இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வெள்ளைத்தாமரை ***************************** கூட்டத்தின் கடைசி வரிசையில் ஏதோ சலசலப்பு. காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாறு பேர்களைச் சமாதானப்படுத்திவிட்டு வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னபோதுதான் எனக்குக் காரணம் புரிய ஆரம்பித்தது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் சரஸ்வதி பூஜையையொட்டி ஒரு கலைவிழா நடந்தது.  அந்தப் பள்ளியின் மாணவப்பேச்சாளனாக இருந்ததால் ஆசிரியர்கள் எனக்குப் பேச வாய்ப்பளித்திருந்தனர். அன்றைய எனது பேச்சின் மையக்கருத்து மகாகவி பாரதியின் வெள்ளைத்தாமரை கவிதையாக இருந்தது. ”மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம். வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பலப்பல பள்ளி தேடுகல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” கலைமகளை பூஜை செய்வதன் அர்த்தம் கல்வியைப் பூஜை செய்ய வேண்டும் என்பது மகாகவியின் கருத்து. வெறும் புத்