பா(ப)ட்டுக் கோட்டைகள், கவியரசுகள், காவியக் கவிஞர்கள், கவிப்பேரரசுகள் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை மிகப்பெரும் பாரம்பரியம் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் .... சக்கரத்தில் சுத்துகிற மண்ணு கலயமாகுது பக்குவமா செதுக்குற மரமும் கலப்பையாகுது சொக்கத்தங்கம் தட்டித் தட்டி நகையுமானது - உளி சொன்ன சொல்லைக் கேட்ட கல்லும் சிலையுமானது மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?- நீ மாத்தி யோசி மாத்தி யோசி மாறுதல் அப்போ!.... என்கிற பல்லவியோடு மிகவும் பணிவோடு நுழைகிறேன். கோடி கோடி ஒளியாண்டுகள் பரப்பளவு உள்ள இந்தப் பால்வீதி மண்டலத்தில் நான் ஒரு சின்ன போஸான் அணுத்துகள் என்று புரிந்தே வைத்திருக்கிறேன். வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பகத்சிங் கண்ணன், என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அக்னிக்கலைக் கூடம், வரிகளுக்கு மாய சுதி கூட்டி எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின், தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ஒளிப்பதிவாளர் புதுயுகம் நடராசன், மறைவாக இருந்...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நினைவுகள் அழிவதில்லை இது கடந்தகால கதை எதிர்கால விதை "மாற்றம் ஒன்றே மாறாதது" சூர்யா முதல் பிரகாஷ் ராஜ் வரை இன்று எல்லோரும் சொல்கிறார்கள்... முதலில் சொன்னவர் காலத்தை வென்ற "காரல் மார்க்ஸ்" உண்மைதான்... தமிழ் சினிமாவும் மாறிவிட்டது கதையுள்ள படங்கள் விளம்பரம் இல்லாமலே வெற்றி பெறுகின்றன.... இளைஞர்கள் என்றால்... காதல் தோல்வியில் சாராய தாசர்கள் ஆகும் தேவதாஸ்களா ? அதிகாரங்களின் அடிவருடிகளா? பொழுதுபோக்கு பொம்மைகளா? அல்லது புரட்சியின் தூதுவர்களா? கதையில் வரும் கையூர் மக்களுக்கும் சென்னை காவாங்கரை மக்களுக்கும் காலம் கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அரசியல்... மனிதர்களின் ஆதாரமா? சேதாரமா? வெள்ளைக்காரனின் வேஷங்கள் பண்ணையாரின் துவேஷங்கள் படம் முழுதும் இழையோடும் பகடிகள் அவசியமான அடிதடிகள் நக்கல்கள் நையாண்டிகள் சென்னைவாசிகளின் சீண்டல்கள் வசனங்களின் சிகரங்கள் ஒலிப்பதிவின் உயரங்கள் மலைக்குள் மறைந்திருக்கும் சிற்பங்கள...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு முட்டாளின் இரண்டு கவிதைகள்.... (1) நீங்கள் ஆச்சரியப்பட்டாலோ அதிர்ச்சி அடைந்தாலோ அதற்கு நான் பொறுப்பல்ல யாரோ சிலரின் எடை மேடையில் இம்மாம் பெரிய இந்தியா விற்பனைக்கல்ல... இலவசமாய்... ******** (2) சொல்லுறதைச் சொ ல்லிப்புட்டேன் அப்புறமும் வரும் ஆகஸ்டு 15-க்கு ஆரஞ்சு முட்டாய் வாங்கினா.... நீங்களே சவைச்சுக்கலாம்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது... ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்... ஒரு சக மனிதனின் டைரிக்குறிப்புகள் ***** உன் உலகிற்கு நீ தரும் உன்னத பரிசு ரத்தம் ***** நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு எப்படிச் சொல்வேன் ஏற்கெனவே யாருமறியாமல் இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை. ***** யதார்த்தம் நம்மைவிட நன்றாகவே யோசிக்கிறார்கள் நம் பிள்ளைகள் ***** உலகின் மிக நீண்ட கவிதை பெருமூச்சு ***** பாட்டி எழுதிய கவிதையை ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா தினமும் தாத்தாவின் பல்செட்டை ****** கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல் ஆசுவாசம் கொண்டன புறாக்கள் ****** என்னைவிட உபயோகமாய் இருக்க ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்.... அம்மாவுக்கு ஒரு ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பாம்புக் காதுகளும் மூளைச் சங்கும் ஆதிபெருந்தேவன் எதையுமே கேட்பதில்லை என அடம் பிடித்துக்கொண்டிருக்கும் செவிட்டுச் செவிக்கு மொண்ணையாக விரும்பாத மூளை எழுதிக்கொள்ளும் மடல் ! செவிட்டுச் செவியே, நான் கத்துகிற கத்தல் இந்திய தேசத்துக்கே கேட்டாலும் கேட்கும் .... உனக்குக் கேட்கவில்லையா ?... கேள்விகுறி போல் வளைந்திருக்கும் உனது இரண்டு பிம்பங்களும் எப்போது ஊமைகளாயின ? உனது இரண்டு " காட்சிப் பிழைகளும் " அரசு என்கிற இரும்பு எந்திர முட்டையின் இருபுறத்திலும் பொருத்தப்பட்ட அலங்கார உறுப்புகளா ? அல்லது கண்கள் மூடிக்கொண்டிருக்கும் முகத்தின் ஆணவச் சதைப் பிதுங்கல்களா ? எனில் , கேட்கக் கூடாது என்பதற்காகப் படைக்கப்பட்டிரு...