இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆர்.கே நகர் இடைத் தேர்தல் வாக்காளர்களுக்கு அன்புத் தமிழன் எழுதும் அரசியல் கடிதம். நீங்கள் பணம் வாங்கி ஓட்டுப்போட்டதாக ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். யார் வாங்கினீர்கள் யார் வாங்கவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம். இருக்கலாம். ஓரிரண்டு நாட்களுக்காவது இலவசமாய்ச் சித்தித்த புது குக்கரில் சமையல் செய்து பார்க்கலாம் என்று உங்கள் பசி உங்கள் கௌவரவத்தைச் சமாதானப் படுத்தியிருக்கலாம்.  எப்படியெல்லாம் சம்பாதித்த பணம் மக்களுக்கு வந்தாலென்ன என்ற எண்ணமாகவும் இருக்கலாம். பொதுவாகவே வாக்குச்சாவடி முகவர்களுக்குக் கொடுக்கிறபோது நமக்குக் கொடுத்தாலென்ன என்று நீங்கள் நமத்துப்போகத் தொடங்கிய தீக்குச்சிகளாகிவிட்டீர்கள்.  எதுவானாலும் சரி, பணம் வாங்குகிற எண்ணம் சரியானதா?  ஊழலின் ஊற்றுக்கண் உங்களிடமிருந்து தொடங்க நீங்கள் அனுமதிக்கிறீர்களா?  இலக்கு எவ்வளவு நியாயமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வழிமுறையும் நேர்மையானதாக இருக்கவேண்டுமென்று மகாத்மா காந்தியின் வார்த்தைகள் கொஞ்சம்கூட உங்களைச் சலனப்படுத்தவில்லையா? பணம் வாங்கி வாக்களிக்கிற ஒரு காரணத்தாலேயே உங்களின் கூர்த்த மதி வே
எல்லா மனிதரும் மனிதர் அல்லர். ****************************************************  ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும்.  அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர.  வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.  மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது.  நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள்.  அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன். இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார்.  பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்.  ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள்.  ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள்.  அவர்தான் ஆனந்த விகடன் குழுமத்தில் தலைமை உதவி ஆசிரியர்.  பண்பாளர் பாலு