இடுகைகள்

படம்
  கவிச் சக்கரவர்த்திகள் ********************************** கவிதைக்குள்ளிருந்த ரசாயனப்புட்டி கவிழ்த்துக்கொள்ள மாளிகை தீப்பிடித்துக்கொண்டது   கவிஞர்கள் இறந்துகிடந்தார்கள் கவிதைகள் ஐரோப்பியப் புதைசேற்றில் அமிழ்ந்து கிடந்தன.   அப்போது அலகுகளில் மெகா ஃபோனைச் செருகி வனங்களில் கீதங்களுடன் வந்தன வானம்பாடிகள்.   இதயத்தில் வாழ்ந்தவர்கள் இரைப்பைகளின் பாலைவனத்தில் பனைமரங்கள் நட்டவர்கள் சிறகுகளால் நடந்தவர்கள் கால்களால் பறந்தவர்கள் காற்றில் நீந்திய மீன்கள் தலைமுறை ரௌத்ரத்தின் தாயாதிகள்   காளியின் நாக்கில் கவிதையை எழுதியவர்கள்.   தலையணைக்குள் மூளைகள் முளைத்தன.   ஒருவன் ஒவ்வொரு புல்லுக்கும் பெயர் சூட்டியவன் இன்னொருவன் சகாராவைத் தாண்டாத ஒட்டகம் மற்றொருவன் பால்வீதியின் பித்தன்   ஒருவன் கவிதையின் நெற்றியில் ஆயுதம் வைத்தவன் இன்னொருவன் கவிதையின் நெற்றியில் கனவுகள் பூசியவன் மற்றொருவன் கவிதையின் நெற்றியில் பிறையைச் சூடியவன்   ஒருவன் புழுதித்தடங்களில் போர்வாள் செய்தவன் இன...
படம்
ஜெயதேவனும் சில கவிதைகளும் *************************************************** கவிஞர் ஜெயதேவனின் ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல என்கிற கவிதைத் தொகுப்பை முன் வைத்து தானப்பன் கதிர் அவர்கள் காணிநிலத்தில் எழுதிய ஒரு நூல் விமர்சனம் பார்த்தேன்.   //‘மா’ எனும் களைப்போடு வீடு திரும்பும் மாட்டின் கழுத்து மணி ஒலியில் கேட்கிறது பெருங்காட்டின் சிறு ஒலி// என்கிற கவிதையைப் பார்த்ததும் சமீபத்தில் படித்த பாரதி கவிதாஞ்சனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. “அடர்வனத்தின் இருளில் மெல்ல நகருமொரு காட்டுக்கு யானையொன்றின் சாயல்”. ஜெயதேவனின் இன்னொரு கவிதை “ஒரு கோப்பைத் தேநீரில் இருக்கிறதுதானே தோட்டத்தின் மணம்” இந்தக் கவிதையை வாசித்ததும் கல்யாண்ஜி நம் முன் ஒரு பென்சிலை சீவி காட்டைச் சரிக்கிறார்.   “பென்சில் சீவுகையில் கேட்கிறது காட்டில் மளமளவென சரியும் மரமொன்றின் ஓசை“ “பறவை எப்போதும் பறப்பதாகவே நீங்கள் நினைக்கின்றீர்கள் சிறகுகளை இலகுவாக்கி காற்றில் ஓய்வெடுப்பதைப் பார்த்ததில்லையா?” என்று பறவைகளைப் பார்க்கிற போது அவருக்கு எழுதத் தோன்றுகிறது...
Madhusudan Rajkamal அவர்களின் பதிவு ****************************************************** பின்நவீனத்துவ பித்துக்குளிகளும் அர்த்தமற்ற பிழைப்புவாதிகளும்! வரவர இந்த பின்நவீனத்துவ பித்துக்குளிகளின் அட்டகாசங்கள் சகிக்கக்கூடியதாக இல்லை.ஒரு பிரச்சனையை கோட்பாட்டு ரீதியாக விவாதிப்பதற்கு மறுத்து அல்லது திராணியற்று மார்க்சியம் சாதி குறித்து டீப்பா.... ஆய்வு செய்யவில்லை.அம்பேத்கர் அளவுக்கு நுனுக்கமாக ஆய்வுசெய்யவில்லை என்று கதா காலட்சேபம் செய்ய துவங்கிவிடுகிறார்கள்.சரி அண்ணல் அளவிற்கு சாதியின் பன்முகத்தை இடதுசாரிகள் பார்க்க துணியவில்லை அல்லது முரண்டுபிடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.அதில் நமக்கு மாற்று கருத்தில்லை.ஆனாலும் அப்படி டீப்பா..... ஆய்வே செய்யவில்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்.அது பச்சை பொய் என்று உங்களுக்கே தெரியாதா.பி.டி ரணதிவே,இ.எம்.எஸ்,இன்னும் முகம் அறியாத பல மார்க்சிய ஆய்வாளர்களின் சாதி குறித்த ஆய்வுகளை எல்லாம் அப்படியே நீங்க கரைச்சி குடிச்சிட்டீங்களா.இங்கு பிரச்சினை மார்க்சியமும் அம்பேத்கரும் சாதியை எப்படி அனுகினார்கள் என்பது தான் பிரதானமே தவிர ஆய்வே செய்யவி...
பெயர் தெரியாத கவிஞர்களின் பிரபலமான கவிதைகள் **************************** அப்பட்டமாக உண்மைகளைப் பேசும் கவிதைகள் பலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் சமூகத்திற்குத் தெரிவதில்லை.   அப்படி எழுதியவர்கள் பேருக்காக எழுதியவர்கள் அல்லர்.   அதனால்தான் எழுதியவர் பெயர் இல்லாமல் உலவி வருகிற கவிதைகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. பெயர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிற பிற கவிஞர்களால் எழுத முடியாத கவிதைகளை பெயர் பற்றிய பிரக்ஞை இல்லாத கவிஞர்கள்தான் எழுதுகிறார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.   ஏதோ ஒரு வகையில் அவை உக்கிரமான உண்மைகளைச் சுமந்து வருகின்றன.   \\யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.// இந்தக் கவிதை பேசும் உண்மை மகத்தானது அல்லவா?   இந்திய விடுதலைப் போரில் தன் இன்னுயிர் தந்தவர் குதிராம் போஸ்.   இவர் ஆங்கிலேய ஆட்சியால் 1905 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.   இது பற்றிய ஒரு பிரபலமான கவிதை ஒன்றினை எல்லோரும் அறிவார்கள். பத்து மாதங்க...
மனிதனும் கடவுளும் ******************************* மனிதனுக்கு மிக நெருக்கமாய் இருப்பவரும் மிகத் தொலைவில் இருப்பவரும் கடவுள்தான். ஒரு பொருளே இல்லாதவரும் மனிதனின் போதை வஸ்துவும் கடவுள்தான். கடவுள் உண்டு என்றால் கவிதை கடவுள் இல்லை என்றால் கட்டுரை கடவுள் உண்டு இல்லை என்றால் கதை. கடவுள் உண்டு என்று சொன்னால் அவர் மனிதனுடன் கால்பந்து விளையாட ஒரு குழந்தையைப் போல ஓடி வருகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மனிதனின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. மனிதன் வீடற்றவனாகக் கூட இருக்கலாம் ஆனால் மனிதனின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமே கடவுள்தான் மனிதனை வாழவைக்க நினைத்தவர்கள் அவனது சாம்ராஜ்ஜியத்தைச் சிதைத்தார்கள். மனிதனைச் சிதைக்க நினைத்தவர்கள் அவன் சாம்ராஜ்ஜியத்துக்குக் காவல் நாய்களை வளர்த்தார்கள். மனிதன் ஒரு விசித்திரமானவன் அவனிடம் ஒரு பொம்மையைக் கொடுத்துவிட்டால் அவன் குடிசையில் எந்தப் புகாருமற்றுப் படுத்துறங்கிவிடுகிறான். அவனது ஒரு கனவைச் சீண்டினால் போதும் கையளிக்கப்பட்ட அரண்மனையிலிருந்து காணாமல் போகிறான். மனிதன் சூத்திரத்துக்கு...
திரைப்பட விமர்சனம் ********************************  எட்டுத் திக்கும் பறக்க ஒரு சிந்தனைச் சிறகு ******************************************************************** பற என்று முதலில் தலைப்புச் சூட்டப்பட்டு, அது ஒரு சாதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறதென்று கூறித் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்ட போதே பெயர்மாற்றம் பெற்ற “எட்டுத் திக்கும் பற” திரைப்படம் எனது ஆவலைத் தூண்டிவிட்டது.   சாதிய ஆணவ எதிர்ப்புக் கதையாகப் படம் சிறகு விரிப்பதைக் கண்டபோது அந்த ஆவல் நிறைவேறியது. அடித்தட்டுச் சென்னை மக்கள் குடியிருக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிற எதார்த்தமான நடைபாதை வாழ்க்கை.    தினமும் ஒவ்வொரு இரவையும் நடைபாதை வாசிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அதிர்ச்சி நிறைந்த மணித்துளிகள்.   இருட்டை விட பயத்தைத் தருகிற, சைரன் அலறல்களுடன் ரோந்து வரும் வாகனங்களில் காக்கி உடைகளின் கெடுபிடி.   மிகைப் படுத்தலற்ற காட்சிகளிலிருந்து தொடங்குகிற ஒரு காதல் ஜோடியின் அவதி சமூக உறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. நடைபாதை வாழ்க்கையில் இளம்பெண்கள் சந்திக்க வேண்டிய சதை...