இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பெயர் தெரியாத கவிஞர்களின் பிரபலமான கவிதைகள் **************************** அப்பட்டமாக உண்மைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் சமூகத்திற்குத் தெரிவதில்லை.   அப்படி எழுதியவர்கள் பேருக்காக எழுதியவர்கள் அல்லர்.   அதனால்தான் எழுதியவர் பெயர் இல்லாமல் உலவி வருகிற கவிதைகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. பெயர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிற பிற கவிஞர்களால் எழுத முடியாத கவிதைகளை பெயர் பற்றிய பிரக்ஞை இல்லாத கவிஞர்கள்தான் எழுதுகிறார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.   ஏதோ ஒரு வகையில் அவை உக்கிரமான உண்மைகளைச் சுமந்து வருகின்றன.   \\யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.// இந்தக் கவிதை பேசும் உண்மை மகத்தானது அல்லவா?   இந்திய விடுதலைப் போரில் தன் இன்னுயிர் தந்தவர் குதிராம் போஸ்.   இவர் ஆங்கிலேய ஆட்சியால் 1905 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.   இது பற்றிய ஒரு பிரபலமான கவிதை ஒன்றினை எல்லோரும் அறிவார்கள். பத்து மாதங்கள் பத்து நாள்கள் நகரட்டும் நான்