இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஓர் எழுத்தாளனை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?   அந்த எழுத்தாளன் எப்படிப் பட்டவனாக இருப்பதால் கொண்டாடுகிறோம்?   அவனிடம் நமது கனவுகளை ஏற்றி வைத்துவிடுகிறோம். நமது துயரங்களை அவன் சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறான். அவன் நாம் நடந்துசெல்லும் வழித்தடத்தை – ஒற்றையடிப்பாதையை – உருவாக்கித் தருகிறான்.   வழியில் நிழல் தரும் மரங்களை வளர்த்துச் சுனைகள் எங்கிருக்கின்றன என்று சொல்லித் தருகிறான். தோழர் எஸ்.ஏ.பெருமாளின் வார்த்தைகளில் எழுத்தாளர் சமூகத்தின் பெரிய வாத்தியார்.   அவருக்குச் சொல்லிக் கொடுக்க இந்த உலகில் ஏராளம் இருக்கின்றன.   சரியான ஆசிரியர் யார் என்று கண்டுபிடிப்பதில் நமக்குத்தான் இன்று ஏராளமான குழப்பங்கள்.   குழப்பங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் மீறி மக்கு மாணவர்களையும் ஆசிரியர் சரியாகவே அடையாளம் கண்டுகொள்வார்.   அப்படிப்பட்ட ஒருவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன். காயங்கள் எப்படி ஏற்பட்டதென்பதையும் அறியாமல் கசிந்துகொண்டிருக்கும் குருதியைத் துடைத்துக்கொண்டே இருக்கும் நோயாளிகளுக்கு எழுத்தாளன்தான் காயங்களின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து காயங்களிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற சூட்