"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். " எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது. அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம். அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி. எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரி...
கொசுக்களின் குருதியிலிருந்து கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர் மானுடத்தின் தலைவாசல் தாய்மடி பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும் உள்ளங்கை கருவறை நாற்றங்கால் கடவுள் வணங்கும் சந்நிதானம் இத்தனை பெயர்களிலும் இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும் உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும் கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும் வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும் கம்பனுக்குள் கனிய வேண்டும் இளங்கோவின் இதயம் வேண்டும் பாரதியின் பதியம் வேண்டும் கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் இதற்கெல்லாம் புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில் கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக் கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி எவரும் நினைப்பதில்லை சாக்கடைக்குள் ப...
கடிதம் கொள்கலன் எண் 610 உலகிலேயே மிக வலிமைவாய்ந்த குற்றவாளி வாரன் ஆண்டர்சனுக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு டிசம்பர் இரவில் உயிரிழப்புக்கும், தலைமுறை ஊனத்திற்கும் உயிர்ச்சிதைவு நோய்களுக்கும் ஆளான போபால் நகரத்திலிருந்து கையாலாகாதவன் எழுதிக்கொள்ளும் கடிதம். ஞாபகம் இருக்கலாம். அமெரிக்க அரசின் காங்கிரசு, கார் தயாரிக்கும் டொயாட்டா நிறுவன்த்தின் உயர்மட்ட நிர்வாகிகளையும், நிறுவன முதலாளியையும் குற்றம் சாற்றிய கதை. விவரம் இதுதான்…இரு சக்கர வாகனங்களில் குறைபாடு இருந்ததாம். அதனால் அமெரிக்க மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால்…. அதற்காகத்தான் டொயாட்டா முதலாளியையும், அலுவலர்களையும் காங்சிரசில் வைத்து சரமாரியாக விசாரித்து வைதார்கள். அமெரிக்கர்களின் தேசப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா ஆண்டர்சன்? இதுவும் ஞாபகம் இருக்கலாம். இருபத்தைண்டாண்டுகளுக்குப் பிறகு 2010 சூன் 7 ஆம் நாள் வெளியான போபால் நச்சுவாயுவைவிட ஆபத்து மிகுந்ததும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உயிரை உலுக்குவதுமான தீர்ப்பு. தன்னையும் மீறிய தருண்ம் ஒன்றில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது தாமதமான, புறக்கணி...
கருத்துகள்
கருத்துரையிடுக