தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  தாம்பரம் கிளையில் பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்க நிகழ்வில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து....

5
தவித்தழுகிறது தர்மம்
தறுதலையாய் அலைகிறது அதர்மம்!

மௌனத்தில் தலை கவிழும்
மனம்!

சிதைந்து போன உடல்கள் பார்த்து
கதறவில்லையா
கல் இமை போர்த்திய உன் கண்கள்?

மூக்குக்கும் மார்புக்கும் இடையில் நடக்கிற
ஒரு முழச் சுவாசம்
உனது உயிர் வாழ்தலுக்கு மட்டும்தானா?

உபயோகிக்காத உறுப்பு
உடலுக்குள் எதற்கு?
உனது மார்புக்  கூட்டுக்குள்ளிருந்து
பயன்படுத்தாத
பாதி பிளந்த பீட்ரூட் பெருந்துண்டைப்
பாதையில் வீசு!

துக்கத்தில் நீ போட்டிருக்கும்
முள்ளி வாய்க்கால் முக்காட்டை
மெல்ல அகற்று.

தெரிகிறதா?
தடித்துப் பருத்த இலங்கையின் செங்கோலில்
தடவப் பட்டிருக்கும் தமிழனின் இறைச்சி!

தெரிகிறதா?
இஸ்ரேலிய அரச விருந்து மண்டபத்தில்
பரிமாறப்பட்டிருக்கும்
பாலஸ்தீனியனின் பச்சை மாமிசம்!

உயிரை ஊடுருவும்
உலகமய அரக்கனின்   வெவ்வேறு முகங்கள்!

                                  --தொடரும்....



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்