நினைவுகள் அழிவதில்லை
இது
கடந்தகால கதை
எதிர்கால விதை
"மாற்றம் ஒன்றே மாறாதது"
சூர்யா முதல் பிரகாஷ் ராஜ் வரை இன்று எல்லோரும் சொல்கிறார்கள்...
முதலில் சொன்னவர்
காலத்தை வென்ற "காரல் மார்க்ஸ்"
உண்மைதான்...
தமிழ் சினிமாவும் மாறிவிட்டது
கதையுள்ள படங்கள்
விளம்பரம் இல்லாமலே வெற்றி பெறுகின்றன....
இளைஞர்கள் என்றால்...
காதல் தோல்வியில் சாராய தாசர்கள் ஆகும்
தேவதாஸ்களா ?
அதிகாரங்களின் அடிவருடிகளா?
பொழுதுபோக்கு பொம்மைகளா?
அல்லது
புரட்சியின் தூதுவர்களா?
கதையில் வரும் கையூர் மக்களுக்கும்
சென்னை காவாங்கரை மக்களுக்கும்
காலம் கற்றுத்தந்த பாடங்கள் என்ன?
அரசியல்...
மனிதர்களின் ஆதாரமா?
சேதாரமா?
வெள்ளைக்காரனின் வேஷங்கள்
பண்ணையாரின் துவேஷங்கள்
படம் முழுதும் இழையோடும் பகடிகள்
அவசியமான அடிதடிகள்
நக்கல்கள் நையாண்டிகள்
சென்னைவாசிகளின் சீண்டல்கள்
வசனங்களின் சிகரங்கள்
ஒலிப்பதிவின் உயரங்கள்
மலைக்குள் மறைந்திருக்கும் சிற்பங்களாக
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மகத்துவங்கள்
"மாற்றம் ஒன்றே மாறாதது"
மனிதனின் மனோபாவம் மாற்றமடையுமா?
விடை வேண்டுமா?
நிச்சயம் பாருங்கள் "நினைவுகள் அழிவதில்லை"
நினைவுகள் அழிவதில்லை
இது திரைப்படம் அல்ல
வாழ்க்கையின் வரைபடம்....
****************************** ****************************** ***********
ஏப்ரல் 12 முதல்
ஆல்பட் , உதயம், எம் எம் தியேட்டர் - காலைக் காட்சிகள்
உட்லேண்ட்ஸ் - மாலை, இரவுக் காட்சிகள்
கோபி கிருஷ்ணா - மூன்று காட்சிகள்
****************************** ****************************** ************
கருத்துகள்
கருத்துரையிடுக