பா(ப)ட்டுக் கோட்டைகள், கவியரசுகள், காவியக் கவிஞர்கள், கவிப்பேரரசுகள் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை மிகப்பெரும் பாரம்பரியம் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் ....
பக்குவமா செதுக்குற மரமும் கலப்பையாகுது
சொக்கத்தங்கம் தட்டித் தட்டி நகையுமானது - உளி
சொன்ன சொல்லைக் கேட்ட கல்லும் சிலையுமானது
மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?- நீ
மாத்தி யோசி மாத்தி யோசி மாறுதல் அப்போ!....
என்கிற பல்லவியோடு மிகவும் பணிவோடு நுழைகிறேன். கோடி கோடி ஒளியாண்டுகள் பரப்பளவு உள்ள இந்தப் பால்வீதி மண்டலத்தில் நான் ஒரு சின்ன போஸான் அணுத்துகள் என்று புரிந்தே வைத்திருக்கிறேன்.
வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பகத்சிங் கண்ணன், என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அக்னிக்கலைக் கூடம், வரிகளுக்கு மாய சுதி கூட்டி எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின், தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ஒளிப்பதிவாளர் புதுயுகம் நடராசன், மறைவாக இருந்து என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் மற்றுமுள்ள அனைவருக்கும், இந்த வாய்ப்புக்கே அடித்தளம் வழங்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும் நா தழு தழுக்க நன்றிகள்....
நாம் காலத்தின் கைதி அல்ல என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி ....
காலத்தை மீறி கனவு காண்கிற பாரதி வழியில் இதுவும் ஒரு பரவச அனுபவம்தான்...நிச்சயம் வந்து பாருங்கள்...
நினைவுகள் அழிவதில்லை..........
கருத்துகள்
கருத்துரையிடுக