எல்லா மனிதரும் மனிதர் அல்லர். **************************************************** ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும். அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர. வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது. நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள். அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன். இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள். ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள். அவர்தான் ஆனந்த விகடன...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லா மனிதரும் மனிதர் அல்லர். **************************************************** ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும். அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர. வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது. நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள். அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன். இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள். ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள். அவர்தான் ஆனந்த விகடன...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தீ •• வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் ஞாபகமிருக்கிறதா நாற்பத்து நான்கு உயிர்கள்? ஞாபகமிருக்கிறதா தஞ்சை ராமையாவின் குடிசை? ஞாபகமிருக்கிறதா சாணிப்பால் சவுக்கடி வாழைமட்டையில் தண்ணீர் ஞாபகமிருக்கிறதா கையில் செருப்பு இடுப்பில் துண்டு, ஞாபகமிருக்கிறதா எப்போதும் கைகட்டல் இரட்டை டம்ளர் வெண்மணியில் தியாகிகள் இன்னும் இந்தியாவில் அடிமைகள் மாற்றுத்திறனாளிகள் மன்னிப்பீர்…. இது இடஒதுக்கீட்டுக்காக ஏங்கும் ஊனமுற்றோருக்கான உழவுதேசம். ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் செவிடர் தேகம். பிராணி வளர்ப்போர் சங்கம் பிழை பொறுத்தருள்வீர்… கேவலம் நாய்க்கும் தன் வால் நிமிர்த்தாத தன்மானம் இருக்கிறது மனிதர்கள்தாம் குனிந்து கிடக்கிறார்கள். இழிவு இழிவு இழிவு மறதி தேசத்தில் வரலாற்றுப்பிழைகளே வாரிசுகள். மறதி தேசத்தில் எதிர்காலம் எப்போதும் இருண்டகாலம். மறதி தேசத்தில் நெளியாத புழுக்களாய் மனிதர்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிடல் காஸ்ட்ரோவைப் பின்தொடரும் குரல் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ஒரு சதுரங்கத்தின் சாயுங்காலம் ராஜா ராணி யானை குதிரை சிப்பாய் ஒட்டுமொத்தமாக வெட்டப்படுகிற வேளையில்… அசரீரியாய் ஒலிக்கிறோம் ஆட்ட நாயக அகங்கார ஓங்காரங்கள். நாளை வேறு விளையாட்டாகலாம் அன்றிப் புதிய சதுரங்கம் புகுத்தப்படலாம் ஆடுபொருள்களே மாற்றப்படலாம் சிலர் விளையாடத் தகுதியற்றவர் என்று விதிகள் வரலாம் எதுவும் சாத்தியம்…எங்கள் விளையாட்டை யாரறிவார்? கணிக்கமுடியாத நிதியின் காட்டாற்று நடனத்தில் எக்காளமிடும் எங்கள் கடவுளின்முன் நிகழ்த்தப்படும் எந்திர தந்திர காலகால கணினி பூஜைகள் மானுடம்…மானுடம்…மானுடம்… யாருக்கு வேண்டும் உங்கள் திரிபுகளைச் சுமந்தலையும் தேய்ந்த ரிகார்ட் வாசகங்கள்? ஒவ்வொரு வார்த்தையிலும் எங்கள் ஊத்தை மெருகேறிய பற்களின் எனாமல்கள். பொழுதுபோக்குப் பொம்மலாட்டங்களில் மரணக்கயிறுகளில் தொங்கும் மரப்பாச்சி பொம்மைகள் மேடையில் நிகழ்த்தப்படும் மரியாதைக்குரிய ஓநாய்களின் கண்ணீர் நெசவுகளைக் கண்டடையும் நுட்பம் கைவரப்போவதில்லை ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெருஞ்சோகக் குமிழி •••••••••••••••••••••••••••••• அகன்று பரந்து விரிந்த ஆலமரம் போன்ற வேம்பினடியில் இலைகளையெல்லாம் எண்ணிமுடித்து அலைபேசி வழியே சில பல சுயபடங்கள் சுட்டு முடித்து நாலைந்து நாழிகைகளே முடிந்திருக்கும் அதற்குள் எப்படியும் வந்துவிடுவான் காதலனென ஏதேதோ எண்ணிக்கிடந்தாள். பக்கத்தில் .ஓடியும் ஓடாமலும் தேங்கிக் கிடந்தது நகரின் பாவமென நலிந்த நதி கூவம் வழியெங்கும் பொருக்குப் பொருக்காய்க் காய்ந்து ஏடாகியிருந்தன நாலைந்து நாட்களான நரகல் கொத்துகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஈர மூத்திரத் திட்டுகள் இதையெல்லாம் தாண்டி எப்படியும் வந்துவிடுவான் இருசக்கர எந்திரத் தேரேறி எந்த நேரத்திலுமென்று எதிர்பார்ப்பை வழி நெடுக மலர்களென தூவி இன்னுமவள் காத்திருந்தாள். வேலையில்லாக்காரணங்காட்டியும் ஊதாரித்தனமும் உல்லாசமுமாய் உலாவித்திரியும் சோம்பல் கனவின் சுகவாசியென ஊரில் பலர் அலர்மொழி உரைத்தது சொல்லியும் எதிர்த்த வீட்டாருக்கென்ன தெரியுமென எற்றி இகழ்ந்த தடிப்பேறிய தனது பேச்சுகளே மரத்தைச் சுற்றிச்சுற்றியோடின அவளின் மரத்துப்போன மலரும் நினைவுகளாய்… மற...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெள்ளைத்தாமரை ***************************** கூட்டத்தின் கடைசி வரிசையில் ஏதோ சலசலப்பு. காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாறு பேர்களைச் சமாதானப்படுத்திவிட்டு வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னபோதுதான் எனக்குக் காரணம் புரிய ஆரம்பித்தது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் சரஸ்வதி பூஜையையொட்டி ஒரு கலைவிழா நடந்தது. அந்தப் பள்ளியின் மாணவப்பேச்சாளனாக இருந்ததால் ஆசிரியர்கள் எனக்குப் பேச வாய்ப்பளித்திருந்தனர். அன்றைய எனது பேச்சின் மையக்கருத்து மகாகவி பாரதியின் வெள்ளைத்தாமரை கவிதையாக இருந்தது. ”மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம். வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பலப்பல பள்ளி தேடுகல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” கலைமகளை பூஜை செய்வதன் அர்த்தம் கல்வியைப் பூஜை செய்ய வேண்டும் என்பது மகாகவியின் கருத்து. வெறும் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காதலிக்கும் காதல் ••••••••••••••••••••••••••• அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் ”நினைவுக்குறிப்புகள்” வாசித்து முடித்த இந்தத்தருணத்தில் நான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்லமுடியும். இந்த நொடியில் எனக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. அன்னா தஸ்தயேவ்ஸ்கி என்னுடைய இலக்கியத் தாயாகி விட்டாள். இந்தப் புத்தகத்தை வாசிக்காதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்….இந்த மேற்கோள் வரிகளை ஒருமுறைப் படியுங்கள். ”….அன்னா, அந்த ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன் எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...” இந்த வாசகத்தை இப்போது வாசித்துவிட்டீர்கள் அல்லவா?...அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். யூமா.வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அந்து நூலின் எழுபத்தோராம் பக்கத்தில் மீண்டும் மேற்குறித்த...