இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

or enthira idayanukku

ஓர் எந்திர இதயனுக்கு அன்புள்ள எந்திராதிபதி கலாநிதி மாறன் அவர்களுக்கு ஒரு சின்னத்தயாரிப்பாளர் சிக்கமாட்டாரா என்று காலம் பூராவும் ஒன்லைன்களைச் சொன்னபடி காத்துக்கொண்டிருக்கும் ஓர் உதவி இயக்குநர் எழுதிக்கொள்ளும் மடல் . எந்திரனின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த கடிதத்தை வாசிக்க நேரம் கிடைக்காமல் போகலாம் . மிகப்பெரிய கலைச்சேவை செய்த்தாகத் தமிழகத்தைப் (பொய்) பேச வைத்திருக்கும் உங்களுக்கு இந்தக்கடிதம் சங்கடத்தைக் கொடுக்கலாம். ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாள ர்களின் வாசல்களில் மீனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் கொக்குபோல கோடம்பாக்கத்து பிரம்மச்சாரி விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே ஏதாவது துரிதஉணவகம் ஒன்றில் ஒன்றும் பாதியுமாக வயிற்றை ரொப்பிக்கொண்டு ஒன்பது வருஷங்களாகக் குடியிருக்கும் ஒரு உதவி இயக்குநருக்கு உங்களிடம் சொல்ல ஏராளம் இருக்கிறது . ஆடியோ கேசட் வெளியீடு மலேசியாவில் நடந்தபோதே கோடிக்கணக்கில் பணம் பார்த்துவிட்டதாகத் தகவல் . இதுவரையில் வேறுயாரும் டிரெய்லருக்கு டிக்கட் போட்டு பணம் வசூல் பண்ணதாகத் தெரியவில்லை . எல்லாவற்று
அப்துல்லா ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்? பட்டாசு கொளுத்தப்போவதில்லை பட்சணம் சுவைக்கப்போவதில்லை இந்த வருடம் தீபாவளி கொண்டாடப்போவதில்லை என் சபதத்தைக் கேட்டு வீட்டிலிருப்பவர்கள் சிரித்துவிட்டார்கள் பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா? “பாம்புப்புற்றுக்குப் பால்வார்க்கும் பரிதாப ஜீவன்களே,,,பங்கேற்காமல் பழியேற்கும் பாவப்பட்டவர்களே”,,, என் நீண்ட நேர நெருப்பின்மேல் நீர் தெளித்தார்கள்- திகைப்பூண்டு மிதிச்சிட்டீங்களா? நரகாசூரன் நல்லவனா? கெட்டவனா? நரகாசூரனுக்கும் நாக்குக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எது பிடிக்கும் ஊமைஜனங்களே? தீனித்தினவா? சடங்கா? சம்பிரதாயமா? ஆச்சாரமா? அனுஷ்டானமா? திதியா? தின்பண்டமா? என் எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே எதிர்க்கேள்வி என்ன ஆச்சு இந்த ஆளுக்கு? ஒன்றுமே ஆகலையா? ஒரு குளிர்கால டிசம்பரில் குற்றங்களின் ரதயாத்திரை மனிதஉறவுகளைக்கிழித்துக் குருதி சொட்டலையா? பிளந்த பூமிக்குள்ளே கடவுள்கள் எல்லாம் கால்இடறி விழலையா? அயோத்தியில் அல்லாவின் ஒற்றைமுலை அறுத்தெறியப்படலையா?
கடிதம் கொள்கலன் எண் 610 உலகிலேயே மிக வலிமைவாய்ந்த குற்றவாளி வாரன் ஆண்டர்சனுக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு டிசம்பர் இரவில் உயிரிழப்புக்கும், தலைமுறை ஊனத்திற்கும் உயிர்ச்சிதைவு நோய்களுக்கும் ஆளான போபால் நகரத்திலிருந்து கையாலாகாதவன் எழுதிக்கொள்ளும் கடிதம். ஞாபகம் இருக்கலாம். அமெரிக்க அரசின் காங்கிரசு, கார் தயாரிக்கும் டொயாட்டா நிறுவன்த்தின் உயர்மட்ட நிர்வாகிகளையும், நிறுவன முதலாளியையும் குற்றம் சாற்றிய கதை. விவரம் இதுதான்…இரு சக்கர வாகனங்களில் குறைபாடு இருந்ததாம். அதனால் அமெரிக்க மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால்…. அதற்காகத்தான் டொயாட்டா முதலாளியையும், அலுவலர்களையும் காங்சிரசில் வைத்து சரமாரியாக விசாரித்து வைதார்கள். அமெரிக்கர்களின் தேசப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா ஆண்டர்சன்? இதுவும் ஞாபகம் இருக்கலாம். இருபத்தைண்டாண்டுகளுக்குப் பிறகு 2010 சூன் 7 ஆம் நாள் வெளியான போபால் நச்சுவாயுவைவிட ஆபத்து மிகுந்ததும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உயிரை உலுக்குவதுமான தீர்ப்பு. தன்னையும் மீறிய தருண்ம் ஒன்றில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது தாமதமான, புறக்கணி

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்

"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். " எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது. அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம். அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி. எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரி
நீதி சாத்தான்! வயிறு எரிய மனசு அழ கண்ணில் கண்ணீர் கவிதையில் ரத்தம் கூடவே இருந்து குடும்பம் நடத்தி துரத்தித் துரத்திக் காதலித்ததுணை-ஐ ஆத்திரத்தில் அம்மி தூக்கிச் சாகடித்தவருக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ நச்சுக் காற்றை வியாபாரம் செய்தவனுக்கு நன்றிக்கடனாக மூச்சுக்காற்று குற்றுயிரும் குலைவுயிருமாய் எழுந்த ஓலங்கள் இன்னும் செவிகளில்... நோய் கொண்ட பலூன்களாக நுரையீரல்கள் கண்களில் பிரளய மின்னல்கள் கொத்துக்கொத்தாய் நோய்க்கிருமிகள் குடிகொள்ள இழவின் கனம் தாங்காமல் இற்று விழுந்த இதயங்கள் எந்த உறுப்புமே இன்றி வெற்றுக் கார்ர்ரால் நிரம்பிய சிசுவை எத்தனை யுகங்கள் ஈனவேண்டும் எம் இந்தியத்தாய்கள்? அன்றைய இரவு இன்னும் விடியாமல்... அறுந்த உயிர்களைத் தொங்கவிட இந்திய வரைபடக் கோடுகளில் இடமில்லை. வோவொரு இந்தியனின் அடிவயிற்றில் புரளும் அக்கினி கேட்கிறது.... ஆண்டர்சன் எங்கே? வெள்ளை மாளிகையின் நிழலில் ஒளிந்துகொண்ட கருப்பு அனகோண்டா வாக ஆண்டர்சன்! திருட்டு விமானம் ஏறிச்சென்ற நீதி திரும்பவே இல்லையா? இருபதாயிரம் சடலங்களில் ஏதேனும் ஒன்றிலாவது எழுதிவையுங்கள்... நீதி தேவதையா? நீதி சாத்தானா? --------------------

கவிதை

அப்பாக்களின் காலம் அடிக்கடிச் சிரிக்கும் பக்கத்து வீட்டுப் பெண் அடக்கி வைக்கப் பழகுகிறாளாம் சிரிப்பை. சிரிப்பு மனசோடும் உதட்டோடும் சம்பந்தப்பட்டதென ஊறிக்கிடந்த எனக்குள் அதிர்ச்சி உறைத்தது அவள் சொன்ன சொல்லில் சூடு பறக்க. பெண்ணாகப்பட்டவள் சிரிபபதற்குச் சில இலக்கணங்கள் இருக்கிறதென்றும் எந்தெந்த நேரத்தில் யார் யார் முன் எந்தெந்த விதத்தில் சிரிக்கலாம் என்று வாழ்நாள் முழுக்க வகுப்பெடுக்கிறார்க ளா ம் வயசுக்கு வந்த பெண்களின் அம்மாக்கள் முக்கியமாய் அப்பாக்களின் அறிவுரைகளின் பேரில். ஆதித்தாத்தா கோமணத்தில் முடிந்துவைத்த முள்ளுச்செடிகள் மண்டிக்காடாகி இருக்கும் மனப் பிரதேசம் முழுக்க. நா வே அருள்

உலகம்

கம்பனும் புதுமைப்பித்தனும் உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே சும்மா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. உடனே ஆரம்பிச்சாச்சு. எனக்கு ப்ளாக் சரிவருமா என்று கூட யோசிக்கவே இல்லை. யோசிக்காமலே செய்யும் பல காரியங்களில் இதுவும் ஒன்று. யோசித்தவர்களுக்கெல் லாம் என்ன பலன் கிடைத்துவிடுகிறது? மேலும் உலகிலேயே ஆகப்பெரும் சோம்பேறி நான் என்பது என் அசைக்கமுடியாத கருத்து. திடீர் என்று திட்டம் இடபடாத திட்டத்தை நிறைவேற்றியாச்சு. சரி. ப்ளாக்=கு என்ன பெயர் வைப்பது? உடனே எனக்கு ஞாபகம் வந்தது உலகம்தான். உலகம் என்ற வார்த்தை கம்பனின் வரிகளை அழைத்துவந்துவிட்டது. கம்பன் நான்காம் வரியில் (அவர்) தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று ஒரு போடு போடுவார். மாதவராஜ் தனது இடுகை தீராதப்பக்கங்களில் கடவுள் பற்றி புதுமைப்பித்தன் கோபாலபுரம் சிறுகதையில் சொன்ன வாசகங்களை நினைத்துக்கொள்கிறேன். "மனிதனாவது கடவுளாவது! சீச்சீ! சுத்த அபத்தம்! இதில் தெய்வம் தன்னை வழிபடவேண்டும் என்று மனிதனை எதிர்பார்க்கிறதே, அதைப் போல முட்டாள்தனம் வேறு