இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நிதி நீட்டினால் நீதி 

உயிர்

உயிர் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள்.  ஏன் சிலர் கொடூரமான முறையில் சாகடிக்கப்படுகிறார்கள்?  அவர்களுக்கான வாழ்வுரிமையைப் பறிக்க யார் அதிகாரம் தந்தது? சட்டம் கையாலாகாமல் தவிக்கிறபோது  கவிதை சில கேள்விகளை முன்வைக்கிறது.  முடிந்தவர்கள் பதில் சொல்லட்டும். அருணா ஷான்பாக் அவர்களுக்கு இப்படித்தான் என்னால் அஞ்சலி செலுத்தமுடிகிறது.  வரிசையாய் வார்த்தைகளை நிற்க வைக்கிறேன்.  நீங்களும் வாருங்கள்.  சேர்ந்து நிற்போம்.... அருணா ஷான்பாக் யார்? கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர்.  அல்திபூர் கிராமத்தில் வசித்துவந்த ராமச்சந்திரா ஷான்பாக், சீதாபாய் தம்பதிகளின் மகள்தான் இந்த அருணா ஷான்பாக். 2015 மே 18 ஆம் நாள் மும்பையில் உள்ள கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் 42 ஆண்டு பராமரிப்புச் சிகைச்சைக்குப்பி றகு இறந்துவிடுகிறார். தனது 25 ஆம் வயதில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மே பதினெட்டுடுடன் முடிந்துவிடுகிறது...ஆனால் பதிலிறுக்கமுடியாத கேள்விகள் பலப்பல... அருணா ஷான்பாக்குக்கு என்ன நேர்ந்தது?... 1973 நவம்பர் 27 இரவு. வழக்கம்போல அருணா ஷான்பாக்   கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் செவிலியர் பணியில் ஈடுபட்டிருக்கிறார