தினம்தோறும் முகம் பார்த்தாலும் கண்ணாடிக்கு நினைவிருப்பதில்லை உங்கள் முகம்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
கொசுக்களின் குருதியிலிருந்து கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர் மானுடத்தின் தலைவாசல் தாய்மடி பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும் உள்ளங்கை கருவறை நாற்றங்கால் கடவுள் வணங்கும் சந்நிதானம் இத்தனை பெயர்களிலும் இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும் உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும் கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும் வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும் கம்பனுக்குள் கனிய வேண்டும் இளங்கோவின் இதயம் வேண்டும் பாரதியின் பதியம் வேண்டும் கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் இதற்கெல்லாம் புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில் கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக் கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி எவரும் நினைப்பதில்லை சாக்கடைக்குள் ப...
கவிதை அலசல் / நா.வே.அருள் ************************************** எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது கவிதை . சோலை மாயவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது? மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை. மாடுகளுக்குக் கொட்டகைகள். மனிதர்களுக்கு வீடுகள். மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும். மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாடுகள் தீனியை அசை போடுகின்றன. மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள். மாடுகளுக்கு மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது. மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின் வடு. மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம். மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு அதுவுமில்லை. உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான். அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு. வயலோடுதான் வாழ்க்கை. பயிர் பச்சிலோடுதான் பாசம...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தாம்பரம் கிளையில் பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்க நிகழ்வில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து.... 5 தவித்தழுகிறது தர்மம் தறுதலையாய் அலைகிறது அதர்மம்! மௌனத்தில் தலை கவிழும் மனம்! சிதைந்து போன உடல்கள் பார்த்து கதறவில்லையா கல் இமை போர்த்திய உன் கண்கள்? மூக்குக்கும் மார்புக்கும் இடையில் நடக்கிற ஒரு முழச் சுவாசம் உனது உயிர் வாழ்தலுக்கு மட்டும்தானா? உபயோகிக்காத உறுப்பு உடலுக்குள் எதற்கு? உனது மார்புக் கூட்டுக்குள்ளிருந்து பயன்படுத்தாத பாதி பிளந்த பீட்ரூட் பெருந்துண்டைப் பாதையில் வீசு! துக்கத்தில் நீ போட்டிருக்கும் முள்ளி வாய்க்கால் முக்காட்டை மெல்ல அகற்று. தெரிகிறதா? தடித்துப் பருத்த இலங்கையின் செங்கோலில் தடவப் பட்டிருக்கும் தமிழனின் இறைச்சி! தெரிகிறதா? இஸ்ரேலிய அரச விருந்து மண்டபத்தில் பரிமாறப்பட்டிருக்கும் பாலஸ்தீனியனின் பச்சை மாமிசம்! உயிரை ஊடுருவும் உலகமய அரக்கனின் வெவ்வேறு முகங்கள்! ...
கருத்துகள்
கருத்துரையிடுக