இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆதியிலிருந்து அந்தம் வரை பாடம் ******** ஆசிரியர்களால் ஆனதிந்த உலகம்.  இல்லையெனில் ஆதியில் தோன்றிய மனிதர்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாய்க் கம்பும் கல்லுமாய் ஒருவரை  ஒருவர் துரத்திக்கொண்டிருக்கலாம் தாய் தன் பிள்ளைக்குச் சைகை மொழியைத் தத்தளித்தாள் அல்லவா? அதுதான் மூலத்தாய்மொழி.  அதிலிருந்து கிளைத்ததுதான் அநேக மொழிகள். மொழிக்கு இப்படி. காலப்போக்கில் கணக்கற்ற கலைகள். ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு ஓர்மை. சொல் எழுத்துக்குத் தாவியதும், கலை, இலக்கியமாய் உருவெடுக்கவும் காலம் எத்தனை ஆசிரியர்களைக் கணக்கற்று ்ஈன்றெடுத்திருக்குமோ? .ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஆசிரியர்தான். கொஞ்சம் நினைவுகளைப்பின்துரத்திப் பார்க்கிறேன்.  என் சின்ன வயசில் எனக்கொரு பைத்தியக்காரப் பழக்கமாென்றிருந்தது.  அதாவது எனக்குக் கருத்து தெரிந்த அந்த சிறுபருவத்தில் பேசுவதையே ஒரு பாட்டைப்போல ராகமெடுத்துப்பாடுகிற பாவனையில் சொற்களை உருட்டிக்கொண்டிருப்பேன்.  அப்போது எத்தனை வயசிருக்கும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. செஞ்சிக்குப்பக்கத்தில் அவியூர்தான் என் பாட்டி ஊர்.  அன்று பக்கத்தில்