இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பிடல் காஸ்ட்ரோவைப் பின்தொடரும் குரல் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ஒரு சதுரங்கத்தின் சாயுங்காலம் ராஜா ராணி யானை குதிரை சிப்பாய் ஒட்டுமொத்தமாக வெட்டப்படுகிற வேளையில்… அசரீரியாய் ஒலிக்கிறோம் ஆட்ட நாயக அகங்கார ஓங்காரங்கள். நாளை வேறு விளையாட்டாகலாம் அன்றிப் புதிய சதுரங்கம் புகுத்தப்படலாம் ஆடுபொருள்களே மாற்றப்படலாம் சிலர் விளையாடத் தகுதியற்றவர் என்று விதிகள் வரலாம் எதுவும் சாத்தியம்…எங்கள் விளையாட்டை யாரறிவார்? கணிக்கமுடியாத நிதியின் காட்டாற்று நடனத்தில் எக்காளமிடும் எங்கள் கடவுளின்முன் நிகழ்த்தப்படும் எந்திர தந்திர காலகால கணினி பூஜைகள் மானுடம்…மானுடம்…மானுடம்… யாருக்கு வேண்டும் உங்கள் திரிபுகளைச் சுமந்தலையும் தேய்ந்த ரிகார்ட் வாசகங்கள்? ஒவ்வொரு வார்த்தையிலும் எங்கள் ஊத்தை மெருகேறிய பற்களின் எனாமல்கள். பொழுதுபோக்குப் பொம்மலாட்டங்களில் மரணக்கயிறுகளில் தொங்கும் மரப்பாச்சி பொம்மைகள் மேடையில் நிகழ்த்தப்படும் மரியாதைக்குரிய ஓநாய்களின் கண்ணீர் நெசவுகளைக் கண்டடையும் நுட்பம் கைவரப்போவதில்லை
பெருஞ்சோகக் குமிழி •••••••••••••••••••••••••••••• அகன்று பரந்து விரிந்த ஆலமரம் போன்ற வேம்பினடியில் இலைகளையெல்லாம் எண்ணிமுடித்து அலைபேசி வழியே சில பல சுயபடங்கள் சுட்டு முடித்து நாலைந்து நாழிகைகளே முடிந்திருக்கும் அதற்குள் எப்படியும் வந்துவிடுவான் காதலனென ஏதேதோ எண்ணிக்கிடந்தாள். பக்கத்தில் .ஓடியும் ஓடாமலும் தேங்கிக் கிடந்தது நகரின் பாவமென நலிந்த நதி கூவம் வழியெங்கும் பொருக்குப் பொருக்காய்க் காய்ந்து ஏடாகியிருந்தன நாலைந்து நாட்களான நரகல் கொத்துகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஈர மூத்திரத் திட்டுகள் இதையெல்லாம் தாண்டி எப்படியும் வந்துவிடுவான் இருசக்கர எந்திரத் தேரேறி எந்த நேரத்திலுமென்று  எதிர்பார்ப்பை வழி நெடுக மலர்களென தூவி இன்னுமவள் காத்திருந்தாள். வேலையில்லாக்காரணங்காட்டியும் ஊதாரித்தனமும் உல்லாசமுமாய் உலாவித்திரியும் சோம்பல் கனவின் சுகவாசியென ஊரில் பலர் அலர்மொழி உரைத்தது சொல்லியும் எதிர்த்த வீட்டாருக்கென்ன தெரியுமென எற்றி இகழ்ந்த தடிப்பேறிய தனது பேச்சுகளே மரத்தைச் சுற்றிச்சுற்றியோடின அவளின் மரத்துப்போன மலரும் நினைவுகளாய்… மறக்க