இந்திரன் காலம் ‘ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” தொகுப்பிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூக்ஸின் “கறுப்பு இயேசுநாதர்” கவிதையை முதன்முதல் வாசித்தபோது பிரமிப்பின் உச்சத்தைத் தரிசித்தேன். அன்றைக்கு அண்ணாந்து பார்க்க ஆரம்பித்த ஆளுமை அந்தத் தொகுப்பைத் தமிழில் கொண்டுவந்திருந்த இந்திரன். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பின் ஊடாகக் காற்றுக்குத் திசையில்லை, பசித்த தலைமுறை, பிணத்தை எரித்தே வெளிச்சம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், மஞ்சள் வயலில் வெறிபிடித்தத் தும்பிகள் என்று கவிதைப்புலத்தில் ( + கட்டுரைத் தளத்தில்) காத்திரமான கவிதை மற்றும் இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தியுள்ளார். புதுமையான இலக்கியப் போக்குகளை அவரது சொந்தப் படைப்புகளான சாம்பல் வார்த்தைகள் முதல் மின்துகள் பரப்பு வரையிலும் காண இயலும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்படுத்தியத் தாக்கத்தைத் தமிழ்க் கவிதையில், இலக்கியத்தில் ஒரு புதிய போக்கினைத் தரிசிக்க நேர்ந்தது. கவிதையில் மாத்திரமா? கூர்ந்து அவதானிக்கும்போது அவரது ஒவ்வொரு தொகுப்புமே கவிதையில் ஒரு புதுவிதமானத் திசையினைத் தமிழ்ப் பரப்புக்கு அறிமுகப் படுத்தியி...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலக்கியம் என்றால் பாரதி, கண்ணதாசன், வைரமுத்து என்று இருந்த காலத்தில் என் கைப்பிடித்து நடைவண்டி கொடுத்தவர்களை எப்படி மறக்க முடியும்? அந்த இருவருக்கும் இன்று (14-7-2018) இலக்கியத் திருவிழாக்கள். இந்திரனை முன்வைத்து ஓவியக் கண்காட்சி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தொடங்குகிறது. தமுஎகச நிகழ்ச்சியின் காரணமாகப் புதுவை செல்ல இயலவில்லை. இளையபாரதியின் வ உ சி நூலகத்தின் 21 நூல்கள் வெளியீட்டு விழாவில் கல்யாண்ஜியின் 776 பக்கங்களில் முழுக் கவிதைத் தொகுப்பும் இன்று எம் ஆர் சி நகர் இராஜரத்தினம் அரங்கத்தில் வெளியாகிறது. எட்டு மணியளவில் உள்ளே நுழைகிறேன். தோழர் டி.கே.ஆர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அவருக்கே உரிய புன்சிரிப்புடனும் நிதானத்துடனும் இன்றைய காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் மேலதிகப் பொருத்தப்பாட்டைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். என்னை ஆச்சரியப் படுத்தும் விதமாக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து எளிய முறையில் விளக்கினார். முதலாளித்துவம் தனது விதிகளைச் செயல்படுத்துகிறபோது தோற்றுப் போகிறது. சோசலிசம் தனது விதிகளைச் செயல்படுத்தாதபோ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆர்.கே நகர் இடைத் தேர்தல் வாக்காளர்களுக்கு அன்புத் தமிழன் எழுதும் அரசியல் கடிதம். நீங்கள் பணம் வாங்கி ஓட்டுப்போட்டதாக ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். யார் வாங்கினீர்கள் யார் வாங்கவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம். இருக்கலாம். ஓரிரண்டு நாட்களுக்காவது இலவசமாய்ச் சித்தித்த புது குக்கரில் சமையல் செய்து பார்க்கலாம் என்று உங்கள் பசி உங்கள் கௌவரவத்தைச் சமாதானப் படுத்தியிருக்கலாம். எப்படியெல்லாம் சம்பாதித்த பணம் மக்களுக்கு வந்தாலென்ன என்ற எண்ணமாகவும் இருக்கலாம். பொதுவாகவே வாக்குச்சாவடி முகவர்களுக்குக் கொடுக்கிறபோது நமக்குக் கொடுத்தாலென்ன என்று நீங்கள் நமத்துப்போகத் தொடங்கிய தீக்குச்சிகளாகிவிட்டீர்கள். எதுவானாலும் சரி, பணம் வாங்குகிற எண்ணம் சரியானதா? ஊழலின் ஊற்றுக்கண் உங்களிடமிருந்து தொடங்க நீங்கள் அனுமதிக்கிறீர்களா? இலக்கு எவ்வளவு நியாயமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வழிமுறையும் நேர்மையானதாக இருக்கவேண்டுமென்று மகாத்மா காந்தியின் வார்த்தைகள் கொஞ்சம்கூட உங்களைச் சலனப்படுத்தவில்லையா? பணம் வாங்கி வாக்களிக்கிற ஒரு காரணத்தாலேயே உங்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லா மனிதரும் மனிதர் அல்லர். **************************************************** ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும். அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர. வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது. நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள். அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன். இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள். ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள். அவர்தான் ஆனந்த விகடன...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லா மனிதரும் மனிதர் அல்லர். **************************************************** ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும். அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர. வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது. நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள். அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன். இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள். ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள். அவர்தான் ஆனந்த விகடன...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தீ •• வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் ஞாபகமிருக்கிறதா நாற்பத்து நான்கு உயிர்கள்? ஞாபகமிருக்கிறதா தஞ்சை ராமையாவின் குடிசை? ஞாபகமிருக்கிறதா சாணிப்பால் சவுக்கடி வாழைமட்டையில் தண்ணீர் ஞாபகமிருக்கிறதா கையில் செருப்பு இடுப்பில் துண்டு, ஞாபகமிருக்கிறதா எப்போதும் கைகட்டல் இரட்டை டம்ளர் வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் மாற்றுத்திறனாளிகள் மன்னிப்பீர்…. இது இடஒதுக்கீட்டுக்காக ஏங்கும் ஊனமுற்றோருக்கான உழவுதேசம். ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் செவிடர் தேகம். பிராணி வளர்ப்போர் சங்கம் பிழை பொறுத்தருள்வீர்… கேவலம் நாய்க்கும் தன் வால் நிமிர்த்தாத தன்மானம் இருக்கிறது மனிதர்கள்தாம் குனிந்து கிடக்கிறார்கள். இழிவு இழிவு இழிவு மறதி தேசத்தில் வரலாற்றுப்பிழைகளே வாரிசுகள். மறதி தேசத்தில் எதிர்காலம் எப்போதும் இருண்டகாலம். மறதி தேசத்தில் நெளியாத புழுக்களாய் மனிதர்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிடல் காஸ்ட்ரோவைப் பின்தொடரும் குரல் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ஒரு சதுரங்கத்தின் சாயுங்காலம் ராஜா ராணி யானை குதிரை சிப்பாய் ஒட்டுமொத்தமாக வெட்டப்படுகிற வேளையில்… அசரீரியாய் ஒலிக்கிறோம் ஆட்ட நாயக அகங்கார ஓங்காரங்கள். நாளை வேறு விளையாட்டாகலாம் அன்றிப் புதிய சதுரங்கம் புகுத்தப்படலாம் ஆடுபொருள்களே மாற்றப்படலாம் சிலர் விளையாடத் தகுதியற்றவர் என்று விதிகள் வரலாம் எதுவும் சாத்தியம்…எங்கள் விளையாட்டை யாரறிவார்? கணிக்கமுடியாத நிதியின் காட்டாற்று நடனத்தில் எக்காளமிடும் எங்கள் கடவுளின்முன் நிகழ்த்தப்படும் எந்திர தந்திர காலகால கணினி பூஜைகள் மானுடம்…மானுடம்…மானுடம்… யாருக்கு வேண்டும் உங்கள் திரிபுகளைச் சுமந்தலையும் தேய்ந்த ரிகார்ட் வாசகங்கள்? ஒவ்வொரு வார்த்தையிலும் எங்கள் ஊத்தை மெருகேறிய பற்களின் எனாமல்கள். பொழுதுபோக்குப் பொம்மலாட்டங்களில் மரணக்கயிறுகளில் தொங்கும் மரப்பாச்சி பொம்மைகள் மேடையில் நிகழ்த்தப்படும் மரியாதைக்குரிய ஓநாய்களின் கண்ணீர் நெசவுகளைக் கண்டடையும் நுட்பம் கைவரப்போவதில்லை ...