அடைகாப்பு 


நிகழ வேண்டிய சந்திப்பு 
நிகழாதபோது 
நெடிய சோகம் நெஞ்சுக்குள் 

உனது தாய்மையின் அலகைத் தரிசிக்க 
ஒவ்வொரு தோப்பாய் அலைந்துகொண்டிருந்தேன் 
நீயோ 
நாம் முதலில் சந்தித்த இலுப்பை மரக் கிளையில் 
குரல் விசிறிப் போயிருக்கிறாய் 

வனத்தின் தாய்மொழி வாய்த்தும் 
குஞ்சினைக் காக்க 
கோழியாய் மாறும் உன் 
குசலமும் சிறகடிப்பும் 

உனது றெக்கையின் அடியாழத்தில் 
உணர்ந்த உள்ளங்கைச் சூட்டின் 
அதே கதகதப்பு 

உனது அணைப்பிற்காக 
முட்டைக்குள் கிடக்கிறேன் 
முழி திறவாமல்.....

வனந்தேடி வருவாயா?

*************************************

** அண்ணன் கல்யாண்ஜி சென்னைக்கு வந்தும் சந்திக்க முடியாத நிமித்தத்தில்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்