இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
இந்திரன் காலம் ‘ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” தொகுப்பிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூக்ஸின் “கறுப்பு இயேசுநாதர்” கவிதையை முதன்முதல் வாசித்தபோது பிரமிப்பின் உச்சத்தைத் தரிசித்தேன். அன்றைக்கு அண்ணாந்து பார்க்க ஆரம்பித்த ஆளுமை அந்தத் தொகுப்பைத் தமிழில் கொண்டுவந்திருந்த இந்திரன். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பின் ஊடாகக் காற்றுக்குத் திசையில்லை, பசித்த தலைமுறை, பிணத்தை எரித்தே வெளிச்சம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், மஞ்சள் வயலில் வெறிபிடித்தத் தும்பிகள் என்று கவிதைப்புலத்தில் ( + கட்டுரைத் தளத்தில்) காத்திரமான கவிதை மற்றும் இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தியுள்ளார். புதுமையான இலக்கியப் போக்குகளை அவரது சொந்தப் படைப்புகளான சாம்பல் வார்த்தைகள் முதல் மின்துகள் பரப்பு வரையிலும் காண இயலும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்படுத்தியத் தாக்கத்தைத் தமிழ்க் கவிதையில், இலக்கியத்தில் ஒரு புதிய போக்கினைத் தரிசிக்க நேர்ந்தது.    கவிதையில் மாத்திரமா? கூர்ந்து அவதானிக்கும்போது அவரது ஒவ்வொரு தொகுப்புமே கவிதையில் ஒரு புதுவிதமானத் திசையினைத் தமிழ்ப் பரப்புக்கு அறிமுகப் படுத்தியிருப்பதை உ
இலக்கியம் என்றால் பாரதி, கண்ணதாசன், வைரமுத்து என்று இருந்த காலத்தில் என் கைப்பிடித்து நடைவண்டி கொடுத்தவர்களை எப்படி மறக்க முடியும்?   அந்த இருவருக்கும் இன்று (14-7-2018) இலக்கியத் திருவிழாக்கள். இந்திரனை முன்வைத்து ஓவியக் கண்காட்சி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தொடங்குகிறது.   தமுஎகச நிகழ்ச்சியின் காரணமாகப் புதுவை செல்ல இயலவில்லை. இளையபாரதியின் வ உ சி நூலகத்தின் 21 நூல்கள் வெளியீட்டு விழாவில் கல்யாண்ஜியின் 776 பக்கங்களில் முழுக் கவிதைத் தொகுப்பும் இன்று எம் ஆர் சி நகர் இராஜரத்தினம் அரங்கத்தில் வெளியாகிறது.   எட்டு மணியளவில் உள்ளே நுழைகிறேன். தோழர் டி.கே.ஆர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.   அவருக்கே உரிய புன்சிரிப்புடனும் நிதானத்துடனும் இன்றைய காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் மேலதிகப் பொருத்தப்பாட்டைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். என்னை ஆச்சரியப் படுத்தும் விதமாக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து எளிய முறையில் விளக்கினார்.   முதலாளித்துவம் தனது விதிகளைச் செயல்படுத்துகிறபோது தோற்றுப் போகிறது. சோசலிசம் தனது விதிகளைச் செயல்படுத்தாதபோது தோற்றுப் போகிறது என்ற