இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
ஜெயதேவனும் சில கவிதைகளும் *************************************************** கவிஞர் ஜெயதேவனின் ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல என்கிற கவிதைத் தொகுப்பை முன் வைத்து தானப்பன் கதிர் அவர்கள் காணிநிலத்தில் எழுதிய ஒரு நூல் விமர்சனம் பார்த்தேன்.   //‘மா’ எனும் களைப்போடு வீடு திரும்பும் மாட்டின் கழுத்து மணி ஒலியில் கேட்கிறது பெருங்காட்டின் சிறு ஒலி// என்கிற கவிதையைப் பார்த்ததும் சமீபத்தில் படித்த பாரதி கவிதாஞ்சனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. “அடர்வனத்தின் இருளில் மெல்ல நகருமொரு காட்டுக்கு யானையொன்றின் சாயல்”. ஜெயதேவனின் இன்னொரு கவிதை “ஒரு கோப்பைத் தேநீரில் இருக்கிறதுதானே தோட்டத்தின் மணம்” இந்தக் கவிதையை வாசித்ததும் கல்யாண்ஜி நம் முன் ஒரு பென்சிலை சீவி காட்டைச் சரிக்கிறார்.   “பென்சில் சீவுகையில் கேட்கிறது காட்டில் மளமளவென சரியும் மரமொன்றின் ஓசை“ “பறவை எப்போதும் பறப்பதாகவே நீங்கள் நினைக்கின்றீர்கள் சிறகுகளை இலகுவாக்கி காற்றில் ஓய்வெடுப்பதைப் பார்த்ததில்லையா?” என்று பறவைகளைப் பார்க்கிற போது அவருக்கு எழுதத் தோன்றுகிறது. அடு