புத்தாண்டு வாழ்த்துகள் சம்பிரதாயம் என் மனசுக்கு என்னவோ ஒரு மாதிரியாய் இருக்கிறது...
ஆனால்...எல்லோருடனும் பிரியமாய் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது?

இந்த புத்தாண்டுப் பரிசுகளாக சில கவிதைகள்...



ஒரு சக மனிதனின் டைரிக்குறிப்புகள் 

*****
உன் 




உலகிற்கு நீ தரும் 
உன்னத பரிசு 
ரத்தம் 

*****


நூலகம் திறந்துவைக்க அழைத்த நண்பனுக்கு 
எப்படிச் சொல்வேன் 
ஏற்கெனவே யாருமறியாமல் 
இதயத்தைத் திறந்துவைத்து விட்டதை.


*****

யதார்த்தம் 




நம்மைவிட நன்றாகவே 
யோசிக்கிறார்கள் 
நம் பிள்ளைகள் 


*****

உலகின் மிக நீண்ட கவிதை 
பெருமூச்சு 

*****

பாட்டி எழுதிய கவிதையை 
ஒருமுறை கூட படித்ததில்லை தாத்தா 
தினமும் 
தாத்தாவின் பல்செட்டை

******

கோபுரத்தின் மீது மேகத்தின் குளிர் நிழல் 
ஆசுவாசம் கொண்டன
புறாக்கள்  

******

என்னைவிட உபயோகமாய் இருக்க 
ஒரு காரியத்தைச் செய்துவிடவேண்டும்....
அம்மாவுக்கு ஒரு கைத்தடி வாங்கித்தர வேண்டும்.

*****

கடந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம் 
என்னவெனில் 
வேண்டாம் 
பாராளுமன்றத்தின் மிகப்பெரிய பதவியை 
விமர்சனம் செய்து....
............
.........

இத்துடன் முடித்துக்கொள்வது தான் 
எனக்கு நல்லது...

*****
நன்றியுடன்...
------அசோக்பில்லர் முதல் புதூர் பள்ளி வழியே அம்பேத்கர் சிலைவரை உள்ள என் பிரிய சிநேக மரங்களுக்கு....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்