இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்

"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். " எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது. அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம். அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி. எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரி
நீதி சாத்தான்! வயிறு எரிய மனசு அழ கண்ணில் கண்ணீர் கவிதையில் ரத்தம் கூடவே இருந்து குடும்பம் நடத்தி துரத்தித் துரத்திக் காதலித்ததுணை-ஐ ஆத்திரத்தில் அம்மி தூக்கிச் சாகடித்தவருக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ நச்சுக் காற்றை வியாபாரம் செய்தவனுக்கு நன்றிக்கடனாக மூச்சுக்காற்று குற்றுயிரும் குலைவுயிருமாய் எழுந்த ஓலங்கள் இன்னும் செவிகளில்... நோய் கொண்ட பலூன்களாக நுரையீரல்கள் கண்களில் பிரளய மின்னல்கள் கொத்துக்கொத்தாய் நோய்க்கிருமிகள் குடிகொள்ள இழவின் கனம் தாங்காமல் இற்று விழுந்த இதயங்கள் எந்த உறுப்புமே இன்றி வெற்றுக் கார்ர்ரால் நிரம்பிய சிசுவை எத்தனை யுகங்கள் ஈனவேண்டும் எம் இந்தியத்தாய்கள்? அன்றைய இரவு இன்னும் விடியாமல்... அறுந்த உயிர்களைத் தொங்கவிட இந்திய வரைபடக் கோடுகளில் இடமில்லை. வோவொரு இந்தியனின் அடிவயிற்றில் புரளும் அக்கினி கேட்கிறது.... ஆண்டர்சன் எங்கே? வெள்ளை மாளிகையின் நிழலில் ஒளிந்துகொண்ட கருப்பு அனகோண்டா வாக ஆண்டர்சன்! திருட்டு விமானம் ஏறிச்சென்ற நீதி திரும்பவே இல்லையா? இருபதாயிரம் சடலங்களில் ஏதேனும் ஒன்றிலாவது எழுதிவையுங்கள்... நீதி தேவதையா? நீதி சாத்தானா? --------------------

கவிதை

அப்பாக்களின் காலம் அடிக்கடிச் சிரிக்கும் பக்கத்து வீட்டுப் பெண் அடக்கி வைக்கப் பழகுகிறாளாம் சிரிப்பை. சிரிப்பு மனசோடும் உதட்டோடும் சம்பந்தப்பட்டதென ஊறிக்கிடந்த எனக்குள் அதிர்ச்சி உறைத்தது அவள் சொன்ன சொல்லில் சூடு பறக்க. பெண்ணாகப்பட்டவள் சிரிபபதற்குச் சில இலக்கணங்கள் இருக்கிறதென்றும் எந்தெந்த நேரத்தில் யார் யார் முன் எந்தெந்த விதத்தில் சிரிக்கலாம் என்று வாழ்நாள் முழுக்க வகுப்பெடுக்கிறார்க ளா ம் வயசுக்கு வந்த பெண்களின் அம்மாக்கள் முக்கியமாய் அப்பாக்களின் அறிவுரைகளின் பேரில். ஆதித்தாத்தா கோமணத்தில் முடிந்துவைத்த முள்ளுச்செடிகள் மண்டிக்காடாகி இருக்கும் மனப் பிரதேசம் முழுக்க. நா வே அருள்