சாதி சாதி சட்டை போன்றது அன்பு தோலைப் போன்றது இந்த மனிதர்கள் விநோதமானவர்கள்..... சட்டையைக் கழற்ற மறுக்கிறார்கள் தோலை உரித்துக் கொள்கிறார்கள் ! மனிதம் சாதி -- சட்டையளவிற்கும் சமானமற்றது... அன்பு -- தோலைப் போன்று சுருங்காதது எப்போது இந்த மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் ? "நிர்வாணம் என்பதே நிஜம்" --நா.வே.அருள்
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உயரத்திலிருந்து யோசிக்க வேண்டும் சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் குழப்பமான சமூகத்தில்தான் குடியிருக்கிறோம் நாம் குப்பைகள் கிளற கோழிகள் போதும் தானிய மணிகளை விதைக்கத் தவங்கிடக்கிறோம் நாமோ...மனிதர்கள் மூச்சு விட்டு மூச்சு விட்டு வெறும் காற்றுத் தொந்தியாவதற்கா நுரையீரல் ? அடிமைகளை உருவாக்கும் நோய்க்குடுவையா அன்னையின் கருப்பை ? கர்ஜனைகளை நேசிப்பவன் குகைகளை உருவாக்குகிறான் கானங்களை நேசிப்பவன் குயில்களை.... சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் யார் நல்லவரென்றும் எது நல்லதென்றும் இன்னும் புரியவில்லை பிணங்களை உற்பத்தி செய்கிற போலி உயிரா ? யுகங்களை உயிர்ப்பித்துவிடுகிற சாகாத சடலமா ? அடுத்த நூற்றாண்டின் சிம்மாசனமா ? போன நூற்றாண்டின் புதைமணலா ? கரியமில வாயுவா ? ஓசோன் படலமா ? சிகரமா ? பள்ளத்தாக்கா ? சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் என்ன செய்யப் போகிறோம் நாம்? வேட்டையின் வேட்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://kungumamthozhi.wordpress.com (உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7) எனக்குக் கிடைக்காத பால் எல்லோருக்கும் கிடைக்கிறது எனது கவிதை "ஒரு வாய் கடல்" மூலமாக ( ஆனால் அன்று பால் சுரக்காத என் தாயின் பரிதவிப்பு இன்னும் பதிவு செய்யப்படாத பாற்கடல்...).தவிப்புகளை எல்லாம் மீறி அருந்தலாம் வாருங்கள்...இது கவிதைத் தாய்ப்பால்.... ஒரு வாய் கடல் உலக விஞ்ஞானத்தின் மொத்த சூட்சுமத்தையும் கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய் தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாலும் குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது தாய்க்கு மூன்று இதயங்கள் இரண்டில் பால் கசிகின்றன ஒன்றில் அன்பு… மண்ணுக்கு மழைநீர்...மழலைக்குத் தாய்ப்பால் தாய்ப்பால்… கடலில் அல்ல...உடலில் கடைந்த உயிரமுதம் யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு குழந்தைக்குத்தான் மடியில் படுத்துண்ணும் மாபெரும் பாக்கியம் அறுநூறு வகை உயிரிகள் இருநூறு வகை இனிப்புப் புரதங்கள் உண்டால் உறக்கம் மச மச கிறக்கம் ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும் போஸான் அணுத்துகளே … புரியவில்லையே தரணியே அதிசயிக்கும் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு முடிவுறாத கடிதம் ஆதி பெருந்தேவன் முன்னாள் ஜெர்மானிய அதிபரும் அடால்ப் ஹிட்லரின் பிரச்சார அமைச்சருமான பால் ஜோசப் கோயபல்ஸ் அவர்களுக்கு இந்தியாவின் கடைசிக் குடிமகன் எழுதிக்கொள்ளும் கடிதம். உங்கள் திறமையும் பேச்சாற்றலும் உலகறிந்த உண்மை. பொய்யைப் பற்றி உண்மை அறிந்து இருக்கிறதோ இல்லையோ... உண்மையைப் பற்றி நிறையவே பொய் தெரிந்து வைத்திருக்கும். பொய் இன்னொன்றையும் புரிந்து வைத்திருக்கிறது... அதாவது மக்களுக்கு மறதி அதிகம். நம்புவதற்கு ஒரு நாடே ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
செல்போன் திருடு போனதாக நண்பர் அய்யப்ப மாதவனின் பதிவினை முகநூலி ல் காண நேர்ந்தது...அவருடைய இழப்பு என்னுடையதாகவும்...மனசு சங்கடப்பட்டது...திருடன் செருப்புகளை விட்டு விட்டுப்போனதாகவும் எழுதி இருந்தார்...அவனுடைய தடங்களை யாரும் பின்பற்றக் கூடாது என்றா?... ஆனாலும் என் நண்பருடன் உரிமை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை இடுகிறேன்... திருடு போன 'செல்'லில் திருடனுடன் பேசினேன் விட்டுப்போன செருப்புகளை போட்டுப்போ. (நன்றி: அய்யப்ப மாதவனுக்கு)
"அருள்" வாக்கு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அருண் நேருவின் தினமணி கட்டுரை (8.7.2013): இவரது தேர்தல் அலசல் வித்தியாசமானதாகவும் ஆச்சரியகரமானதாகவும் இருக்கும். இன்னொன்று....தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும் இவர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானதாகவும் இருக்கும். அப்படியான ஒரு முன்வைப்பு இதோ: //ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம். சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே? தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும். //சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்? உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.// என் மனசுக்கு பட்டவை: * சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பது தவறு...தனியார் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள், அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்க...