இடுகைகள்

படம்
  கவிதை அலசல் / நா.வே.அருள் ************************************** எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது கவிதை . சோலை மாயவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது? மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை.  மாடுகளுக்குக் கொட்டகைகள்.    மனிதர்களுக்கு வீடுகள்.    மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும்.  மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.   மாடுகள்  தீனியை அசை போடுகின்றன.  மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள்.   மாடுகளுக்கு    மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள்.   மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது.  மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின்  வடு.   மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம்.  மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன.   மனிதர்களுக்கு அதுவுமில்லை. உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான்.  அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு.  வயலோடுதான் வாழ்க்கை.  பயிர் பச்சிலோடுதான் பாசம். பிள்ளைகளின் பெயர்கள் கூட மறந்துவிடும்.  ஆனால் மாடுகளுக்குத் தவிடு வைப்பதை மறப்பதே இல்லை.   அதிகம் நுகர்ந்த
படம்
 #பேசும்  புதிய சக்தி நன்றி.... ஆகஸ்டு இதழில் எனது கட்டுரை. கவிஞர் சிற்பியின் “முகந்து தீராக் கடல்” கவிதைத் தொகுப்பின் நூல் விமர்சனம் காட்டில் யானை; கடலில் திமிங்கலம் ********************************************************** “காலம் பல கண்ட கதவின் கீல்கள் என் முழங்கால்கள்” காலம் முழுவதும் கவிதைப் பயணம் நடத்திய கவிஞர் சிற்பியின் வாழ்விலிருந்து கசியும் வார்த்தைகள். ஆனால், எவ்வளவு காலம்தான் நடந்திருந்தாலும், எத்தனை பயணங்கள் நிகழ்த்தியிருந்தாலும் ஒரு கவிஞனின் கவிதை முட்டிகள் தேய்ந்துவிடுவதில்லை. கவிதையுலகம் வித்தியாசமானது. வயதாக ஆகத்தான் வலிமை கூடும் போலும். ஊன்றுகோல் எழுதுகோலை வெல்ல முடிவதில்லை. மரபில் ஊறிய மாபெரும் கவிஞனுக்கு அன்று புதுக்கவிதை ஒரு புதிய திசைதான். திரும்பிப் பார்க்கையில் திசைகளதிரும் தீர்மானமான பயணங்கள்! கவிதையுலகில் கவிஞர் சிற்பி, ஆயுதம் தாங்கிய போராளி போல கவிதை தாங்கிய இலக்கியத் தீவிரவாதி! இந்த “வானம்பாடி”யின் வாழ்க்கைச் சூட்டில் வார்த்தைகள் தகிக்கின்றன. கலையமைதியின் கர்ப்பத்தில் சிற்பி ஒரு சீற்றம் கொண்ட கவிதைச் சிலை. “சர்ப்பயாக”த்தில் நெளியத் தொடங்கிய கவிதை நாகங்

Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்

Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள் : தொகுப்பு : ஜெயஸ்ரீ பாலாஜி             " சமூகத்தின் நலனுக்காக எழுத்தாலான தேர் இழுக்கப்படுகிறது . அந்த தேரை வேடிக்கை பார்ப்பவன...
படம்
  தலையில்லாத மனிதனைச் சந்தித்ததிலிருந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறேன்.   தலையில்லாமல் அவனது ஒவ்வொரு அசைவும் சாத்தியமானது எப்படி?   அதுவும் நெரிசல் மிகுந்த நகரத்தில் சாலை விபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி?   அவனைப்பார்த்து ஒருவருமே துணுக்குறவில்லையா?   அவனைப் பார்த்ததைவிட அவன் சொன்னதுதான் மேலும் என்னை உலுக்கிவிட்டது.   கண்களே இல்லாத பார்வைகள் சாத்தியமாகிறபோது தலையே இல்லாத மனிதனுக்கு எப்படிச் சாத்தியமில்லை? இன்னும் அவன் சொன்னான் “நீங்கள் கண்ணாடியைப் போய்ப் பாருங்கள்”   “உங்கள் தலை எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும் ஆனால் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.”   “எனது கவலையே வேறு தலையில்லாமல் வாழ்வதற்குப் பழக்கியாக வேண்டும். என்னுடைய குழந்தைகளுக்கு விளையாடத் தர இனி தலையில்லாத பொம்மைகளுக்கு எங்கு போவேன்?” சொன்னவன் இறங்கிப் போய்க்கொண்டேயிருந்தான்.   நான் கண்ணாடியைத் தேட ஆரம்பித்தேன். --நா.வே.அருள் 20.06.2021 காலை 6.00
 என்னைப் பற்றிய தகவல் கட்டுரை Tamilwriters.in இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.  தொகுத்தவர் - திருமதி ஜெயஸ்ரீ பாலாஜி அவர்கள். இணைப்பு முகவரி ---- http://www.tamilwriters.in/2021/06/blog-post_91.html?m=0
படம்
  நூல் விமர்சனம் – நா.வே.அருள் கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான் பின் அட்டைப்படம்.   அட்டை முதல் அட்டை வரை மனசில் ஒட்டிக்கொள்ளும் கவிதை அட்டைகள். இந்தியா விடுதலையாவதற்கு ஒரு மாதம் முன் பிறந்த மகாதேவன்தான் கவிதையில் ஜெயதேவன்! “மீன்காரியின் கை வளையொலியில் ஆதி இசை” கேட்கிற செவிகள்; உதிரும் பழுப்பிலையில் மரத்தைக் காண்கிற கண்கள்; உங்கள் மழையும் எனது மழையும் ஒன்றல்ல என்று உணர்கிற ஞானம் என ஜெயதேவன் கவிதைகள் கடற்கரை மணல்வெளியில் குடை ராட்டினம் போலச் சுற்றிச் சுற்றி வருகின்றன.   குதிரை, சிங்கம், புலி, மீன், பெட்டி என வித விதமான இருக்கைகளில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக உட்கார்ந்திருக்கின்றன.   அனைத்துக் குழ
படம்
  மரணத்திற்கு ஏன் இத்தனை கை கால்கள்? ஆக்டோபஸைப் போல அறைந்து கவ்வுகிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வாய்கள்? ஒவ்வொருவராகப் புசித்துக் கொண்டேயிருக்கிறதே….   மரணத்திற்கு ஏன் இத்தனை வேகம்? குதிரைப் படையில் சவாரி செய்கிறதே   மரணத்திற்கு ஏன் இத்தனை ஆவேசம்? பசியடங்காமல் புவியைப் புசிக்கிறதே   அவசர அவசரமாகக் காரியமாற்ற ஆணை இடுவதாக எண்ணித்தான் ஒரு தோழன் ஒவ்வொரு ஆண்டும் கலைஇரவு நடத்திக் கலாச்சாரம் உயர்த்தினான்.   அதற்குள் செய்தாக வேண்டுமென்றுதான் ஒரு தோழன் ஆழமான அரசியலை அள்ளியள்ளி ஊட்டினான்.   நேரமிருக்காது என்று எண்ணித்தான் ஒரு தோழி கவிதைகளில் தோழமையைக் கட்டி எழுப்பினாள்.   ஒரு பொன்னுலகத்திற்கான பாதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தார்கள்.   மரணமே உன்னை நானறிவேன்…. உன்னால் முடிந்ததெல்லாம் உயர்ந்த மனிதர்களையும் செயலற்றுப் போகச் செய்வதுதான். ஏற்கெனவே அவர்கள் செய்து முடித்த செயல்களை உன்னால் நெருங்கவே முடியாது உன்னால் நெருங்கவே முடியாது.   நா.வே.அருள் 03.05.2021