மனிதனும் கடவுளும் ******************************* மனிதனுக்கு மிக நெருக்கமாய் இருப்பவரும் மிகத் தொலைவில் இருப்பவரும் கடவுள்தான். ஒரு பொருளே இல்லாதவரும் மனிதனின் போதை வஸ்துவும் கடவுள்தான். கடவுள் உண்டு என்றால் கவிதை கடவுள் இல்லை என்றால் கட்டுரை கடவுள் உண்டு இல்லை என்றால் கதை. கடவுள் உண்டு என்று சொன்னால் அவர் மனிதனுடன் கால்பந்து விளையாட ஒரு குழந்தையைப் போல ஓடி வருகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மனிதனின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. மனிதன் வீடற்றவனாகக் கூட இருக்கலாம் ஆனால் மனிதனின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமே கடவுள்தான் மனிதனை வாழவைக்க நினைத்தவர்கள் அவனது சாம்ராஜ்ஜியத்தைச் சிதைத்தார்கள். மனிதனைச் சிதைக்க நினைத்தவர்கள் அவன் சாம்ராஜ்ஜியத்துக்குக் காவல் நாய்களை வளர்த்தார்கள். மனிதன் ஒரு விசித்திரமானவன் அவனிடம் ஒரு பொம்மையைக் கொடுத்துவிட்டால் அவன் குடிசையில் எந்தப் புகாருமற்றுப் படுத்துறங்கிவிடுகிறான். அவனது ஒரு கனவைச் சீண்டினால் போதும் கையளிக்கப்பட்ட அரண்மனையிலிருந்து காணாமல் போகிறான். மனிதன் சூத்திரத்துக்கு...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திரைப்பட விமர்சனம் ******************************** எட்டுத் திக்கும் பறக்க ஒரு சிந்தனைச் சிறகு ******************************************************************** பற என்று முதலில் தலைப்புச் சூட்டப்பட்டு, அது ஒரு சாதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறதென்று கூறித் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்ட போதே பெயர்மாற்றம் பெற்ற “எட்டுத் திக்கும் பற” திரைப்படம் எனது ஆவலைத் தூண்டிவிட்டது. சாதிய ஆணவ எதிர்ப்புக் கதையாகப் படம் சிறகு விரிப்பதைக் கண்டபோது அந்த ஆவல் நிறைவேறியது. அடித்தட்டுச் சென்னை மக்கள் குடியிருக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிற எதார்த்தமான நடைபாதை வாழ்க்கை. தினமும் ஒவ்வொரு இரவையும் நடைபாதை வாசிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அதிர்ச்சி நிறைந்த மணித்துளிகள். இருட்டை விட பயத்தைத் தருகிற, சைரன் அலறல்களுடன் ரோந்து வரும் வாகனங்களில் காக்கி உடைகளின் கெடுபிடி. மிகைப் படுத்தலற்ற காட்சிகளிலிருந்து தொடங்குகிற ஒரு காதல் ஜோடியின் அவதி சமூக உறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. நடைபாதை வாழ்க்கையில் இளம்பெண்கள் சந்திக்க வேண்டிய சதை...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வானம் நிலா நட்சத்திரங்கள் ••••••••••••••••••••••••••••••••••••••• எழுத்து வேட்டையில் பேசும் புதிய சக்தி ************************************************************** பேசும் புதிய சக்தி சமீப காலமாக மிகவும் முக்கியத்துவம் அடைந்து வருவதை உணர முடிகிறது. பல முக்கியமான இலக்கிய ஆளுமைகள் அதில் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். கலை விமர்சகர் இந்திரன், மூத்த இலக்கிய ஆளுமை கவிஞர் சிற்பி தொடங்கி சா.க என்று செல்லமாக அழைக்கப்படும் சா.கந்தசாமி வரையிலும் அதில் படைப்புப் பங்களிப்புச் செய்து இருக்கின்றனர். இவர்கள் எழுதுவதாலேயே ஒரு பத்திரிகை முக்கியமானதாகி விடும் என்கிற அர்த்தமில்லை. பலப்பல புதிய எழுத்தாளர்களையும் இனங்கண்டு அவர்களுக்குத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தருவதில் இந்த இதழ் வெற்றி பெற்று வருகிறது. தமிழ் இலக்கிய உலகத்திற்கு மறதி அதிகம். அல்லது கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் பராக்குப் பார்த்துச் செல்கிற குணம் உண்டு. இல்லையெனில், தமது மேட்டிமை இலக்கிய பந்தாவிற்கு இதுவெல்லாம் ஓர் எழுத்தா என்கிற இளக்கார...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கனடா பயணக் குறிப்புகள் சாலை விதிகளும் சமூக விதிகளும் ••••••••••••••••••••••••••••• நா.வே.அருள் கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன. நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன. “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம். நமக்கு மட்டுமல்ல. நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தாம். ஏன் அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம் இருந்தன. ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன. உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஆங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தா...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கலையும் சமூகமும் பிரிக்க முடியாததா? **************************************************************** கலை என்பது என்ன என்கிற கேள்வி காலகாலமாகக் கேட்கப்படுகிற கேள்வி. “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது…. கலைஞன் ஒரு ரசிகனைக் கற்பனையிலாவது சிருஷ்டித்துக் கொண்டுதான் கலைப்படைப்பில் ஈடுபட முடியும். ஆகவே கலைப் படைப்பு உருவாவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். உருவான பின் எல்லா மக்களுமே அந்தப் படைப்புக்கு உரியவர்களாகி விடுகிறார்கள். கலைஞன் ஒரு பக்கம், ரசிகர்கள் மற்றொரு பக்கம். ரசிகர்களெல்லாருமே கலைஞனுக்கு அந்தரங்கமானவர்கள். கலைஞன் எல்லோரையும் தனக்கு அந்தரங்கமாக்கிக் கொள்ள உதவு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பயணக் குறிப்புகள் மனம் ஒரு கோவேறு கழுதை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நா,வே.அருள் ~~~~~~~~~~~~~~ உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாடு ஒன்றில் நேரடியாகக் கால்வைக்க முடியும் என்று கனவுகூட கண்டதில்லை. நம் வாழ்வின் சக்கரங்கள் ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஆகாயத்துப் பறவைகளை அண்ணாந்து பார்க்க முடிவதில்லை. அதுவும் ஓர் அலுமினியப் பறவை மூலம் பறந்து அண்டை நாட்டுக்குப் போவதென்பது அத்துணை எளிதானதல்ல. ஏதோ என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது. கனடாவின் வான்கூவர் நகரை அடைகிற போது ஒருமுறை மீண்டும் மனம் சென்னையிலிருந்து விமானத்தில் வந்த தருணங்களை அசைபோட ஆரம்பித்தது. சென்னையில் விமானத்துக்குள் ஏறியதும் கைச்சுமைகளைத் தலைக்குமேல் இருக்கும் தாங்கு பெட்டிகளில் வைத்து அடைத்துவிட்டோம். ஒவ்வொரு இருக்கைக்கு எதிரேயும் ஒரு மின்திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது. காதில் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டு விமானத்தின் பறத்தலைக் கவனிக்கலாம். பருவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டு வரலாம். இசையை ரசித்துக்கொண்டு வரலாம். சினிமாக்களைத் திர...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கனடா பயணக் குறிப்புகள் ஓடுதளத்தில் ஒரு பொம்மை விமானம் சென்னை விமான நிலையத்திற்குள் நுழைகிறபோதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம் தெரியாத உணர்வு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வழியனுப்ப வந்தவர்களும் பயணம் செய்ய இருப்பவர்களும் உணர்ச்சியில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தார்கள். காமிரா முன் நின்று போஸ் கொடுப்பவர்களும் கட்டித் தழுவிக்கொள்பவர்களுமாக விமான நிலையம் உணர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். மகன் அருள்பாரதியின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளத்தான் நானும் என் மனைவி ஹேமாவதியும் கனடாவை நோக்கிப் பறக்க இருந்த காத்தே பசிபிக் விமானத்திற்காகக் காத்திருந்தோம். மகன் அருள்பாரதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கணினித் துறையில் பொறியியலாளராக ஆகிக் கனடாவில் கணினி அறிவியலில் எம் எஸ் படிப்பு. சைமன் பிரேசர் பல்கலைக் கழகம். மேற்படிப்பு முடிய ஆறுமாதம் இருக்கிறபோது மகன் விரும்பிய பெண்ணைத் திருமணமும் முடித்தாயிற்று. அருள்பாரதியும் மருமகள் விஜய்தாவும் இப்போது கனடா வான்கூவர் நகரத்தில் தங்கள் இல்லறத்தைத் தொடங்கியிருக்கிற...