் குகுகுகுப்பு  சிலநேரம்  கண்கள் சூடேறக் கண்ட  கனவு சாம்ராஜ்யம்  சிலநேரம்  அடியுரமாகிப்போன  அற்புத மனிதம்  அப்படி என் அகழ்வாராய்ச்சியில்  அகப்பட்ட ஒருவன்தான்  அகிலம் குறித்துக்கொள்ள வேண்டிய  ராமச்சந்திர ஆதித்தன்   நான் ஒரு முட்டாள் கவிஞன்  இதற்குமுன்  ஒருமுறை கூட உன் முகம் பார்த்ததில்லை  நீ உச்சரித்ததில் ஒரு வார்த்தைகூட  என் செவி வந்து சேர்ந்ததில்லை  எனது இதயத்தில் எப்போதும் குடியிருக்கும்  இளவரசன்  ஒருத்தனின்  சுட்டுவிரல் காட்டிய  சுடர்க்கோபுரம்  நீ.... உன்னையும் என்னையும் இணைத்திருப்பதோ  துண்டிக்கப்பட முடியாத  தொப்புள் கொடி உறவு  ஒருவகையில் நாம் இருவரும்  ஒன்று  தாய்மொழிப் பள்ளி நடத்தி  கனவில் தோற்றுப்போனவன்