ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலும் ஆதார் அட்டையும் 
  
சமீபத்தில் "ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்" என்கிற தனது   கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நண்பர் அய்யப்ப மாதவன் இப்படிக் குறிப்பிடுவார்....

"""""ஒரு கவிஞன் காதலைத்தான் பாடவேண்டுமா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும்.  வேறு எதைப்பற்றியும் பாடும் காலங்களில்லை என்றே கூற வேண்டும்.  ஒரு எழுச்சியும் இல்லை, புரட்சியும் இல்லை.  எழுத்தாளனுக்கு அதிகாரமுமில்லை. அங்கீகாரமும் இல்லை.  அடக்குமுறை வடிவமாக எப்பவுமே இங்கிருக்கிற அரசுகள் தோன்றியவண் ணமிருக்கின்றன.  பொய் பொய்யாய் பேசிவிட்டு அரசை ஆள்கிறார்கள்.  மக்களின் மீதே எல்லாச் சுமைகளையும் திணிக்கிறார்கள்....ஒட்டுமொத்த மக்களும் விழிப்புணர்ச்சி அடையாதவரை நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம்.  ஒருவேளை உண்மையில் நம் மக்கள் அவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கூட்டாகக் குரல் கொடுத்துப் பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் எனில் அப்போதுதான் கவிஞனுக்கான மகத்தான காலம் உருவாகிவிடும்.  அப்போது கவிஞன் காதலைத் தூக்கிஎறிந்துவிட்டு மக்களின் நல்வாழ்விற்கென தன சொற்களைக் குருதியில் குழைத்து எழுதத் தொடங்குவான்..."""""""""""""

எனக்கென்னவோ இது தலைகீழ்ப் பயணமாகத்  தெரிகிறது... //அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கூட்டாகக் குரல் கொடுத்துப் பெரும் புரட்சியை//  மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை...ஏற்படுத்தச் செய்வது கவிஞர்களும், கலைஞர்களும் அல்லவா?...அந்தக் கவிதைக் கூட்டத்தில் நிச்சயம் ஐயப்பன் மாதவனுக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

"//அப்போதுதான் கவிஞனுக்கான மகத்தான காலம் உருவாகிவிடும்//"""""
கவிஞன்தானே மகத்தான காலத்தை உருவாக்குபவன்...ஐயப்ப மாதவன் அறியாததா என்ன?  ஆனாலும், சமூகச் சூழல் மனச்சோர்வை உருவாக்கிவிடுகிற ஆபத்திலிருந்துதான் இந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்....அதிர்ஷ்டவசமாக ஐயப்ப மாதவன் கவிதை வரிகளிலேயே மருந்தும் இருக்கிறது...."""// நான் யாரெனவும் அறிந்திராத நான் / உலகின் இதயங்களிடையே என்னைக் காண்கிறேன் / அது கருணை மிக்கதாயும் தூய நேசமாயும் இருக்கக் காண்கிறேன் /  நான் பாக்யவான் இவ்வுலகின் / அரிய மனிதர்களின் சிநேகத்தில் / அளப்பரயும் உன்னத உணர்வினை அடைகிறேன்//""""

இன்னொரு இடத்தில் நோய் காணும் நுண்ணிய பார்வை:::: // குரங்காட்டி நகரமோ குரங்குகளாய்த் திரிபவர்களின் / குரல்வளைகளில் மாயக்கயிற்றை முடிந்து / சந்து பொந்துகளில் / பொம்மலாட்டம் நடத்திக்கொண்டேயுள்ளது.//

//"அப்போது கவிஞன் காதலைத் தூக்கிஎறிந்துவிட்டு மக்களின் நல்வாழ்விற்கென தன சொற்களைக் குருதியில் குழைத்து எழுதத் தொடங்குவான்."//  குருதியில் குழைத்து எழுத வேண்டிய நேரம் இப்போதுதான் என்பது எனது கருத்து.  

இன்னொன்று,,,காதலை எப்போதுமே தூக்கி எறியவேண்டிய அவசியம் எதற்கு ?
காதலும் வீரமும் கவிஞனின் / மனிதனின் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா?

எனது நண்பர் ஐயப்ப மாதவன் காதல் என்றால், கீழ்க்கண்ட கட்டுரையை எழுதியுள்ள எனது நண்பர் இக்பால் வீரம்....
 
"ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்" தொகுப்பையும் படிப்போம்..நமது அந்தரங்க ஆன்மாவை உறிஞ்சப்போகிற .ஆதார் "அட்டை" பற்றியும் படிப்போம். 

நண்பர் இக்பாலின் ஆதார் "அட்டை" குறித்த கட்டுரையில் ஒரு வாசகம்......

//மக்களை பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது ஒருபுறம்; எட்வர்ட் ஸ்னோடென் விசயத்திற்குப்பிறகு உலக மக்களின் அந்தரங்க விசயங்களை அமெரிக்கா பதிவு செய்வதில் மிக தீவிரமாக இருப்பதும் ஆதார் நிறுவனத்திற்கு சாஃப்ட்வேர் சப்ளை செய்த கம்பெனி ஒன்றுக்கு அமெரிக்க உளவுநிறுவனமான சி ஐ ஏ-வுடன் தொடர்பு உள்ளது என்பதும் அம்பலம் ஆகி உள்ளது; ..........
வீதியில் இறங்கிப் போராடாமல் விடியாது தோழா என்பது மறந்து போனதோ?!"//

                                                                                                                                  ---நட்புடன் நா.வே.அருள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்