காதலிக்கும் காதல் ••••••••••••••••••••••••••• அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் ”நினைவுக்குறிப்புகள்” வாசித்து முடித்த இந்தத்தருணத்தில் நான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்லமுடியும். இந்த நொடியில் எனக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. அன்னா தஸ்தயேவ்ஸ்கி என்னுடைய இலக்கியத் தாயாகி விட்டாள். இந்தப் புத்தகத்தை வாசிக்காதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்….இந்த மேற்கோள் வரிகளை ஒருமுறைப் படியுங்கள். ”….அன்னா, அந்த ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன் எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...” இந்த வாசகத்தை இப்போது வாசித்துவிட்டீர்கள் அல்லவா?...அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். யூமா.வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அந்து நூலின் எழுபத்தோராம் பக்கத்தில் மீண்டும் மேற்குறித்த...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சுந்தரபுத்தனின் ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” ஏதோ ஒரு பகலில் கவிஞர், கலை விமர்சகர் இந்திரன் வீட்டில்தான் சுந்தரபுத்தன் எனக்கு அறிமுகம் ஆனது. அங்கங்கே பார்த்துக்கொண்டால் ”அலோ” சொல்லிக்கொண்டதுண்டு. அப்புறம் நுங்கம்பாக்கம் ஸ்ரீபவன் ஓட்டலில் வைத்து கவிஞர் வசந்தகுமாரனுடன் வைத்து மதிய உணவு. பிறகொருநாள் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் என்றும் வெங்கட் நாராயணா சாலையில் எழுத்தாளர் ஜெயகாந்தன், தீராநதி மணா கலந்து ”வார்த்தை” இதழ் வாசகர் கூட்டம் ஒன்றில் என அங்கும் இங்குமாகச் சில தேநீர்த்தித்திப்புச் சந்திப்புகள். அவரை எனக்குத் தெரிந்த அளவுக்கு அவர் என்னை ஞாபகம் வைத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை. நிற்க. முகநூலில் பார்த்து நானாகப் போன ஒரு விழாவில்தான் அவரது ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” வெளியிடப்பட்டது. மனம் நிறைந்த பேச்சுகளாக இருந்த கூட்டம். இனி நூல் குறித்து. பின்னட்டையில் பதிப்புரை தவிர முன்னுரையோ அணிந்துரையோ இல்லாத புத்தகம். எனக்கென்னமோ அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் (ஈழத்) தமிழன் போல் பட்டது. அதற்கேற்றாற்போல் இந்தப்புத்தகத்தின் முதல் வரியே முள்ளிவாய்க்கால் என்றுதான் தொட...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெறி ******** வெவரமான மனுசன் தோத்து வெட்டரிவா ஜெயிக்குது சுவருகட்டி மனுஷனையே துண்டு துண்டா பிரிக்குது பெத்தமகளை வெட்டுது பேத்தி தலையை அறுக்குது கத்தியாலே மருமகனைக் கண்டதுண்டமாக்குது அப்பனையே ஆளுவச்சி அறுத்துப்போட வைக்குது அப்புராணி தங்கச்சிய காய்கறியா நறுக்குது உத்தபுரம் விழுப்புரம்னு ஊருஊரா அலையுது செத்தப்புறமும் பழிமினுங்க சேரியெல்லபாம் எரியுது ஊருரெண்டா போகுது உசுரு துண்டா ஆகுது யாரு தந்த நோய்இது என்வயிறு எரியுது காதல்கிளிங்க கழுத்தறுக்க கத்திய எதுக்கொடுத்தது வீதியில வெட்டிப்போட வெறிய எது வளத்தது "மனு" கொடுத்த நோய்இதுக்கு மருந்து யாரு எடுத்தது? மருந்திருந்தும் எடுத்துக்கொள்ள மக்கள்மனம் தடுத்தது சின்னக்கட்சி பெரியகட்சி சேந்துதான வளக்குது சின்னம் காட்டித் தேர்தலுல தில்லுமுல்லு முளைக்குது சாதிபேரில் கொல நடந்தா சட்டசபையைக் கலைக்கணும் சாதிபெருமை பீத்தினாலே ஆயுள்தண்டனை கொடுக்கணும் சாதிமாறிக் காதலிச்சா வேலை அரசு கொடுக்கணும் முதலமைச்சர் பாதுகாப்புல முழுக்குடும்பம் இரு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆதியிலிருந்து அந்தம் வரை பாடம் ******** ஆசிரியர்களால் ஆனதிந்த உலகம். இல்லையெனில் ஆதியில் தோன்றிய மனிதர்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாய்க் கம்பும் கல்லுமாய் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருக்கலாம் தாய் தன் பிள்ளைக்குச் சைகை மொழியைத் தத்தளித்தாள் அல்லவா? அதுதான் மூலத்தாய்மொழி. அதிலிருந்து கிளைத்ததுதான் அநேக மொழிகள். மொழிக்கு இப்படி. காலப்போக்கில் கணக்கற்ற கலைகள். ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு ஓர்மை. சொல் எழுத்துக்குத் தாவியதும், கலை, இலக்கியமாய் உருவெடுக்கவும் காலம் எத்தனை ஆசிரியர்களைக் கணக்கற்று ்ஈன்றெடுத்திருக்குமோ? .ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஆசிரியர்தான். கொஞ்சம் நினைவுகளைப்பின்துரத்திப் பார்க்கிறேன். என் சின்ன வயசில் எனக்கொரு பைத்தியக்காரப் பழக்கமாென்றிருந்தது. அதாவது எனக்குக் கருத்து தெரிந்த அந்த சிறுபருவத்தில் பேசுவதையே ஒரு பாட்டைப்போல ராகமெடுத்துப்பாடுகிற பாவனையில் சொற்களை உருட்டிக்கொண்டிருப்பேன். அப்போது எத்தனை வயசிருக்கும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. செஞ்சிக்குப்பக்கத்தில் அவியூர்தான்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மகாத்மா... மலரும் நினைவுகள் மலை ஒன்றிருந்தது மிகப்பெரிய மலை அடிவாரத்தில் ஆதிவம்சம் ஆதிவம்சத்தின் பிள்ளைகளுக்குப் "பாறைப்பார்வை" மலையின் மகிமையை உணராத மதியீனம் அதனால் பாறைக்கொரு பிள்ளையாய்ப் பகை வளர்த்தனர் " எனக்குச்சொந்தம். இந்தப்பாறையை எப்படிப்பார்க்கலாம் நீ?" முகத்தோடு முகம் மோதி தோளோடு தோள் பொருதி தோல்வி எல்லோர்க்கும். எல்லாப்பிள்ளைகளும் இளைத்துப் போயினர் இருந்தும் பாறைக்கொரு பிள்ளையாய்ப் பகை வளர்த்தனர் மலைமுழுங்கி வணிக வழிப்போக்கனை வசீகரித்தது மலை மலையோ பூட்டிவைக்காத பொக்கிஷம் "வாளிப்பான மலை" வாய்பிளந்தான் வணிகன் பிள்ளைகளுக்குள்ளே பெரும்சண்டை மோகம் வழிப்போக்கனுக்கோ வரவேற்பு வளையம் வணிக நாற்காலி அரசியல் அரியணையாய் அவதாரமெடுத்தது ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு விலை அரசியல் வணிகனுக்கு சொந்தமானது மாபெரும் மலை வழுக்குப்பாறைகளுக்கு வண்ணம் தீட்டி இந்தியா என்று இட்டுவைத்தான் பெயரொன்று மலையின் மகத்துவம் ஒரு மகாத்மாவுக்க...