இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
அடைகாப்பு  நிகழ வேண்டிய சந்திப்பு  நிகழாதபோது  நெடிய சோகம் நெஞ்சுக்குள்  உனது தாய்மையின் அலகைத் தரிசிக்க  ஒவ்வொரு தோப்பாய் அலைந்துகொண்டிருந்தேன்  நீயோ  நாம் முதலில் சந்தித்த இலுப்பை மரக் கிளையில்  குரல் விசிறிப் போயிருக்கிறாய்  வனத்தின் தாய்மொழி வாய்த்தும்  குஞ்சினைக் காக்க  கோழியாய் மாறும் உன்  குசலமும் சிறகடிப்பும்  உனது றெக்கையின் அடியாழத்தில்  உணர்ந்த உள்ளங்கைச் சூட்டின்  அதே கதகதப்பு  உனது அணைப்பிற்காக  முட்டைக்குள் கிடக்கிறேன்  முழி திறவாமல்..... வனந்தேடி வருவாயா? ************************************* ** அண்ணன் கல்யாண்ஜி சென்னைக்கு வந்தும் சந்திக்க முடியாத நிமித்தத்தில்.....
பொதுவாகவே ஒவ்வொருவரின் கவிதை ரசனையும் அவர் சார்ந்த பல்வேறு காரணிகளுடன் இணைந்ததுதான்.  ....... சுகுமாரனின் பயணத்தின் சங்கீதங்கள் படித்திருக்கிறேன்.  இன்று அதிகாலையில்  அவருடைய "நீருக்குக் கதவுகள் இல்லை" தொகுப்பின் இரண்டாவது கவிதை 'பலிக்கோழை' -யைப் படிக்க நேர்ந்தது.   இன்றைய காலச் சூழலில் -  கவிதையின் இருப்பு குறித்த சிந்தனையே கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கருத இடமுள்ள சந்தையில் - இந்தக் கவிதை என்னை உலுக்கி விட்டது. கவிதைக்காகவே வாழ்கிறவர்களுக்கு கவிதையின் இந்த மாயம் சாத்தியம்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இப்படி வாழ்நாளில் ஏதேனும் ஒரு கவிதை எழுதிவிட்டாலும் இலக்கியத் திருப்தி கொள்ளலாம். நிற்க.  ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டுமெனில் ஓவ்வொருவனும் தன் மனதிலிருந்து சர்வாதிகாரத்தைக் கழற்றி எறிய வேண்டும். தீண்டாமையும், சாதியும் ஒழிய வேண்டுமெனில் தலித்துகள் தமது உரிமைகளுக்காகப் போராடுகிற அதே நேரத்தில் பிறந்து விட்ட காரணத்தால் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம் தலித்துகளுடன் இணைந்து சாதி ஒழிப்புக்குப் போராட வேண்டும்.  தர்மபுரியைக் கொஞ்சம் நினை
முக நூல்  ஒரு கையில் கணினி எலி  இரு கைகளில் விலங்குகள்  வாழ்க ஜனநாயகம்!
எங்கே பார்க்கிறாய் செல்லம்மா  என்ன வேணுமடி கண்ணம்மா  பொங்கும் அழகி செல்லம்மா - கறும்  பூ ரெண்டு உனது கண்ணம்மா  மின்னும் அழகில் நீயம்மா - நீ  மேனி பூத்த பூவம்மா  கண்ணில் பாயும் தேனம்மா - உனைக்  கண்டால் பசி ஏதம்மா  வானம் உனக்கு வேணுமா - அந்த  நிலவில் படுக்கை போதுமா? மௌனம் உனக்கு ஏனம்மா - தமிழ்  மொழியில் நீயும் பாடம்மா  தர்மபுரியில் அதர்மமா - அங்கே  தலித்து வாழ்க்கை தகனமா  மர்ம வாழ்க்கை மாறுமா - சாதி  மறைந்து மண்ணில் போகுமா  யாரைக் கேட்க?...சொல்லம்மா - ஒரு  பதிலைச் சொல்லு செல்லம்மா  ஊரு சேரி ஒண்ணம்மா - இந்த  உலகத்துக்குச் சொல்லம்மா  navearul@gmail.com
அசுரன்  தாழிட்டு   வீட்டில்   பதிரமாகிவிடுகிற  இருள்  நேரத்தில்   எங்கோ  ஓர்   இருள்  மலைக்குள்   இரையைப்  பிய்த்துப்  பிராண்டி   விழுங்கும்   பேய்  விலங்கொன்று.  *** புசிக்கப்பட்டுத்  துப்பப்பட்டு   நிராதரவான  பெண்  ஒருத்தியின்   சுருண்டு  கிடக்கும்  உள்ளாடைமேல்   இழையாய்ப்  பொசியும்   அவள்  கூந்தலிலிருந்து  உதிர்ந்த   ஓரிழை  மயிர்.   *** காற்றில்  ஓய்ந்து  உறைய  மறுக்கும்   கதறல்களும்   கன்னத்தில்  காய்ந்து  உலர்ந்த   கண்ணீர்த் துளிகளும்   செய்யும்  கெக்கெலி யில்   வெட்கி  மரவட்டையாய்ச்   சுருளும்  என்  கவிதை.   *** இந்த  க்ஷணத்தில்   என்னைச்  சிலை  வடித்தால்   விகாரமான  உருவமாவேன்   கோரைப்  பற்கள்  முளைக்கும்   கைகளில்  ஆயுதங்கள்  வளரும்   இடம்  பெயர்ந்து  அசுரனாய்  அசைவேன்   இந்தப்  பூமிக்  கோளத்தை   ஒற்றைக்  கையால்   கருந்துளை  ஒன்றில்  தூக்கி  எறிவேன்.   --நா. வே.  அருள்  
மிதக்கும் சொர்க்கம்  காற்றுக் கடலின் கட்டுமரமே! உன் அலகாக அல்ல  சிறகாக இருக்கவே பிரியப்படுகிறேன் வயிறு வளர்க்க அல்ல  வானம் அளக்கும் வற்றாத ஆசையில்..... ************* என்ன தான் இந்த மனிதன் பீற்றிக் கொண்டாலும்  அவனின் இருப்பு நிழலில்  உனதோ .... கிளையில்! ************* இரவு எத்துணை அழகாய் இருந்தென்ன? உன் சிறகு வருடாத காற்று... சீசீ.... ************* இந்த மனிதன் விசித்திரமானவன் தான்  லேகியத்துக்கு அலைபவன்  சிட்டுக்குருவியைத் தொலைத்துவிட்டான்! -- நா.வே.அருள் 
படம்
பொதுஜனத்தின் மீது எனக்குப் புகார் இல்லை  ஆதி பெருந்தேவன்  அன்புள்ள பொதுஜனத்திற்கு ஒரு வழிப்போக்கன் எழுதிக்கொள்ளும் மனம் திறந்த மடல்.  மறக்க முடியுமா? பாலு மகேந்திராவின் "மூன்றாம் பிறை" ஞாபகத்திற்கு வருகிறது. பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மறந்துபோன ஸ்ரீதேவிக்கு கமலஹாசன் ஒரு கதைப்பாட்டு பாடிக் காண்பிப்பார்: நீல நரியின் கதை..  நரியும் வெளியே வந்தது...மழையில் கொஞ்சம் நனைந்தது...நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்..ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் டும்....டும் டும் டும் டும்.. இப்போதெல்லாம் நரியின் சாயம் கலைய வாய்ப்பில்லை.  நரிகள் குடை பிடிக்கக் கற்றுக்கொண்டன. நிதின் கத்காரியைக் கேளுங்கள், நிச்சயம் சொல்வார். அவர் ஒரு குடைத் தொழிற்சாலையே வைத்திருக்கக்கூடும். ஆம் என்றொரு அசரீரி கேட்கிறது அத்வானியின் குரலில். சும்மாங்காட்டியும் என்று ஒரு குரல் வருகிறது...அது சுஷ்மா சுவராஜினுடையது.  அரசியல் வியாபாரிகள்  அரசியல் செய்யவந்தவர்கள் வியாபாரம் செய்ததும்  வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்ததும் நம் நாட்டில் நடந்த கதைகள்தான்.  வியாபா