தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து...
நேற்றைய தொடர்ச்சியாக....
2
இஸ்ரேல் அரசின் நீள்சதி நெருப்புச் சட்டியில்
பொசுங்கி விழுந்த படி...பாலஸ்தீனப் புறாக்கள்
பாலஸ்தீன எலும்புக்கூட்டின் மேல்
பாதி ஒட்டி பாதி சரிந்த கழுத்தின்
முள்ளிவாய்க்கால் முகம்போல்
கனவுகள் உருக்குலைந்த "காஸா "
எங்கெங்கும்
எகிறிக் குதிக்கும் எறிகணைத் தவளைகள்
உடல்கடல்களின் உயிர் ஆவி மொண்டு
உயரே எழும்பும் புகை முகில்கள்
உறுப்பு சிதைந்த உடல்கள்
உயிர் பிரிகிற ஓசைகள்
இறக்கைகள் பொருத்தி அசையும் மலையாக
இஸ்ரேல் கழுகு
இனியும் பிய்த்துத் தின்பதற்கு
தசைத் துணுக்கற்ற கோழிக்குஞ்சாய்...
பாலஸ்தீனம்
இஸ்ரேல் அரசு இதுவரை செய்தவை...
பழைய கல்வாரியில் ஆணி அறைந்த
புதிய இயேசு
முகமது நபிக்கு சிலுவை
மனிதாபிமானச் சட்டங்கள் உடைத்து
மண்டையோடுகள்
சர்வதேசத் தீர்மானங்களை அறுத்துத் தைத்த
ராணுவச் சப்பாத்து
காற்றில் ஏறும் நம் கவிதைக் குதிரைகள்
காஸாவில் இறங்கட்டும்
கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும்
கழற்றி எறிவோம்
லஜ்ஜை கொள்வோம்
லாயம் புறக்கணிப்போம்
நம் கனைத்தலே ஆயுதச் சீற்றம்
நம் குளம்பொலிகளே பாலஸ்தீன தேசியகீதம்
சவாரி முடியும்வரை
கொள்ளு தின்னோம்
குடிநீர் கொள்ளோம்
ஒன்று மட்டும் உறுதி...
பாலஸ்தீனியச் சகோதரனுக்காகப்
பரிந்தெழுதும் ஒவ்வொரு கவிதையும்
குரானாகிவிடுகிறது!...
....தொடரும்
நேற்றைய தொடர்ச்சியாக....
2
இஸ்ரேல் அரசின் நீள்சதி நெருப்புச் சட்டியில்
பொசுங்கி விழுந்த படி...பாலஸ்தீனப் புறாக்கள்
பாலஸ்தீன எலும்புக்கூட்டின் மேல்
பாதி ஒட்டி பாதி சரிந்த கழுத்தின்
முள்ளிவாய்க்கால் முகம்போல்
கனவுகள் உருக்குலைந்த "காஸா "
எங்கெங்கும்
எகிறிக் குதிக்கும் எறிகணைத் தவளைகள்
உடல்கடல்களின் உயிர் ஆவி மொண்டு
உயரே எழும்பும் புகை முகில்கள்
உறுப்பு சிதைந்த உடல்கள்
உயிர் பிரிகிற ஓசைகள்
இறக்கைகள் பொருத்தி அசையும் மலையாக
இஸ்ரேல் கழுகு
இனியும் பிய்த்துத் தின்பதற்கு
தசைத் துணுக்கற்ற கோழிக்குஞ்சாய்...
பாலஸ்தீனம்
இஸ்ரேல் அரசு இதுவரை செய்தவை...
பழைய கல்வாரியில் ஆணி அறைந்த
புதிய இயேசு
முகமது நபிக்கு சிலுவை
மனிதாபிமானச் சட்டங்கள் உடைத்து
மண்டையோடுகள்
சர்வதேசத் தீர்மானங்களை அறுத்துத் தைத்த
ராணுவச் சப்பாத்து
காற்றில் ஏறும் நம் கவிதைக் குதிரைகள்
காஸாவில் இறங்கட்டும்
கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும்
கழற்றி எறிவோம்
லஜ்ஜை கொள்வோம்
லாயம் புறக்கணிப்போம்
நம் கனைத்தலே ஆயுதச் சீற்றம்
நம் குளம்பொலிகளே பாலஸ்தீன தேசியகீதம்
சவாரி முடியும்வரை
கொள்ளு தின்னோம்
குடிநீர் கொள்ளோம்
ஒன்று மட்டும் உறுதி...
பாலஸ்தீனியச் சகோதரனுக்காகப்
பரிந்தெழுதும் ஒவ்வொரு கவிதையும்
குரானாகிவிடுகிறது!...
....தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக