இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
நாமே எதிரிகள்! அழுது புலம்பவும் அந்நிய மொழி புன்னகை பூக்க புறத்தியான் பற்கள் சிரசுக்குள் செருகும் சிறைக்கம்பிகள் குத்தி முனகும் மூளை. பச்சைக் கிளியாகும் பச்சைத் தமிழன். நாக்கு இழந்தவர்கள் நாடு ஒவ்வொருத்தரும் ஊமை! தாள முடியவில்லை தமிழ்ச் சோகம் தத்தளிக்கிறது தமிழ்த் தேசம்! அன்னிய மொழி இராணுவ ஆயுதப் பொழிவுகள்! பள்ளி கல்லூரிகளில் தமிழ் பதுங்கு குழிகளில்! மொழியை அழிக்க... மூலதனப் புயல் சனாதன சுனாமி உலகமய ஊழி! * வஞ்சிக்கப்பட்ட வரலாறு ... தமிழால் பிழைப்பு நடத்துவோரால் தமிழ் பிழைத்ததென்னும் தகவல் பிழை! தானைத் தலைவர்களின் தமிழ் நேசம் சந்தேகத்திற்கு உரியது... உணர்ச்சிக் களிமண்ணில் உருவம் கொடுத்து கடைசியில் கரைப்பது கடலில்.... தமிழுக்கு ஆயிரம் மாலைகளுடன் அலங்காரம் படுக்க...பாடை! * வியாபாரம் ஆனது விளைநிலம் கொள்ளைக் கொள்முதல் லஜ்ஜையற்ற லாபம் ஆட்சேபமில்லை... அயல்மொழிகள் பள்ளிகள் தோறும் பாடங்கள் ஆகட்டும் வீணை ராகத்திலென்ன விகற்பம்? பாட்டாளிகளுக்குப்  பாஷாணமே... பரிபாஷை ஆகாத பாஷை! தமிழ்வழிக் கல்வியே தாரக மந்திரம் ! ஒவ்வொரு தமிழனின் உயரிய
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாம்பரம் கிளை நடத்திய "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையின் இறுதிப்பகுதி... 6 ஆண்டவன் செயலென்று அநீதியை அனுமதித்தோம் அவதாரம் காக்குமென்று ஆனவரை காத்திருந்தோம் கலி முத்திப் போச்சென்று கதை கதையாய்ப் பேசிக்கொண்டோம் எது நடந்ததோ அது நன்றாக நடந்ததாய் எதிர் செயல்களையும் ஏற்றுக்கொள்ளப்பழக்கப்பட்டோம்! மனிதனே தெய்வமென்னும் மகத்தான தத்துவத்தைப் புனிதர்கள் சொல்லுகையில் புளகித்துக் கேட்டிருந்தோம் புரியாமல் விழித்திருந்தோம் இனியேனும் -- செயல்படுகிற சிந்தனை வேண்டும் சிவந்து போகிற கண்கள் வேண்டும் முள்ளிவாய்க்கால் முதல் பாலஸ்தீனம் வரை ஒற்றை உயிருக்கும் உலகம் பதில் சொல்ல... ஐ.நா. சபை நமக்கு அறிக்கை வாசிக்க... ஒவ்வொரு உலகக் குடிமகனும் உரக்கக் குரல் கொடுப்போம் காற்றில் ஏறும் நம் கவிதைக்குதிரைகள் காஸாவில் இறங்கட்டும்... கண்ணுறக்கமற்றுச் செய்வோம் கவிதைச் சவாரி கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும் கழற்றி எறிவோம் கொள்ளு தின்னோம் குடிநீர் கொள்ளோம் லஜ்ஜை கொள்வோம் லாயம் பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  தாம்பரம் கிளையில் பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்க நிகழ்வில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து.... 5 தவித்தழுகிறது தர்மம் தறுதலையாய் அலைகிறது அதர்மம்! மௌனத்தில் தலை கவிழும் மனம்! சிதைந்து போன உடல்கள் பார்த்து கதறவில்லையா கல் இமை போர்த்திய உன் கண்கள்? மூக்குக்கும் மார்புக்கும் இடையில் நடக்கிற ஒரு முழச் சுவாசம் உனது உயிர் வாழ்தலுக்கு மட்டும்தானா? உபயோகிக்காத உறுப்பு உடலுக்குள் எதற்கு? உனது மார்புக்  கூட்டுக்குள்ளிருந்து பயன்படுத்தாத பாதி பிளந்த பீட்ரூட் பெருந்துண்டைப் பாதையில் வீசு! துக்கத்தில் நீ போட்டிருக்கும் முள்ளி வாய்க்கால் முக்காட்டை மெல்ல அகற்று. தெரிகிறதா? தடித்துப் பருத்த இலங்கையின் செங்கோலில் தடவப் பட்டிருக்கும் தமிழனின் இறைச்சி! தெரிகிறதா? இஸ்ரேலிய அரச விருந்து மண்டபத்தில் பரிமாறப்பட்டிருக்கும் பாலஸ்தீனியனின் பச்சை மாமிசம்! உயிரை ஊடுருவும் உலகமய அரக்கனின்   வெவ்வேறு முகங்கள்!                                   --தொடரும்....  
தமுகச தென்சென்னை தாம்பரம் கிளை நடத்திய பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து 4  நாம் இழப்பதற்கு ஏதும் இல்லாததைப்போலவே  பெறுவதற்கும் ஒன்றும் இல்லாமலாக்குவதற்கு மூல வியூகம் செய்தபடி  மூலதனம் எவற்றைக் கேட்கிறோம் நாம்? நாம் சிந்துவதற்குச் சில கண்ணீர்த்துளிகள் நாம் எழுதுவதற்குச் சில கவிதைகள் நாம் எந்துவதற்குச் சில மெழுகுவத்திகள் நாம் பாடுவதற்குச் சில தேசிய கீதங்கள் நாம் திரிவதற்குச் சில வனங்கள் நாம் புலம்புவதற்குச் சில ஒப்பாரிகள் நாம் புழங்குவதற்கு ஒரு துண்டு நிலம் நாம் சுவாசிப்பதற்குச் சில உயிர் மூச்சுகள் நாம் சிறகடிக்க ஒரு முழ வானம் நாம் இறுதியில் வீழ்ந்து கிடக்க சொந்தமாய் ஒரு கல்லறை! பாசாங்கானது அல்ல நம் அழுகை பஞ்சுமிட்டாய் அல்ல நமது வேண்டுதல் எந்த பொம்மையை யாசித்தும் அடம் பிடிக்கவில்லை நம் அழுகுரல்! முட்டிக் குடிக்க ஒரு முலைக் காம்பு பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பதிப்பதற்குப் பாதத்தடம்!                                       ...தொடரும் ...
தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து... நேற்றைய தொடர்ச்சியாக.... 3 அந்தக் கனவுக் கொள்ளையனிடம்  கண்ணிழந்தவர்கள் ஏராளம்  அவனது தொழில் களவு. உப தொழில் உளவு  கைத்தொழில் - மூளை மழுங்கும் மூலதன வியூகம்! பொழுதுபோக்கு- நாடுகள் தோறும் நடத்தும் நாற்காலி நடனம். வேதம் ஓதும் சாத்தான் விலாசம்: வெள்ளை மாளிகை இது அமெரிக்க முலாம் பூசிய ஆயுதப்போர்! அமெரிக்காவின் ஆடு புலி ஆட்டம் மூலதனத்தின் சதுரங்கம் பணக் கொள்ளையரின் பாம்பு ஏணி பரமபதம் இனிப்பு பூசிய காரம்...ஏகாதிபத்தியம்! பூப்போல் முகமென்று புனிதம் பேசும் ஆனால்... முள்ளிவாய்க்காலில் முள் மேயும் காஸாவில் கல் மேயும் ஈராக்கில் ரத்தம் லிபியாவில் யுத்தம் சிரியா, ஈரானுக்குச் சித்தம்! நம் அரசுகளுக்கு ஆரேனும் சொல்வீரா?... அமெரிக்காவின் ஆலிங்கனத்தில் பிறப்புறுப்பு காணாமல் போவதாகப் பேச்சடிபடுகிறது! இந்திய வானிலை அறிக்கையோ இன்னும் மோசம்! இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை எனத் தீர்மானமாய்
தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து... நேற்றைய தொடர்ச்சியாக.... 2 இஸ்ரேல் அரசின் நீள்சதி நெருப்புச் சட்டியில் பொசுங்கி விழுந்த படி...பாலஸ்தீனப் புறாக்கள் பாலஸ்தீன எலும்புக்கூட்டின் மேல் பாதி ஒட்டி பாதி சரிந்த கழுத்தின் முள்ளிவாய்க்கால் முகம்போல் கனவுகள் உருக்குலைந்த "காஸா " எங்கெங்கும் எகிறிக் குதிக்கும் எறிகணைத் தவளைகள் உடல்கடல்களின் உயிர் ஆவி மொண்டு உயரே எழும்பும் புகை முகில்கள் உறுப்பு சிதைந்த உடல்கள் உயிர் பிரிகிற ஓசைகள் இறக்கைகள் பொருத்தி அசையும்  மலையாக இஸ்ரேல் கழுகு இனியும் பிய்த்துத் தின்பதற்கு தசைத் துணுக்கற்ற  கோழிக்குஞ்சாய்... பாலஸ்தீனம் இஸ்ரேல் அரசு இதுவரை செய்தவை... பழைய கல்வாரியில் ஆணி அறைந்த புதிய இயேசு முகமது நபிக்கு சிலுவை மனிதாபிமானச்  சட்டங்கள் உடைத்து மண்டையோடுகள் சர்வதேசத் தீர்மானங்களை அறுத்துத் தைத்த ராணுவச் சப்பாத்து காற்றில் ஏறும் நம் கவிதைக் குதிரைகள
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தாம்பரம் கிளையில் 2/8/2014 சனிக்கிழமை பிற்பகல் பீரங்கிகளுக்கு  எதிராக தூரிகைகள் என்கிற நிகழ்வு தொடங்க ஓவியர்கள்  சந்ரு, நடராஜன், கலைச்செல்வன், வெங்கடேசன், ரபீக், சிவப்பிரகாசம் ..... என ஏராளமான ஓவியர்கள் வரையத் தொடங்குகிறார்கள்...கண்கள் செருக பாலஸ்தீனத்து காசாவில் காயம்பட்ட உடலாக உணர்கிறோம்.  உறுப்புகள் சிதைந்த உடல்களில் ஒன்றாக நம் கண் முன்னே குழந்தையின் விரல் வந்து விழுகிறது...உணர்வுகள் கனத்துப்போக... கவியரங்கம் தொடங்கும் நேரம்...கவியரங்கத்தில் கலந்து கொள்ள கிருஷாங்கினி, ஜோசப் ராஜா, தயானி தாயுமானவன், பாரிவள்ளல், சிவப்பிரகாசம், கங்கை அரசு, தியாகராஜன், அருள்தம்பி ஆகியோர் வந்திருந்தனர். தமுகச தெருவில் தொடர்ந்து கார், பைக் சப்தங்கள் என போய்க்கொண்டே இருந்தாலும் விடாப்பிடியாக கவிதையை உள்வாங்கிய படி அமர்ந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். நான் வாசித்த தலைமைக் கவிதையிலிருந்து... பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்... பீரங்கிகள் உலோகங்களின் கூட்டுறவில் உருவாக்கப்பட்டவை தூரிகைகள் உயிர்ப்பின் குறியீடாகவும் உணர்ச்சியின் வெளியீட