எல்லை காந்திகள்

***********************

அவமானப்படுத்தப்பட்ட விவசாயி
எல்லையின் வாசலில்
உடையணிந்த எலும்புக் கூடாகத்
தொங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான்
உலகத்திற்காகத் துடிக்கும்
வெளிறிப் போன இதயம்.

அவனது பஞ்சடைந்த கண்களின் இமைகள்
பசியின் சிறகுகள்

அதிகாரம்
அவனை கோலிக் குண்டு ஆட
கூப்பிடுகிறது.




அவனது வயல் தாளில் எழுதப்பட்டிருக்கும்
மண்புழுக்களின் கவிதைகளை
வாசிக்க மறுக்கிறார்கள்.

மரங்களின் காவியமாகப்
பரந்து விரிந்த அவர்களின் கானகத்தில்
அலட்சியத் தீ வைக்கிறார்கள்.

உண்மையில்
விவசாயி ஒரு விஸ்வரூபன்

அவன் விரல்நுனியில் சுழல்கிறது
உலக உருண்டை

அவனுக்கு முன்
உலகில் உள்ள அனைவரும்
எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறார்கள்!!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்