இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  கவியோவியத் தொடர் ************************ யுத்த கீதங்கள் 14 / நா . வே . அருள் நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள்   கரடு முரடானதும் முட்டாள்தனமானதும் , மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம் .   அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்   கூசும் பொய்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காகவே உடல் முழுதும் வளரும் உதடுகள்   உண்மை எலும்பும் தோலுமாகப் பரிதாபத்துடன் காட்சியளிக்கிறது .   பொய் அவ்வளவு சக்தி வாய்ந்தது அதைப் பிரயோகிக்கையில் பெருந்திரள் கூட்டம் பின்வாங்கி ஒரு பூனையைப் போல ஒடுங்கிப் போகும் .   மிகச் சமீபகமாகத்தான் விவசாயிகள் மீது பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் .   விவசாயிகளோ தங்கள் கழுத்தை அழுத்திய நுகத்தடியை பூட்டாங்கயிறு துணித்து ஆகாயம் முட்டி ஆவேசத்துடன் நிற்கிறார்கள்   இப்போதுதான் முதன் முதலாய் செங்கோல் நடுங்க
படம்
  அவமானங்களின் அடிவாரம் ******************************************* உனது காயங்களுக்குக் கீழே ஒரு காயம்பட்ட இதயம் காக்கையால் கொத்தப்படும் சுண்டெலியைப்போலக் கொத்தப்படுகிறது.   அது அலகு மனிதர்களின் மாமிச தாகம்.   மரித்துப் போனவர்களின் சொற்களுக்கு மலர் வளையம் போதும்.   உனது அட்சயப் பாத்திரத்திலிருக்கும் வார்த்தைகள் காயத்தைக் கொத்தும் காக்கைகளை விரட்டிச் சிதறுகின்றன.   உனது நீரூற்று ஒரு மலைப் பிரதேசத்தின் தாகம் தணிக்கக் கூடிய குளிர்ந்த சுனை.   உயிரை ஆசுவாசப்படுத்தும் இரண்டு கை நீர் உன்னிடமிருக்கிறது அதை ஒருபோதும வறளவிடாதே.   --நா.வே.அருள்
படம்
  எல்லை காந்திகள் *********************** அவமானப்படுத்தப்பட்ட விவசாயி எல்லையின் வாசலில் உடையணிந்த எலும்புக் கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான் உலகத்திற்காகத் துடிக்கும் வெளிறிப் போன இதயம். அவனது பஞ்சடைந்த கண்களின் இமைகள் பசியின் சிறகுகள் அதிகாரம் அவனை கோலிக் குண்டு ஆட கூப்பிடுகிறது. அவனது வயல் தாளில் எழுதப்பட்டிருக்கும் மண்புழுக்களின் கவிதைகளை வாசிக்க மறுக்கிறார்கள். மரங்களின் காவியமாகப் பரந்து விரிந்த அவர்களின் கானகத்தில் அலட்சியத் தீ வைக்கிறார்கள். உண்மையில் விவசாயி ஒரு விஸ்வரூபன் அவன் விரல்நுனியில் சுழல்கிறது உலக உருண்டை அவனுக்கு முன் உலகில் உள்ள அனைவரும் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறார்கள்!!! கவிதை – நா.வே.அருள் ஓவியம் – கார்த்திகேயன்
  கவிதைச் சந்நதம் 18 / நா.வே.அருள் கடவுளுடன் உரையாடல் கவிதை - குமரன் விஜி   கவிஞன் தன் மனதுக்குள் விசாரணை நடத்திக் கொண்டேயிருக்கிறான்.  அது சுயவிசாரணை.  அது ஒரு சம்பிரதாயமான சுய பரிசீலனை அல்ல.  உள்ளத்தை ஊடுருவி அதிலிருந்து கழிவு கசடுகளையெல்லாம் தூர் வாரும் துர்லபமான – தூய – பரிசீலனை.    அவனது விசாரணை மனதின் புலன் விசாரணை. மன மயக்கங்களுடன் விளையாடும் ஒரு வித மழலையின் உன்னதமான விளையாட்டு விசாரணை.  அது கூட இருப்பவர்களுக்கெல்லாம் கொடுக்கிற கூட்டாஞ்சோறு மாதிரி!   பூனையின் கடவுள் பூனையாய்த்தான் இருக்குமென்று என் நட்புக் கவிஞன் கோசின்ரா எழுதுவான்.  குமரன் விஜியும் கடவுளை வைத்து ஒரு விளையாட்டு நிகழ்த்துகிறான்.  கடவுளை நண்பனாக்கிவிடுவது ரொம்பவும் சௌகரியம்.  இவன் தனக்கென ஒரு கடவுளை சிருஷ்டித்துக் கொள்கிறான்.  அவனவனுக்கு ஏற்றபடி ஒரு பொம்மைதானே கடவுள்?  கடவுளைப் படைப்பது மார்க்ஸ் பெருமூச்சு விடும் மகத்தான கலை அல்லவா?   நட்பு பாதி காதல் பாதி கலந்த தட்ப வெப்ப நிலையில் ஒரு கடவுளையே செய்துவிடுகிறான் கவிஞன். அவனவன் தேவைக்கு அவனவன் ஒரு கடவுளை வைத்திருப்பதை அநாயசமாக ஒற்றை வரியில் ஒரு கவிதை மின்னலைக் காட்
படம்
    கவிதை ஒரு கைவல்லியம் ********************************* 1 கவிதையென்பது ஒரு நாடோடித் தவம். கவிதையை வீட்டுக் காவலில் வைக்க முடியாது.   சிறையாகுமெனில் கவிதை வீட்டையே நிராகரித்து வெளியேறிவிடும்.   வழக்கமான வாசல் வழிதான் என்றில்லை அது காற்றைப்போல சாளரத்தின் வழியாகவும் நுழையும் நூதனம்   கவிதையென்பது கதவுகளைக் கூட வெறுக்கும் கட்டற்ற நுழைவு.   கவிதைக்குப் பிடித்தது தென்னங்கீற்றில் கூடு கட்டும் நிலவின் சாளரத் தொங்கல் மட்டுமல்ல சாக்கடையில் விழுந்து கிடக்கும் நிலவின் பின்வாசல் பிம்பமும்தான்.   எப்போதும் திறந்திருக்கும் வீட்டைத்தான் அது விரும்புகிறது.   பூட்டியிருக்கும் வீட்டினைத் திறந்துவிடுகிற மந்திரக் கைகள் கவிதைக்கு உண்டு.           2 கவிதையின் இன்னொரு பிரத்தியேகம் அசாத்தியமானது.   கவிதை தனக்குள் ஒரு வாசனை உலகத்தை வைத்திருக்கிறது.   அது வார்த்தைகளில் ஓவியத்தில் காகிதப் பூக்களிலென வாசத்தை நுகரவைத்துவிடுகிறது.   கண்களுக்குள் இருக்கிற நாசியைக் கூர்கொள்ளவைக்கிறது அது நிலவுக்குள் க
படம்
  சொந்த சகோதரர் *************************** நா,வே.அருள் எத்தனையாவது முறை என்று தெரியவில்லை அவர்கள் இன்னுமொரு முறை அம்பேத்கரைக் கொன்றுவிட்டார்கள்.   ஒவ்வொரு முறையும் துள்ளத் துடிக்கத்தான் கொல்கிறார்கள்.   ஆனால் எவ்வளவு கொடூரமான கொலையையும் அவ்வளவு மிருதுவான வார்த்தைகளால் வருணிக்கத் தெரிந்தவர்கள்.   எத்துணைதான் அநீதியாக இருந்தாலும் நியாயங் கற்பித்துவிடுகிற ஆயுதத் தராசு முள் அவர்களிடமிருக்கிறது.   இத்தனைக்கும் கொன்றவர்களின் தாய்மார்கள் அம்பேத்கரின் சகோதரிகள்தாம்.   சகோதரிகளுக்கும் சேர்த்துத்தான் அவர் சாத்தான்களிடமிருந்து சட்டப் புத்தகத்தைப் பிடுங்கிவந்தார்.   அந்தச் சட்டப் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்துத்தான் இந்த முறையும் அம்பேத்கரை எரித்திருக்கிறார்கள்.   கொன்றவனும் கொல்லப்பட்டவனும் ஒரே தோட்டத்து இரண்டு பூக்கள்தாம். ஒரு மலரைப் பூஜையறைக்கும் ஒரு மலரை தகனமேடைக்கும் அனுப்பியவன் எதுவுமே நடக்காதது போல இளைப்பாறியபடியே தொலைவில் இருக்கிறத் தோட்டக்காரன்!   09.04.2021 இரவு 9 மணி