இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
மனிதனும் கடவுளும் ******************************* மனிதனுக்கு மிக நெருக்கமாய் இருப்பவரும் மிகத் தொலைவில் இருப்பவரும் கடவுள்தான். ஒரு பொருளே இல்லாதவரும் மனிதனின் போதை வஸ்துவும் கடவுள்தான். கடவுள் உண்டு என்றால் கவிதை கடவுள் இல்லை என்றால் கட்டுரை கடவுள் உண்டு இல்லை என்றால் கதை. கடவுள் உண்டு என்று சொன்னால் அவர் மனிதனுடன் கால்பந்து விளையாட ஒரு குழந்தையைப் போல ஓடி வருகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மனிதனின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. மனிதன் வீடற்றவனாகக் கூட இருக்கலாம் ஆனால் மனிதனின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமே கடவுள்தான் மனிதனை வாழவைக்க நினைத்தவர்கள் அவனது சாம்ராஜ்ஜியத்தைச் சிதைத்தார்கள். மனிதனைச் சிதைக்க நினைத்தவர்கள் அவன் சாம்ராஜ்ஜியத்துக்குக் காவல் நாய்களை வளர்த்தார்கள். மனிதன் ஒரு விசித்திரமானவன் அவனிடம் ஒரு பொம்மையைக் கொடுத்துவிட்டால் அவன் குடிசையில் எந்தப் புகாருமற்றுப் படுத்துறங்கிவிடுகிறான். அவனது ஒரு கனவைச் சீண்டினால் போதும் கையளிக்கப்பட்ட அரண்மனையிலிருந்து காணாமல் போகிறான். மனிதன் சூத்திரத்துக்கு
திரைப்பட விமர்சனம் ********************************  எட்டுத் திக்கும் பறக்க ஒரு சிந்தனைச் சிறகு ******************************************************************** பற என்று முதலில் தலைப்புச் சூட்டப்பட்டு, அது ஒரு சாதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறதென்று கூறித் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்ட போதே பெயர்மாற்றம் பெற்ற “எட்டுத் திக்கும் பற” திரைப்படம் எனது ஆவலைத் தூண்டிவிட்டது.   சாதிய ஆணவ எதிர்ப்புக் கதையாகப் படம் சிறகு விரிப்பதைக் கண்டபோது அந்த ஆவல் நிறைவேறியது. அடித்தட்டுச் சென்னை மக்கள் குடியிருக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிற எதார்த்தமான நடைபாதை வாழ்க்கை.    தினமும் ஒவ்வொரு இரவையும் நடைபாதை வாசிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அதிர்ச்சி நிறைந்த மணித்துளிகள்.   இருட்டை விட பயத்தைத் தருகிற, சைரன் அலறல்களுடன் ரோந்து வரும் வாகனங்களில் காக்கி உடைகளின் கெடுபிடி.   மிகைப் படுத்தலற்ற காட்சிகளிலிருந்து தொடங்குகிற ஒரு காதல் ஜோடியின் அவதி சமூக உறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. நடைபாதை வாழ்க்கையில் இளம்பெண்கள் சந்திக்க வேண்டிய சதைப் பாதுகாப்புச் சவால்களில்,.