இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  பேரணி *********** தலைநகரை நோக்கிய லட்சம் கோடி உழவர்களுடன் எனது கவிதைகளும் பயணிக்கின்றன ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனது கவிதைகள் மறியல் நடத்தும் எனது கவிதைகளுக்குப் போராட்டங்களும் புதிதல்ல. வெள்ளைத்தாளில் எழுதுகோல் முனையால் கீறி உழுகிறபோதும் கணினித் தொடுதிரையில் மின்னம்பை நகர்த்துகிறபோதும் கண்ணில் படுவதோ கலப்பை நுனி. மாடுகள் இல்லாதபோது கணவனும் மனைவியுமே கலப்பையை இழுப்பது மாதிரி தன்னந்தனியாகக் கவிதையை இழுத்துவருகிறேன். விலை கட்டுப்படியாகாதபோதும் ஓர் உழவனைப்போல வார்த்தை விதைகளைத் தூவுகிறேன். எனது கறுப்பெழுத்துகளின் உமி நீக்கிப்பார்த்தால் அரசியல் அரிசிகள் முகங்காட்டும். உழவனின் கிணற்றைப்போலவே வற்றிப்போய்க் கிடக்கும் எனது வாழ்க்கையும். உழவனைப் போலத்தான் அடக்கவிலையை நிர்ணயிப்பதில் எனது கவிதைப் பயிர்களுக்கும் கட்டுப்படியில்லை. ஒரு புயலுக்குப்பின் வயலிழந்துபோன உழவனைப்போல இலக்கியப் புயல்களால் நானும் வலுவிழந்து போய்விடுகிறேன். விவசாயிகளுடையதைப் போலவே எனது கவிதை நிலமும் காய்ந்துகிடக்கிறது. இலக்கியத்திலும் விருது நிவாரண நிதிகள் விலை பேசப்படுகின்றன. சமூக பயங்கரவாதத்தால் உழவர்களின் தற்கொலைகளைப
  கவி உலா **************** நா.வே.அருள்   கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள்.   பூ பார்ப்பதில்லை;   மணம் நுகர்கிறார்கள்.   நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள். நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள்.   ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்…. ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன். அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றி.   இன்றைய உலாவில்   சில கவிதைகள்   இந்த வினாத்தாள்கள் ஏன் இப்படி உயிர் பறிக்கின்றன விடை தெரிந்த வினாக்கள் ஏராளமிருக்க சூழ்ச்சிகளே வினாக்களான பின்…. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தேர்வுகளைத் தீ தின்னும் காலம்…. இப்போதைக்கு முடிந்ததெல்லாம் தனித்த குரல்களையெல்லாம் கூட்டுக் குரல்களாக்குவதுதான்   க.அம்சப்ரியா Punnagai Amsapriya   *****   கறையான் புற்றை சிதைத்துவிட்டு மழைத்துளியில் அலகு துடைக்கிறது தவிட்டுக் குருவி   சிறுமி குலுக்கி விளையாடும் கூழாங்கல்லில் ஓடும் நதியின் சப்தம்   கவி.விஜய் *****   என் கண்கள் கண்ணீர் வடிக்காததனால் என் இதயம் காயப் படவில்
படம்
  புல்வெளிப் பாலை! ***************************** தேநீர்க் கோப்பையின் விளிம்புகளில் தன்னையறியாமல் உறிஞ்சி ருசி காணும் உதடுகளைப்போல உன் வரவை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன். நீ மௌனத்தை ஒரு போர்வையைப் போல போர்த்திக் கொண்டாலும் உன் கறுப்பு வெள்ளைக் கண்கள் காதலைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. என்னதான் பாசிக்குள் ஒளிந்து கொண்டாலும் மேலே வந்துதானே ஆகவேண்டும் மீன்கள்? கடும் பனியின் நள்ளிரவில் உதறலெடுக்கும் வாயினைப்போல எந்த நேரத்தில் உனது பெயர் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்துகொண்டுதான் இருக்கிறேன் நீயோ தொட்டதும் உடலை உள்ளே இழுத்துக் கொள்கிற நத்தையைப்போல ஊர்ந்து செல்கிறாய் லேசான தீண்டலில் ஒரு மரவட்டையைப் போல சுருண்டுகொள்கிறாய். இவ்வளவு நீளமான விரலுக்கு அரை விரல்கடை நகம் அழகு சேர்ப்பதுபோல உன்னை நான் பார்க்கும் ஓரிரு நிமிட ஒளிப்பட காலம் என் ஆயுளையே அர்த்தப்படுத்தி விடுகிறது நான் மட்டுமென்ன? உன்னைப் பார்த்ததும் என்னுள் இழுத்துக் கொண்ட இதயம் உன் காதல் கதகதப்பில் வசமிழந்து ஓட்டிலிருந்து வெளிவந்துவிடுமோ என்ற பயத்திலிருக்கும் கடல் ஆமை!! --நா.வே.அருள் Thanks to Prof. Chintamani Vani for his excellent tran
படம்
  ஜே.ஜே.அனிட்டாவின் கவிதைத் தவம் ********************************************************** கவிதைக்கு யோகம் அடித்திருக்கிறது.   கவிஞர்கள் ஒரு கவிதையை முன்வைத்துக் காய்தல் உவத்தல் இன்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்துகிற களம் அல்லது சூழல் சாத்தியமாகியிருக்கிறது.   அனிட்டா அவர்களின் கவிதையைப் பார்க்கலாம். //ஏன் நகர்கிறேன் என்கிறாய் அசைதலற்று தெளிவுறாத பிம்பமாய் உனையுறுத்தி ஒறுத்தலை விடவும் நகர்தல் நலமே. கருணைக் கரமுயர்த்தி உனையழைத்து எனதிருளைக் கவ்விக் கொண்டு நடைபயிலச் சொல்லும் கைங்கர்யம் காட்டிலும் விழி திறந்து அகம் துற என்பதே மேல். ஒரு பிடி நிழல் பிடித்து ஆறடியை விழுங்கிக் கொள்ளும் நினைவுச் சாளரம் விழுங்குதல் பதிலாய் திறந்த கதவுகளின் நிறம் உடுத்தி ஓருயிராய் பிரிந்து கிட என்பதே சரி. இசைதலும் விசை படர் விழைதலும் மறத்தலும் நீர்த்த உயிர்த்தலுமாய் உன்னை அசைவுறாதபடிச் செய்யும் என் இருத்தலை விடவும்.. மெலிந்து நகர்ந்து துயருகிறேன் என்பதே இனிமையான நலம். ஏன் நகர்கிறேன் என்கிறாய்.. நகர்தலென்பது உனையொத்தே நிகழும் ஓரிடம் நில்லாத என் பயணத்
படம்
  கவிச் சக்கரவர்த்திகள் ********************************** கவிதைக்குள்ளிருந்த ரசாயனப்புட்டி கவிழ்த்துக்கொள்ள மாளிகை தீப்பிடித்துக்கொண்டது   கவிஞர்கள் இறந்துகிடந்தார்கள் கவிதைகள் ஐரோப்பியப் புதைசேற்றில் அமிழ்ந்து கிடந்தன.   அப்போது அலகுகளில் மெகா ஃபோனைச் செருகி வனங்களில் கீதங்களுடன் வந்தன வானம்பாடிகள்.   இதயத்தில் வாழ்ந்தவர்கள் இரைப்பைகளின் பாலைவனத்தில் பனைமரங்கள் நட்டவர்கள் சிறகுகளால் நடந்தவர்கள் கால்களால் பறந்தவர்கள் காற்றில் நீந்திய மீன்கள் தலைமுறை ரௌத்ரத்தின் தாயாதிகள்   காளியின் நாக்கில் கவிதையை எழுதியவர்கள்.   தலையணைக்குள் மூளைகள் முளைத்தன.   ஒருவன் ஒவ்வொரு புல்லுக்கும் பெயர் சூட்டியவன் இன்னொருவன் சகாராவைத் தாண்டாத ஒட்டகம் மற்றொருவன் பால்வீதியின் பித்தன்   ஒருவன் கவிதையின் நெற்றியில் ஆயுதம் வைத்தவன் இன்னொருவன் கவிதையின் நெற்றியில் கனவுகள் பூசியவன் மற்றொருவன் கவிதையின் நெற்றியில் பிறையைச் சூடியவன்   ஒருவன் புழுதித்தடங்களில் போர்வாள் செய்தவன் இன்னொருவன் அரச விருந்தினில் நஞ்சுண்டு கிடந்த