இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
செல்போன் திருடு போனதாக நண்பர் அய்யப்ப மாதவனின் பதிவினை முகநூலி ல் காண நேர்ந்தது...அவருடைய இழப்பு என்னுடையதாகவும்...மனசு சங்கடப்பட்டது...திருடன் செருப்புகளை விட்டு விட்டுப்போனதாகவும் எழுதி இருந்தார்...அவனுடைய தடங்களை யாரும் பின்பற்றக் கூடாது என்றா?... ஆனாலும் என் நண்பருடன் உரிமை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை இடுகிறேன்... திருடு போன 'செல்'லில்  திருடனுடன் பேசினேன்  விட்டுப்போன செருப்புகளை  போட்டுப்போ. (நன்றி: அய்யப்ப மாதவனுக்கு)

"அருள்" வாக்கு

அருண் நேருவின் தினமணி கட்டுரை (8.7.2013): இவரது தேர்தல் அலசல் வித்தியாசமானதாகவும் ஆச்சரியகரமானதாகவும் இருக்கும். இன்னொன்று....தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும் இவர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானதாகவும் இருக்கும். அப்படியான ஒரு முன்வைப்பு இதோ: //ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம். சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே?  தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும். //சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்?  உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.// என் மனசுக்கு பட்டவை: * சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பது தவறு...தனியார் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள், அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்கள், அரசுக் கட்

!

புத்த கயையில் போதி மரத்தின் கீழ் புத்தர் அழுகிறார்