தமுகச தென்சென்னை தாம்பரம் கிளை நடத்திய பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து

4

 நாம் இழப்பதற்கு ஏதும் இல்லாததைப்போலவே
 பெறுவதற்கும் ஒன்றும் இல்லாமலாக்குவதற்கு
மூல வியூகம் செய்தபடி  மூலதனம்

எவற்றைக் கேட்கிறோம் நாம்?
நாம் சிந்துவதற்குச் சில கண்ணீர்த்துளிகள்
நாம் எழுதுவதற்குச் சில கவிதைகள்
நாம் எந்துவதற்குச் சில மெழுகுவத்திகள்
நாம் பாடுவதற்குச் சில தேசிய கீதங்கள்
நாம் திரிவதற்குச் சில வனங்கள்
நாம் புலம்புவதற்குச் சில ஒப்பாரிகள்
நாம் புழங்குவதற்கு ஒரு துண்டு நிலம்
நாம் சுவாசிப்பதற்குச் சில உயிர் மூச்சுகள்
நாம் சிறகடிக்க ஒரு முழ வானம்
நாம் இறுதியில் வீழ்ந்து கிடக்க
சொந்தமாய் ஒரு கல்லறை!

பாசாங்கானது அல்ல நம் அழுகை
பஞ்சுமிட்டாய் அல்ல நமது வேண்டுதல்
எந்த பொம்மையை யாசித்தும்
அடம் பிடிக்கவில்லை நம் அழுகுரல்!

முட்டிக் குடிக்க ஒரு முலைக் காம்பு
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்
பதிப்பதற்குப் பாதத்தடம்!

                                      ...தொடரும் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்