இது நம்ம பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக் காணாமல் போன கதை வெளையாட்டுப் பருவத்துல - அவர் வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அட ஒசந்த சாதி கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - சிறு கெணறு கூட ஏற்கவில்ல பள்ளியில சமமாக - மத்த பிள்ளையோட குந்தினாக்கா பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா பிரிச்சாங்க நோய் கணக்கா தனிசாக்கில் குந்தவச்சி - அழுக்குத் தனி டம்ளர் ஒதுக்கிவச்சி அனிச்சமலர் அண்ணலையே - எரி அக்கினியில் போட்டாங்க வழக்கறிஞர் ஆனபின்னும் - குந்தின வண்டிகூட தீட்டச்சாம் அழுக்கு...
இடுகைகள்
கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://kungumamthozhi.wordpress.com எந்திர வாசல் ஒரு பெண்தான் வேட்டையைத் தொடங்கிவைத்தவள் தன் பிள்ளைகளுக்காக. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும் தெறிக்கும் உண்மை. இது பட்டாக்கத்தியுடன் அலையும் ரவுடி அறியாத ராகுல ரகசியம்* அதனால்தான் இன்றும்… தாய்க்கோழி தன் சிறகுகளைப் பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து பயந்து திரும்பும். கல்வியும் கருணையும் கவிதையும் கைவிடப்பட்ட உலகில் துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள். இதயங்கள் புறக்கணித்து எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில் சமூகத்தின் சவக் களை. இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம் நிகழ்ந்ததைப் பார்த்து நினைவிழக்க… சுயபார்வையற்ற கேமரா தன் ஒற்றைக் கண்ணால் உதிரம் அதிரும் காட்சிகளை உள்விழுங்கத் திணற… கத்தி பார்த்து உயிர் உறைய ச...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இது நம்ம பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக் காணாமல் போன கதை வெளையாட்டுப் பருவத்துல - அவர் வெளியூரு போகையில துளியூண்டு தண்ணி தர்ல - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அட ஒசந்த சாதி கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - சிறு கெணறு கூட ஏற்கவில்ல பள்ளியில சமமாக - மத்த பிள்ளையோட குந்தினாக்கா பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா பிரிச்சாங்க நோய் கணக்கா தனிசாக்கில் குந்தவச்சி - அழுக்குத் தனி டம்ளர் ஒதுக்கிவச்சி அனிச்சமலர் அண்ணலையே - எரி அக்கினியில் போட்டாங்க வழக்கறிஞர் ஆனபின்னும் - குந்தின வண்டிகூட தீட்டச்சாம் அழுக்கு...
ஒரு பத்திராதிபருக்கு என் பாராட்டு மலர்வளையம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மரணத்தால் விழுங்க முடியாத மானுட விதை புகழ்வது என் தொழிலல்ல புதையல் எடுப்பது என் பொழுதுபோக்கு அவ்வப்போது சில அபூர்வ புதையல்கள் அகப்பட்டதுண்டு... சில சமயங்களில் புலியின் உறுமல் சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல் பட்டாம் பூச்சியின் சிறகடிப்பு, மின்மினியின் மினுக்கட்டாம் கொண்டலாத்தியின் குகுகுகுப்பு சிலநேரம் கண்கள் சூடேறக் கண்ட கனவு சாம்ராஜ்யம் சிலநேரம் அடியுரமாகிப்போன அற்புத மனிதம் அப்படி என் அகழ்வாராய்ச்சியில் அகப்பட்ட ஒருவன்தான் அகிலம் குறித்துக்கொள்ள வேண்டிய ராமச்சந்திர ஆதித்தன் நான் ஒரு முட்டாள் கவிஞன் இதற்குமுன் ஒருமுறை கூட உன் முகம் பார்த்ததில்லை நீ உச்சரித்ததில் ஒரு வார்த்தைகூட என் செவி வந்து சேர்ந்ததில்லை எனது இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இளவரசன் ஒருத்தனின் சுட்டுவிரல் காட்டிய சுடர்க்கோபுரம் நீ.... உன்னையும் என்னையு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சாதி சாதி சட்டை போன்றது அன்பு தோலைப் போன்றது இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்..... சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள் தோலை உரித்துக் கொள்கிறார்கள் ! மனிதம் சாதி -- சட்டையளவிற்கும் சமானமற்றது... அன்பு -- தோலைப் போன்று சுருங்காதது எப்போது இந்த மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் ? "நிர்வாணம் என்பதே நிஜம்" --நா.வே.அருள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உயரத்திலிருந்து யோசிக்க வேண்டும் சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் குழப்பமான சமூகத்தில்தான் குடியிருக்கிறோம் நாம் குப்பைகள் கிளற கோழிகள் போதும் தானிய மணிகளை விதைக்கத் தவங்கிடக்கிறோம் நாமோ...மனிதர்கள் மூச்சு விட்டு மூச்சு விட்டு வெறும் காற்றுத் தொந்தியாவதற்கா நுரையீரல் ? அடிமைகளை உருவாக்கும் நோய்க்குடுவையா அன்னையின் கருப்பை ? கர்ஜனைகளை நேசிப்பவன் குகைகளை உருவாக்குகிறான் கானங்களை நேசிப்பவன் குயில்களை.... சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் யார் நல்லவரென்றும் எது நல்லதென்றும் இன்னும் புரியவில்லை பிணங்களை உற்பத்தி செய்கிற போலி உயிரா ? யுகங்களை உயிர்ப்பித்துவிடுகிற சாகாத சடலமா ? அடுத்த நூற்றாண்டின் சிம்மாசனமா ? போன நூற்றாண்டின் புதைமணலா ? கரியமில வாயுவா ? ஓசோன் படலமா ? சிகரமா ? பள்ளத்தாக்கா ? சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் என்ன செய்யப் போகிறோம் நாம்? வேட்டையின் வேட்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://kungumamthozhi.wordpress.com (உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7) எனக்குக் கிடைக்காத பால் எல்லோருக்கும் கிடைக்கிறது எனது கவிதை "ஒரு வாய் கடல்" மூலமாக ( ஆனால் அன்று பால் சுரக்காத என் தாயின் பரிதவிப்பு இன்னும் பதிவு செய்யப்படாத பாற்கடல்...).தவிப்புகளை எல்லாம் மீறி அருந்தலாம் வாருங்கள்...இது கவிதைத் தாய்ப்பால்.... ஒரு வாய் கடல் உலக விஞ்ஞானத்தின் மொத்த சூட்சுமத்தையும் கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய் தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாலும் குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது தாய்க்கு மூன்று இதயங்கள் இரண்டில் பால் கசிகின்றன ஒன்றில் அன்பு… மண்ணுக்கு மழைநீர்...மழலைக்குத் தாய்ப்பால் தாய்ப்பால்… கடலில் அல்ல...உடலில் கடைந்த உயிரமுதம் யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு குழந்தைக்குத்தான் மடியில் படுத்துண்ணும் மாபெரும் பாக்கியம் அறுநூறு வகை உயிரிகள் இருநூறு வகை இனிப்புப் புரதங்கள் உண்டால் உறக்கம் மச மச கிறக்கம் ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும் போஸான் அணுத்துகளே … புரியவில்லையே தரணியே அதிசயிக்கும் ...