இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
இது நம்ம பூமி  அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி       அநியாயம் நடந்த கதை  கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக்       காணாமல் போன கதை  வெளையாட்டுப் பருவத்துல - அவர்       வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல  - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அட       ஒசந்த சாதி கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - சிறு       கெணறு கூட ஏற்கவில்ல  பள்ளியில சமமாக - மத்த       பிள்ளையோட குந்தினாக்கா  பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா       பிரிச்சாங்க நோய் கணக்கா  தனிசாக்கில் குந்தவச்சி  - அழுக்குத்       தனி டம்ளர் ஒதுக்கிவச்சி  அனிச்சமலர் அண்ணலையே - எரி       அக்கினியில் போட்டாங்க  வழக்கறிஞர் ஆனபின்னும்  - குந்தின       வண்டிகூட தீட்டச்சாம்  அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி        அம்மணமும்  கோட்டாச்சாம்  அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த       அவமானம் பாத்தீங்களா  சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில்       சூடு கொஞ்சம் போட்டீங்களா  திருடன் போல் துரத்திப்புட்ட  - கெட்ட       தேசமிப்போ மண்டியிடும்  தெருத்தெருவா செலை வச்

கவிதை

http://kungumamthozhi.wordpress.com எந்திர வாசல்  ஒரு பெண்தான்   வேட்டையைத் தொடங்கிவைத்தவள்  தன் பிள்ளைகளுக்காக.  குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை  எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும்  தெறிக்கும் உண்மை.  இது பட்டாக்கத்தியுடன் அலையும்  ரவுடி அறியாத ராகுல ரகசியம்* அதனால்தான் இன்றும்… தாய்க்கோழி தன்  சிறகுகளைப்   பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க    குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து பயந்து திரும்பும்.  கல்வியும் கருணையும் கவிதையும்  கைவிடப்பட்ட உலகில்  துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள்.  இதயங்கள் புறக்கணித்து  எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில்  சமூகத்தின் சவக் களை.  இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம்  நிகழ்ந்ததைப் பார்த்து  நினைவிழக்க… சுயபார்வையற்ற கேமரா  தன் ஒற்றைக் கண்ணால்  உதிரம் அதிரும் காட்சிகளை  உள்விழுங்கத் திணற… கத்தி பார்த்து உயிர் உறைய  சரிந்து சாய்கிறாள் பெண் ஒருத்தி.  வழியும் குருதி வழித்தெறிந்து  சாவகாசமாய்த் துணியில் துடைத்து  கத்தியைப் பையில் திணித்து  குற்ற உணர்ச்சியற்று வெ
இது நம்ம பூமி  அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி       அநியாயம் நடந்த கதை  கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக்       காணாமல் போன கதை  வெளையாட்டுப் பருவத்துல - அவர்       வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல  - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அட       ஒசந்த சாதி கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - சிறு       கெணறு கூட ஏற்கவில்ல  பள்ளியில சமமாக - மத்த       பிள்ளையோட குந்தினாக்கா  பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா       பிரிச்சாங்க நோய் கணக்கா  தனிசாக்கில் குந்தவச்சி  - அழுக்குத்       தனி டம்ளர் ஒதுக்கிவச்சி  அனிச்சமலர் அண்ணலையே - எரி       அக்கினியில் போட்டாங்க  வழக்கறிஞர் ஆனபின்னும்  - குந்தின       வண்டிகூட தீட்டச்சாம்  அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி        அம்மணமும்  கோட்டாச்சாம்  அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த       அவமானம் பாத்தீங்களா  சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில்       சூடு கொஞ்சம் போட்டீங்களா  திருடன் போல் துரத்திப்புட்ட  - கெட்ட       தேசமிப்போ மண்டியிடும்  தெருத்தெருவா செலை வச்

ஒரு பத்திராதிபருக்கு என் பாராட்டு மலர்வளையம்

மரணத்தால் விழுங்க முடியாத மானுட விதை  புகழ்வது என் தொழிலல்ல  புதையல் எடுப்பது என் பொழுதுபோக்கு  அவ்வப்போது சில அபூர்வ புதையல்கள்  அகப்பட்டதுண்டு... சில  சமயங்களில் புலியின் உறுமல்  சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல்  பட்டாம் பூச்சியின் சிறகடிப்பு, மின்மினியின் மினுக்கட்டாம்  கொண்டலாத்தியின் குகுகுகுப்பு  சிலநேரம்  கண்கள் சூடேறக் கண்ட  கனவு சாம்ராஜ்யம்  சிலநேரம்  அடியுரமாகிப்போன  அற்புத மனிதம்  அப்படி என் அகழ்வாராய்ச்சியில்  அகப்பட்ட ஒருவன்தான்  அகிலம் குறித்துக்கொள்ள வேண்டிய  ராமச்சந்திர ஆதித்தன்   நான் ஒரு முட்டாள் கவிஞன்  இதற்குமுன்  ஒருமுறை கூட உன் முகம் பார்த்ததில்லை  நீ உச்சரித்ததில் ஒரு வார்த்தைகூட  என் செவி வந்து சேர்ந்ததில்லை  எனது இதயத்தில் எப்போதும் குடியிருக்கும்  இளவரசன்  ஒருத்தனின்  சுட்டுவிரல் காட்டிய  சுடர்க்கோபுரம்  நீ.... உன்னையும் என்னையும் இணைத்திருப்பதோ  துண்டிக்கப்பட முடியாத  தொப்புள் கொடி உறவு  ஒருவகையில் நாம் இருவரும்  ஒன்று  தாய்மொழிப் பள்ளி நடத்தி  கனவில் தோற்றுப்போனவன்
சாதி   சாதி சட்டை போன்றது அன்பு தோலைப் போன்றது இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்..... சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள் தோலை  உரித்துக் கொள்கிறார்கள் ! மனிதம் சாதி -- சட்டையளவிற்கும்  சமானமற்றது... அன்பு -- தோலைப் போன்று  சுருங்காதது  எப்போது இந்த மனிதர்கள்  புரிந்து கொள்வார்கள் ? "நிர்வாணம் என்பதே நிஜம்" ​                                   --நா.வே.அருள்  
உயரத்திலிருந்து யோசிக்க வேண்டும்  சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும்  குழப்பமான சமூகத்தில்தான்  குடியிருக்கிறோம் நாம்  குப்பைகள் கிளற கோழிகள் போதும்  தானிய மணிகளை விதைக்கத்  தவங்கிடக்கிறோம்  நாமோ...மனிதர்கள்  மூச்சு விட்டு மூச்சு விட்டு  வெறும் காற்றுத் தொந்தியாவதற்கா  நுரையீரல் ? அடிமைகளை உருவாக்கும்  நோய்க்குடுவையா அன்னையின் கருப்பை ? கர்ஜனைகளை நேசிப்பவன்  குகைகளை உருவாக்குகிறான்  கானங்களை நேசிப்பவன்  குயில்களை.... சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும்  யார் நல்லவரென்றும் எது நல்லதென்றும்   இன்னும் புரியவில்லை  பிணங்களை உற்பத்தி செய்கிற  போலி உயிரா ? யுகங்களை உயிர்ப்பித்துவிடுகிற  சாகாத சடலமா ? அடுத்த நூற்றாண்டின் சிம்மாசனமா ? போன நூற்றாண்டின் புதைமணலா ? கரியமில வாயுவா ? ஓசோன் படலமா ? சிகரமா ? பள்ளத்தாக்கா ? சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும்  என்ன செய்யப்  போகிறோம் நாம்? வேட்டையின் வேட்கையில்  வில் அம்பில் விரல் பதிப்போமா  விருட்சக் கனவில்  விதை ஊன்றுவோமா ... உருட்டுக் கட்டைகள் ... பெட்ரோல் குண
படம்
http://kungumamthozhi.wordpress.com (உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7) எனக்குக் கிடைக்காத பால் எல்லோருக்கும் கிடைக்கிறது எனது கவிதை "ஒரு வாய் கடல்" மூலமாக ( ஆனால் அன்று பால் சுரக்காத என் தாயின் பரிதவிப்பு இன்னும் பதிவு செய்யப்படாத பாற்கடல்...).தவிப்புகளை எல்லாம் மீறி அருந்தலாம் வாருங்கள்...இது கவிதைத் தாய்ப்பால்.... ஒரு வாய் கடல்  உலக விஞ்ஞானத்தின் மொத்த சூட்சுமத்தையும் கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய்  தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாலும் குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது  தாய்க்கு மூன்று இதயங்கள் இரண்டில் பால் கசிகின்றன ஒன்றில் அன்பு… மண்ணுக்கு மழைநீர்...மழலைக்குத்  தாய்ப்பால்  தாய்ப்பால்… கடலில் அல்ல...உடலில் கடைந்த உயிரமுதம்  யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு குழந்தைக்குத்தான் மடியில் படுத்துண்ணும் மாபெரும் பாக்கியம்  அறுநூறு வகை உயிரிகள் இருநூறு வகை இனிப்புப் புரதங்கள் உண்டால் உறக்கம்   மச  மச  கிறக்கம் ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும் போஸான் அணுத்துகளே … புரியவில்லையே தரணியே அதிசயிக்கும்  இந்த தசை “பாட்டில்” தயாரிப்பு மார்பகம
ஒரு முடிவுறாத கடிதம்                                                                                                                                                      ஆதி பெருந்தேவன்  முன்னாள் ஜெர்மானிய அதிபரும் அடால்ப் ஹிட்லரின் பிரச்சார அமைச்சருமான பால் ஜோசப் கோயபல்ஸ் அவர்களுக்கு இந்தியாவின் கடைசிக் குடிமகன் எழுதிக்கொள்ளும் கடிதம். உங்கள் திறமையும் பேச்சாற்றலும் உலகறிந்த உண்மை. பொய்யைப் பற்றி உண்மை அறிந்து இருக்கிறதோ இல்லையோ... உண்மையைப் பற்றி நிறையவே பொய் தெரிந்து வைத்திருக்கும்.    பொய் இன்னொன்றையும் புரிந்து வைத்திருக்கிறது... அதாவது மக்களுக்கு மறதி அதிகம். நம்புவதற்கு ஒரு நாடே இருக்கிறபோது நாக்கு கூச்சத்தை  மறந்து விடுகிறது. டாக்டர் கோயபல்ஸ் அவர்களே...உலகில் நாசிசம் பரப்பிய ஹிட்லர் கட்சியின் பெயர்: "தேசிய சமுதாய தொழிலாளர் கட்சி".  பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம்... பெயரில் எவ்வளவோ இருக்கிறது!...உங்கள் முதல் பொய் பெயரில்தான் தொடங்கி இருக்கிறது!  ஜெர்மானிய சமத்துவக் கட்சி மற்றும் ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களை உங்கள் பக்கம் இழுக்க &q
செல்போன் திருடு போனதாக நண்பர் அய்யப்ப மாதவனின் பதிவினை முகநூலி ல் காண நேர்ந்தது...அவருடைய இழப்பு என்னுடையதாகவும்...மனசு சங்கடப்பட்டது...திருடன் செருப்புகளை விட்டு விட்டுப்போனதாகவும் எழுதி இருந்தார்...அவனுடைய தடங்களை யாரும் பின்பற்றக் கூடாது என்றா?... ஆனாலும் என் நண்பருடன் உரிமை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை இடுகிறேன்... திருடு போன 'செல்'லில்  திருடனுடன் பேசினேன்  விட்டுப்போன செருப்புகளை  போட்டுப்போ. (நன்றி: அய்யப்ப மாதவனுக்கு)

"அருள்" வாக்கு

அருண் நேருவின் தினமணி கட்டுரை (8.7.2013): இவரது தேர்தல் அலசல் வித்தியாசமானதாகவும் ஆச்சரியகரமானதாகவும் இருக்கும். இன்னொன்று....தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும் இவர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானதாகவும் இருக்கும். அப்படியான ஒரு முன்வைப்பு இதோ: //ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம். சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே?  தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும். //சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்?  உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.// என் மனசுக்கு பட்டவை: * சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பது தவறு...தனியார் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள், அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்கள், அரசுக் கட்

!

புத்த கயையில் போதி மரத்தின் கீழ் புத்தர் அழுகிறார் 
அன்புள்ள நட்புலகத்திற்கு வணக்கம். குங்குமம் தோழி இணைய இதழில் வெளிவந்த நண்பர் பாலு சத்யா அவர்களின்    இரான் நாட்டுத் திரைப்பட இயக்குனர் சமீரா பற்றிய சிறந்த பதிவும் எனது "முகம்" கவிதையும் உங்கள் விழி வாசல் ஏற காத்திருக்கின்றன.... நன்றியுடன் நா வே அருள் http://kungumamthozhi.wordpress.com/2013/06/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
அநாதைகள்  வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தயாரில்லை  மேலும்  கவளம் கவளமாய் விழுங்கிக்  களைப்படைந்துவிட்டன காதுகள்  அதுவும்  நடிப்புச் சுதேசிகளின்  நாடக வார்த்தைகள்!!....                          =நா. வே. அருள் 
       பூமி   அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி        அநியாயம் நடந்த கதை  இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி       இல்லாமல் போன கதை  வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட       வெளியூரு போகையிலே  துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அங்க       ஒரு பயலும் கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - எந்தக்       கிணறும் ஏற்கவில்ல  நாய்குடிக்கத்  தண்ணீரை -ஒரு       நாலு அண்டா வச்சவனோ  தீப்பிடிச்ச நாக்கால - அவரைத்       துரத்தி அடிச்சுப்புட்டான்  குட்டையில குடிப்பதற்கு - தண்ணி       குவிஞ்ச கையில் எடுக்கையிலே  வெட்டை மிதந்து வரும் - பத்து       வெரலுக்கும் வாந்தி வரும்  பள்ளியில சமமாக - வகுப்பில்       பக்கத்துல  குந்தினாக்கா  பிள்ளை எல்லாம் தீட்டாச்சாம் - அவரைப்       பிரிச்சு வச்சாங்க  தனி சாக்கில் குந்தவச்சி - ஒரு       தனி டம்ளர் ஒதுக்கிவச்சி  அனிச்சமலர் அண்ணலினை  - எரி       அக்கினியில் போட்டாங்க  வழக்கறிஞர் ஆன பின்னும்  - அவர்       வண்டியில போனாக்கா  அழுக்கு வண்டிக்காரன்       அங்கங்கூ
பா(ப)ட்டுக் கோட்டைகள், கவியரசுகள், காவியக் கவிஞர்கள்,  கவிப்பேரரசுகள் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை  மிகப்பெரும் பாரம்பரியம் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் .... சக்கரத்தில் சுத்துகிற மண்ணு கலயமாகுது  பக்குவமா செதுக்குற மரமும் கலப்பையாகுது  சொக்கத்தங்கம் தட்டித் தட்டி நகையுமானது - உளி  சொன்ன சொல்லைக் கேட்ட கல்லும் சிலையுமானது  மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?- நீ  மாத்தி யோசி மாத்தி யோசி மாறுதல் அப்போ!.... என்கிற பல்லவியோடு மிகவும் பணிவோடு நுழைகிறேன்.  கோடி கோடி ஒளியாண்டுகள் பரப்பளவு உள்ள இந்தப் பால்வீதி மண்டலத்தில் நான் ஒரு சின்ன போஸான் அணுத்துகள் என்று புரிந்தே வைத்திருக்கிறேன்.   வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பகத்சிங் கண்ணன், என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அக்னிக்கலைக் கூடம், வரிகளுக்கு மாய சுதி கூட்டி எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின், தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ஒளிப்பதிவாளர் புதுயுகம் நடராசன்,  மறைவாக இருந்து என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் மற்றுமுள்ள அனைவருக்கும், இந்த வாய்ப்புக்கே அட