கதிர்பாரதியின் கவிதையுலகம் நேற்றுப்போல் தோன்றுகிறது...கல்கி அலுவலகத்தில் அப்பொழுது ஆசிரியர் பொறுப்பிலிருந்த திருமதி சீதா ரவி அவர்களின் அழைப்பின் பேரில் மிக நெருக்கமான ஒரு சிறு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அன்றைய விருந்தினராகக் கலந்து கொண்ட இன்னொருவர் கவிதாயினி வைகைச்செல்வி அவர்கள். திரு.மு.மாறனும் திரு.யுவராஜ் அவர்களும் கல்கி அலுவலகத்தில் இருந்த பிற நண்பர்கள். திருமதி சீதா ரவி ஓர் இலக்கியப் பகிர்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்நிகழ்வில் பலரும் கவிதை வாசித்தார்கள். ஓர் இளைஞர் வாசித்த கவிதை எனக்குள் ஒரு மின் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. அன்றைக்கு அவர் அணிந்திருந்தது கறுப்புச் சட்டை என்பதாக என் நினைவு. அவர் வாசித்த கவிதையின் கதைநாயகர் முக்குக்கு முக்கு குந்தவைக்கப்பட்டிருக்கும்பிள் ளையார். அவர் கவிதை வாசிப்பின் போது எங்கள் ஊர் சந்திகாப்பான் (கிராமங்களில் ஒவ்வொரு தெருக்கொடியிலும் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அந்த "சந்திகாப்பான்" தான் பிள்ளையார் என்பதாக ஐதீகம்) மீது ஒரு நாய் ஒண்ணுக்கடித்துக் க...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.... சம கால சமூக அரசியல் நிகழுவுகளில் இடஒதுக்கீடு எதிர்ப்பு, தலித் எழுச்சி, பாபர் மசூதி இடிப்பு, இவற்றின் ஊடாக இந்துத்துவ சக்திகள் தங்களது பரிசோதனைகளில் புதிய வடிவெய்தி இருக்கிறார்கள். படுகொலை, வன்புணர்ச்சி, கொள்ளை, தீவைப்பு, போன்றவை நடந்து முடிந்த பின்னும் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது நினைவுகளில். மவுனம், அடர்ந்த மவுனம் எதிர்வினையாக கசிகிறது. ஒட்டுமொத்த சிவில் சமூகமும், கொலை வெறியில் மகிழ்ந்த தருணங்கள் முன்னெப்போதும் இருந்ததில்லை. காவல் துறை, நீதித்துறை, அரசாங்கம் எல்லாம் மோடியின் கரசேவகர்களாகக் கைகட்டி, வாய் பொத்தி... உச்ச நீதிகளின் "மனசாட்சி" விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட நிலையில்... இடதுசாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மாற்று பத்திரிகைகள் இதர மிச்சமிருக்கும் சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மட்டுமே நம்பிக்கையளிக்கிறது. நன்றி: குஜராத் 2002 டெஹல்கா அம்பலம் - அ .மார்க்ஸ் - பயணி வெளியீட்டகம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொசுக்களின் குருதியிலிருந்து கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர் மானுடத்தின் தலைவாசல் தாய்மடி பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும் உள்ளங்கை கருவறை நாற்றங்கால் கடவுள் வணங்கும் சந்நிதானம் இத்தனை பெயர்களிலும் இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும் உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும் கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும் வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும் கம்பனுக்குள் கனிய வேண்டும் இளங்கோவின் இதயம் வேண்டும் பாரதியின் பதியம் வேண்டும் கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் இதற்கெல்லாம் புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில் கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக் கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி எவரும் நினைப்பதில்லை சாக்கடைக்குள் ப...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலும் ஆதார் அட்டையும் சமீபத்தில் "ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்" என்கிற தனது கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நண்பர் அய்யப்ப மாதவன் இப்படிக் குறிப்பிடுவார்.... """""ஒரு கவிஞன் காதலைத்தான் பாடவேண்டுமா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும். வேறு எதைப்பற்றியும் பாடும் காலங்களில்லை என்றே கூற வேண்டும். ஒரு எழுச்சியும் இல்லை, புரட்சியும் இல்லை. எழுத்தாளனுக்கு அதிகாரமுமில்லை. அங்கீகாரமும் இல்லை. அடக்குமுறை வடிவமாக எப்பவுமே இங்கிருக்கிற அரசுகள் தோன்றியவண் ணமிருக்கின்றன. பொய் பொய்யாய் பேசிவிட்டு அரசை ஆள்கிறார்கள். மக்களின் மீதே எல்லாச் சுமைகளையும் திணிக்கிறார்கள்....ஒட்டுமொத்த மக்களும் விழிப்புணர்ச்சி அடையாதவரை நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை உண்மையில் நம் மக்கள் அவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் கூட்டாகக் குரல் கொடுத்துப் பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் எனில் அப்போதுதான் கவிஞனுக்கான மகத்தான காலம் உருவாகிவிடும். அப்போது கவிஞன் காதல...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இது நம்ம பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக் காணாமல் போன கதை வெளையாட்டுப் பருவத்துல - அவர் வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அட ஒசந்த சாதி கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - சிறு கெணறு கூட ஏற்கவில்ல பள்ளியில சமமாக - மத்த பிள்ளையோட குந்தினாக்கா பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா பிரிச்சாங்க நோய் கணக்கா தனிசாக்கில் குந்தவச்சி - அழுக்குத் தனி டம்ளர் ஒதுக்கிவச்சி அனிச்சமலர் அண்ணலையே - எரி அக்கினியில் போட்டாங்க வழக்கறிஞர் ஆனபின்னும் - குந்தின வண்டிகூட தீட்டச்சாம் அழுக்கு...
கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://kungumamthozhi.wordpress.com எந்திர வாசல் ஒரு பெண்தான் வேட்டையைத் தொடங்கிவைத்தவள் தன் பிள்ளைகளுக்காக. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும் தெறிக்கும் உண்மை. இது பட்டாக்கத்தியுடன் அலையும் ரவுடி அறியாத ராகுல ரகசியம்* அதனால்தான் இன்றும்… தாய்க்கோழி தன் சிறகுகளைப் பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து பயந்து திரும்பும். கல்வியும் கருணையும் கவிதையும் கைவிடப்பட்ட உலகில் துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள். இதயங்கள் புறக்கணித்து எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில் சமூகத்தின் சவக் களை. இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம் நிகழ்ந்ததைப் பார்த்து நினைவிழக்க… சுயபார்வையற்ற கேமரா தன் ஒற்றைக் கண்ணால் உதிரம் அதிரும் காட்சிகளை உள்விழுங்கத் திணற… கத்தி பார்த்து உயிர் உறைய ச...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இது நம்ம பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக் காணாமல் போன கதை வெளையாட்டுப் பருவத்துல - அவர் வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அட ஒசந்த சாதி கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - சிறு கெணறு கூட ஏற்கவில்ல பள்ளியில சமமாக - மத்த பிள்ளையோட குந்தினாக்கா பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா பிரிச்சாங்க நோய் கணக்கா தனிசாக்கில் குந்தவச்சி - அழுக்குத் தனி டம்ளர் ஒதுக்கிவச்சி அனிச்சமலர் அண்ணலையே - எரி அக்கினியில் போட்டாங்க வழக்கறிஞர் ஆனபின்னும் - குந்தின வண்டிகூட தீட்டச்சாம் அழுக்கு...