இடுகைகள்

யார் குற்றவாளி? மிக மிக எளிது காமுறுதல்  அதைவிட அதைவிட சுலபம்  வன்புணர்ச்சி  அரசின்மீது யாரும் ஐயுற  வேண்டாம்  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது  குற்றவாளிகளுக்கு எதிரான கூட்டத்தையும்  ஆர்ப்பாட்டத்தையும்  சாலைமறியலையும்  சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளையும்...
எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு  சூடு கிளப்புவார்கள்  சூட்சுமமாய்ப் பிரிப்பார்கள்  வூடு கட்டுவார்கள்  உளவியலைக் கொறிப்பார்கள்  சாதியத்திற்கு எதிரான  சமூக சாட்சி நீ  நம்முடையதோ சக்கரம் பூட்டிய முன்னோக்கிய சவாரி அவர்களுடையதோ "சதுர" சக்கரங்களால் ஆன பின்னோக்கிய திரும்பல்.
அம்மாவின் அலைபேசியில்  தொடர்பு எல்லைக்கு அப்பால்... மகனின் இதயம்
பிம்ப அரசியல்  தினம்தோறும் முகம் பார்த்தாலும்  கண்ணாடிக்கு நினைவிருப்பதில்லை  உங்கள் முகம்
அடைகாப்பு  நிகழ வேண்டிய சந்திப்பு  நிகழாதபோது  நெடிய சோகம் நெஞ்சுக்குள்  உனது தாய்மையின் அலகைத் தரிசிக்க  ஒவ்வொரு தோப்பாய் அலைந்துகொண்டிருந்தேன்  நீயோ  நாம் முதலில் சந்தித்த இலுப்பை மரக் கிளையில்  குரல் விசிறிப் போயிருக்கிறாய்  வனத்தின் தாய்மொழி வாய்த்தும்  குஞ்சினைக் காக்க  கோழியாய் மாறும் உன்  குசலமும் சிறகடிப்பும்  உனது றெக்கையின் அடியாழத்தில்  உணர்ந்த உள்ளங்கைச் சூட்டின்  அதே கதகதப்பு  உனது அணைப்பிற்காக  முட்டைக்குள் கிடக்கிறேன்  முழி திறவாமல்..... வனந்தேடி வருவாயா? ************************************* ** அண்ணன் கல்யாண்ஜி சென்னைக்கு வந்தும் சந்திக்க முடியாத நிமித்தத்தில்.....
பொதுவாகவே ஒவ்வொருவரின் கவிதை ரசனையும் அவர் சார்ந்த பல்வேறு காரணிகளுடன் இணைந்ததுதான்.  ....... சுகுமாரனின் பயணத்தின் சங்கீதங்கள் படித்திருக்கிறேன்.  இன்று அதிகாலையில்  அவருடைய "நீருக்குக் கதவுகள் இல்லை" தொகுப்பின் இரண்டாவது கவிதை 'பலிக்கோழை' -யைப் படிக்க நேர்ந்தது.   இன்றைய காலச் சூழலில் -  கவிதையின் இருப்பு குறித்த சிந்தனையே கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கருத இடமுள்ள சந்தையில் - இந்தக் கவிதை என்னை உலுக்கி விட்டது. கவிதைக்காகவே வாழ்கிறவர்களுக்கு கவிதையின் இந்த மாயம் சாத்தியம்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இப்படி வாழ்நாளில் ஏதேனும் ஒரு கவிதை எழுதிவிட்டாலும் இலக்கியத் திருப்தி கொள்ளலாம். நிற்க.  ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டுமெனில் ஓவ்வொருவனும் தன் மனதிலிருந்து சர்வாதிகாரத்தைக் கழற்றி எறிய வேண்டும். தீண்டாமையும், சாதியும் ஒழிய வேண்டுமெனில் தலித்துகள் தமது உரிமைகளுக்காகப் போராடுகிற அதே நேரத்தில் பிறந்து விட்ட காரணத்தால் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம் தலித்துகளுடன் இணைந்து சாதி ஒழிப்புக்குப் போராட வேண்டும்.  தர்ம...
முக நூல்  ஒரு கையில் கணினி எலி  இரு கைகளில் விலங்குகள்  வாழ்க ஜனநாயகம்!