அவமானங்களின் அடிவாரம்
*******************************************
உனது காயங்களுக்குக் கீழே
ஒரு காயம்பட்ட இதயம்
காக்கையால் கொத்தப்படும் சுண்டெலியைப்போலக்
கொத்தப்படுகிறது.
அது
அலகு மனிதர்களின்
மாமிச தாகம்.
மரித்துப் போனவர்களின் சொற்களுக்கு
மலர் வளையம் போதும்.
உனது
அட்சயப் பாத்திரத்திலிருக்கும்
வார்த்தைகள்
காயத்தைக் கொத்தும் காக்கைகளை விரட்டிச்
சிதறுகின்றன.
உனது நீரூற்று
ஒரு மலைப் பிரதேசத்தின்
தாகம் தணிக்கக் கூடிய குளிர்ந்த சுனை.
உயிரை ஆசுவாசப்படுத்தும்
இரண்டு கை நீர்
உன்னிடமிருக்கிறது
அதை ஒருபோதும வறளவிடாதே.
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக