இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
          தீ           •• வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் ஞாபகமிருக்கிறதா நாற்பத்து நான்கு உயிர்கள்? ஞாபகமிருக்கிறதா தஞ்சை ராமையாவின் குடிசை? ஞாபகமிருக்கிறதா சாணிப்பால் சவுக்கடி வாழைமட்டையில் தண்ணீர் ஞாபகமிருக்கிறதா கையில் செருப்பு இடுப்பில் துண்டு, ஞாபகமிருக்கிறதா எப்போதும் கைகட்டல் இரட்டை டம்ளர் வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் மாற்றுத்திறனாளிகள் மன்னிப்பீர்…. இது இடஒதுக்கீட்டுக்காக ஏங்கும் ஊனமுற்றோருக்கான உழவுதேசம். ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் செவிடர் தேகம். பிராணி வளர்ப்போர் சங்கம் பிழை பொறுத்தருள்வீர்… கேவலம் நாய்க்கும் தன் வால் நிமிர்த்தாத தன்மானம் இருக்கிறது மனிதர்கள்தாம் குனிந்து கிடக்கிறார்கள். இழிவு  இழிவு இழிவு மறதி தேசத்தில் வரலாற்றுப்பிழைகளே வாரிசுகள். மறதி தேசத்தில் எதிர்காலம் எப்போதும் இருண்டகாலம். மறதி தேசத்தில் நெளியாத புழுக்களாய் மனிதர்கள். மறதி தேசத்தில் கடலின் தீபகற்பமல்ல கண்ணீரின் தீவு இழிவு  இழ