![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk8W1QKoCb6-8qB9e42ILv4w9PiTzNaY-pTVp9fvg6ABUL2b5ykeWic0Axwdb8OsesPMRVpWwNqOxbQLnmOlQVrWQUP-tIAhTmfIWryMTkfBuEW1AFBBJ9XKK61OiqAh_pA_9NHtT9oFk/s1600/oru+muttaalin+kavithai.jpg)
ஒரு முட்டாளின் மனைவி என் மனைவிக்கு என் மேல் ரொம்ப கோபம். அவள் ரொம்ப நாளாகக் கேட்ட ஒட்டியாணத்தை நான் வாங்கிக் கொடுக்கவில்லையாம். மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள். கால் பட்டினி அரைப்பட்டினியாகவே ஓடிக்கொண்டிருந்தது என் கதை. வாங்கிக் கொடுக்காத காரணத்தையாவது சொல்லியாகணமுன்னு ஒரே ரோதனை. ஒரு நாள் ரொம்பவும் முட்டிக்கிச்சி. "பொண்டாட்டி ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்காத நீ என்னடா புருஷன்" அப்படி இப்படின்னு லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சிட்டா. இப்படியே போனா என்ன ஆகுறதுன்னு "குட்"ட்டைப் போட்டு ஓடைச்சிட்டேன். "தோ பாரும்மா....ஒனக்கு வாங்கிக் குடுக்கக் கூடாதுன்னா இருக்கேன்? என்னைக்காவது ஒருநாளு விட்டிருக்கியா...ஒன் இடுப்பளவு எனக்குத் தெரியுமா என்ன?...ஆனா அன்பை அள்ளி அள்ளிக் கொட்டுறதுக்கு ஒன் இதயத்தை அளக்கவேண்டிய அவசியமே இல்ல பாத்தியா?...அதான் அன்பா பொழிஞ்சிக்கிட்டு இருக்கேன்" அன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ளவே அவ கோபமெல்லாம் போயிடிச்சி. அவளும் நம்பிட்டா...ஒரு முட்டாளுக்குப் பொய் சொல்லத் தெரியாதுல்ல...