செல்போன் திருடு போனதாக நண்பர் அய்யப்ப மாதவனின் பதிவினை முகநூலி ல் காண நேர்ந்தது...அவருடைய இழப்பு என்னுடையதாகவும்...மனசு சங்கடப்பட்டது...திருடன் செருப்புகளை விட்டு விட்டுப்போனதாகவும் எழுதி இருந்தார்...அவனுடைய தடங்களை யாரும் பின்பற்றக் கூடாது என்றா?... ஆனாலும் என் நண்பருடன் உரிமை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை இடுகிறேன்... திருடு போன 'செல்'லில் திருடனுடன் பேசினேன் விட்டுப்போன செருப்புகளை போட்டுப்போ. (நன்றி: அய்யப்ப மாதவனுக்கு)
இடுகைகள்
"அருள்" வாக்கு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அருண் நேருவின் தினமணி கட்டுரை (8.7.2013): இவரது தேர்தல் அலசல் வித்தியாசமானதாகவும் ஆச்சரியகரமானதாகவும் இருக்கும். இன்னொன்று....தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும் இவர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானதாகவும் இருக்கும். அப்படியான ஒரு முன்வைப்பு இதோ: //ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டவர்களான அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் மேலே வருவதையும் கீழே போவதையும் பார்த்துவிட்டோம். சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அரசியல் கட்சியைத் தொடங்கியவர்கள் எங்கே? தேர்தலில் போட்டியிட்டால் காப்புத் தொகையை மீட்கவே அவர்கள் அரும்பாடு பட வேண்டியிருக்கும். //சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவை இடைவிடாமல் அவர்களுக்கு விளம்பரம் தந்தும் அவர்கள் ஏன் இப்படி மக்களுடைய கவனத்திலிருந்து விலகிப் போனார்கள்? உண்மை என்னவென்றால் எல்லோரும் அவரவருக்குத் தெரிந்தவிதத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வந்தார்கள், அது குழப்பமாகவும் அராஜகமாகவும் இருந்தது.// என் மனசுக்கு பட்டவை: * சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பது தவறு...தனியார் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள், அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்புள்ள நட்புலகத்திற்கு வணக்கம். குங்குமம் தோழி இணைய இதழில் வெளிவந்த நண்பர் பாலு சத்யா அவர்களின் இரான் நாட்டுத் திரைப்பட இயக்குனர் சமீரா பற்றிய சிறந்த பதிவும் எனது "முகம்" கவிதையும் உங்கள் விழி வாசல் ஏற காத்திருக்கின்றன.... நன்றியுடன் நா வே அருள் http://kungumamthozhi.wordpress.com/2013/06/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூமி அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி அநியாயம் நடந்த கதை இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி இல்லாமல் போன கதை வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட வெளியூரு போகையிலே துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு சோறு தின்ன வழியுமில்ல ஒழக்குத் தண்ணீரை - அங்க ஒரு பயலும் கொடுக்கவில்ல கிழக்குச் சூரியனை - எந்தக் கிணறும் ஏற்கவில்ல நாய்குடிக்கத் தண்ணீரை -ஒரு நாலு அண்டா வச்சவனோ தீப்பிடிச்ச நாக்கால - அவரைத் துரத்தி அடிச்சுப்புட்டான் குட்டையில குடிப்பதற்கு - தண்ணி குவிஞ்ச கையில் எடுக்கையிலே வெட்டை மிதந்து வரும் - பத்து வெரலுக்கும் வாந்தி வரும் பள்ளியில சமமாக - வகுப்பில் பக்கத்துல குந்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பா(ப)ட்டுக் கோட்டைகள், கவியரசுகள், காவியக் கவிஞர்கள், கவிப்பேரரசுகள் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை மிகப்பெரும் பாரம்பரியம் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் .... சக்கரத்தில் சுத்துகிற மண்ணு கலயமாகுது பக்குவமா செதுக்குற மரமும் கலப்பையாகுது சொக்கத்தங்கம் தட்டித் தட்டி நகையுமானது - உளி சொன்ன சொல்லைக் கேட்ட கல்லும் சிலையுமானது மக்களோடு மக்களாக சேர்வது எப்போ?- நீ மாத்தி யோசி மாத்தி யோசி மாறுதல் அப்போ!.... என்கிற பல்லவியோடு மிகவும் பணிவோடு நுழைகிறேன். கோடி கோடி ஒளியாண்டுகள் பரப்பளவு உள்ள இந்தப் பால்வீதி மண்டலத்தில் நான் ஒரு சின்ன போஸான் அணுத்துகள் என்று புரிந்தே வைத்திருக்கிறேன். வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பகத்சிங் கண்ணன், என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அக்னிக்கலைக் கூடம், வரிகளுக்கு மாய சுதி கூட்டி எங்கேயோ கொண்டு சென்றிருக்கும் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின், தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ஒளிப்பதிவாளர் புதுயுகம் நடராசன், மறைவாக இருந்...