என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்

"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். "

எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது.

அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம்.

அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி.

எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரியமாத்தான் இருந்திச்சி.

அமெரிக்காவுல மட்டுமில்ல அந்த நாட்டோட உறவு வச்சிக்கிட்டிருந்த பல நாடுகள்-ல இதுதான் கதியாம். அப்போ இந்தியா எப்பிடித் தப்பிச்சதுன்னு எனக்கு ஒரே ஆச்சரியம்.

"இதுல ஆச்சிரியப்பட எதுவுமில்லை. கவுந்தது எல்லாம் அமெரிக்க தனியார் வங்கிகள். நம்ம நாட்டுல வங்கிகளை தேசியமயமாக்கிட்டோம். அதனால கம்பீரமா நிக்க முடியுது"... தொலைக்காட்சிப்பேட்டியில யாரோ ஒருவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு விவசாயி தன் பங்குக்குக் கதை அளந்துகொண்டிருந்தார்... "ஒரு முறை வாழை எல்லாம் சாஞ்சுப்போனப்ப இன்சூரன்சுலாம் வாங்கிக்கொடுத்தாப்ல. காத்தடிச்சி மரமெல்லாம் சாஞ்சிப்போச்சு. செலவான அம்மாந்துட்டும் போச்சேன்னு கலங்கி நின்னப்போ மானேஜர்தான் ஆறுதல் சொன்னாரு. இன்சுரன்சு தொகை போக நின்ன கடனை நீண்டநாள் கடனா மாத்திக் கொடுத்தாரு. நானும் அந்தக் கடனெல்லாம் காலத்துல அடைச்சிட்டு வந்திட்டதால மேற்கொண்டு நெலம் நீச்சு வாங்க, டிராக்டர் வாங்க, பய புள்ள படிப்பு செலவு எல்லாத்துக்கும் கடன் கொடுத்தாரு. இன்னைக்கு பதினைஞ்சு ஏக்கர் வயக்காடு, தோட்டம் தொறவு, பையன் எஞ்சிநீரு, பொண்ணு டாக்டரு, அம்மா விசயமும் பாங்கு மூலமாத்தான நடந்திச்சு..."

உண்மைதான். நானும் கடன் வாங்கி மேல ஒசந்து வந்தவன்தான். ஆனா பாங்கு மூலமா முன்னேறனும்னா நாணயம் வேணுமின்னு நான் நெனைக்கிறேன். அது இல்லாம முன்னேறுனவங்க என்னைப்பாத்து சிரிக்கலாம். எந்தவிதமான குறுக்குவழி இல்லாம என்னோட நண்பன் வாழ்க்கையிலமுன்னேறி இருக்கிறது நல்ல விஷயம் இல்லையா?

எங்க அப்பா மொதமொதல்ல மாட்டுவண்டி லோன் தான் வாங்கினாரு. ஆனா ஏன்னு தெரியல. அப்பா ரொம்ப நாளா கடனை அடைக்கவேயில்லை. கடனைத் திருப்பிக்கட்டலைன்னா மானேஜர் விடுவாரா? அந்தப்பக்கமே தலைக்காட்டல எங்க அப்பா. நாலு வருஷம் கழிச்சி கவருமெண்டு தள்ளுபடி பண்ணிடிச்சி. அப்பாவுக்கு சந்தோசம். ஒரு இருபத்தஞ்சாயிறம்னா சும்மாவா? லாபம்தானேன்னு நெனச்சாரு. ஆனா அந்தப் பாங்குல ரெண்டாவதுv நுழையவே முடியாமப்போச்சு. ஆத்திரம் அவசரத்துக்கு, வெவசாய மொடைக்கு அப்பா கண்டவங்ககிட்ட கிட்ட வட்டிக்கு வாங்க ஆரம்பிச்சார்.

ஒருவேளை பெரிய மனுசங்களுக்கு எப்பிடி எப்பிடியோ கிடைக்கலாம். ஆனா சின்ன ஆளுங்களுக்கு நாணயமும் நேர்மையும்தான் வங்கிக்கதவைத் திறக்கும்னு என்னை நம்பவச்ச ஒரு கதையை என் நண்பனின் வாழ்க்கையில் நான் பிரத்தியட்சமா பார்த்தேன். நாணயமும் நேர்மையும் ஏழை எளியவங்க மனசுல எப்பிடி ஊறிக்கிடக்குதுன்னு அப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன்.

என் நண்பனின் அப்பா அன்னைக்கு சாய்வு நாற்காலியில் படுத்திருந்த போது சொன்ன வார்த்தைங்க இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவே இல்லை. நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும் என் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நண்பனும் நானும் ஒரே தெருவுல விளையாடினவுங்க. ஒரே வகுப்புலப் படிச்சவுங்க. ஆனா அவன் என்னைவிட குணத்துல ரொம்ப நல்லவன். அவனும் நானும் ஒரு மைல் நடந்தே பள்ளிக்கூடம் போவோம். வழியில மாந்தோப்பு. தெரியாம ரெண்டு மூணு மாங்காயை கல்லால அடிச்சிக் காவலாளிக்கு டிமிக்கிக் கொடுத்துடுவேன்.

திருட்டு மாங்கா எனக்கு வேண்டாம்னு தின்னவே மாட்டான்.

கடைக்காரன் தெரியாத்தனமா அதிகமா சில்லறை கொடுத்தால் டக்குனு டவுசருல போட்டுக்கிட்டு கமர்கட்டு வாங்கின ஆளு நான். அடுத்தவன் பணத்துக்கு ஆசப்படக்கூடாதுன்னு சொல்லுவான் அவன்.

கண்டிப்பா இது அவனோட அப்பாவின் குணம்தான். அவன் இப்பவும் அப்படித்தான் இருக்கான்.

"பணத்தை எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம். பெரிய மனுசனாகவும் ஆயிடலாம். ஆனா இப்படித்தான் வாழணும்னு வாழுற வாழ்கைதாண்டா மேலான வாழ்க்கை " அப்படின்னு தத்துவம் பேசுவான்.

ஒருநாள் நண்பன் வீட்டில் அவ்வளவாக வெளிச்சமில்லாத அறையில் அவனோட அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். வெவசாயம் பண்ணி ஓயஞ்சிப் போன ஒடம்பு. வாதத்துல ஒரு கையும் காலும் வெளங்காமப் போச்சு.

அவரைப் பாக்க வங்கி மேலாளர் வந்திருக்காருன்னு அவனோட அம்மா அவர்கிட்ட சொன்னாங்க. எழுந்திருக்க முயற்சி பண்ணினார். முடியல. கடன் வாங்கி டிராக்டர் வாங்கியிருந்தார். ஆனா கடனை அடைக்க முடியல... மானம் காய்ந்சிப்போச்சு. வெள்ளாமை இல்லை. பஞ்சமோபஞ்சம். சாப்பாட்டுக்கே வழியில்லே. டிராக்டரை வித்துட்டார்.

அந்தக் கடனை வசூலிக்கத்தான் வங்கி மேலாளர் வந்திருந்தார். நானும் நண்பனும் தூண் ஓரமா நின்னுக்கிட்டிருந்தோம். ரெண்டு பேருமே பட்டப்படிப்புப் படிச்சிருந்தாலும் வேலை கிடைக்காம வெவசாயம் பாக்க வேண்டிய நெலமை.

நண்பனின் அப்பா வங்கி மேலாளரை கிட்டக்க அழைச்சார். குரல் கம்மி இருந்தது. வங்கி மேலாளர் கிட்டக்கப் போனார்.

"சார் நான் கடனாளியா செத்துடுவேன் போல இருக்கு. என் பையன் சின்னவன். என்ன பண்ண முடியும்னே புரியலியே. மானம் காய்ஞ்சி கெடுத்திடுச்சே...."

கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அந்த க்ஷணத்துல அறைக்குள்ள மின்னல் ஒன மாதிரி இருந்துச்சி.

வங்கி மேலாளரிடம் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கு.

பெரிய பெரிய மனுசனெல்லாம் ஏமாத்துற கதைகளை பேப்பரில் அப்பப்போ படிச்சிக்கிட்டிருக்கோம். ஏழை எளியவங்களை இந்த உலகம் ஏளனமாகத்தான் பாக்குது. ஆனா அவங்ககிட்ட சாவு துரத்துரப்போ கூட இருக்கிற நேர்மை, நாணயம், வைராக்கியம் என்னை அசர வச்சது.

மரணம் நெருங்குறப்போகூட சுய கவுரவத்தை விடாத ஒரு விவசாயியைப் பாத்து பிரமிச்சிப் போயிட்டேன். மாட்டுவண்டிக்கடனுக்குத் தள்ளுபடி வரும்னு காத்திருந்த என் அப்பாவைவிட கடனாளியாச் செத்துடுவேன் போலிருக்கேன்னு அழுத என் நண்பனின் அப்பா எனக்குப் பிடிச்சிருந்தார். சட்டென்று விதார்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிற கொடுமையான காட்சிகள் கண்ணில் வந்து மறைந்தன.

எவ்வளவோ தூரம் பயணம் பண்ணியாச்சி. ஒரு விவசாயியின் கனமான மனசைக் கடந்துவந்த அந்த இடம் என்றைக்குமே மறக்காது.

இன்னும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்தபடி எதையோ சொல்லிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோணுது.

நா.வே.அருள்

கருத்துகள்

  1. தோழர் அருள்! எனக்கு வேறு மாதிரியான எண்ணம்தான் மனசில் ஓடுகின்றது! மானம் வெட்கம் சூடு சொரணை போன்ற கட்டுமானங்கள் எல்லாம் தேவைதான், ஆனால் யாரிடம் யாருக்கு என்பதே கேள்வி! இந்தக் கட்டுமானங்கள் சுரண்டும் வர்க்கம் தன்னை பாதுகாத்துக்கொள்ள சுரண்டப்படும் வர்க்கத்தின் (சாய்வு நாற்காலியில் கிடந்தவர்) மீது திட்டமிட்டு திணித்த கூறுகள். வெறும் கோவணஆண்டிகளுக்கு இருக்கும் வீராப்பும் சவாலும் சொரணையும் அம்பானி டாட்டா போன்ற 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்களுக்கு' இல்லாமல் போவது திட்டமிட்டதா இயற்கையானதா ? இந்திய அரசின் அதாவது இந்திய மக்களின் தகவல் தொடர்பு துறையை நானூறு கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றிய ரிலையன்ஸ் அம்பானி 'ஐயோ குட்டு வெளிப்பட்டு போச்சே' ன்னு தற்கொலை செய்துக்கலியே? Tax-holiday என்ற பெயரில் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற உத்தமர்களுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் (மக்கள் பணம்தான்) சலுகையாக கொடுக்கப்படும்போது எந்த அம்பானியும் 'ஐயோ இது மக்கள் பணம், எனக்கு வரிச்சலுகை வேண்டாம்' என்று பதறவில்லையே? வாரன் ஆண்டர்சன் இன்றும் உயிரோடுதானே இருக்கின்றான்? அவனை விமான ஏற்றி அனுப்பிய சீனியர் சிவப்பழகனின் குடும்பம் 'ஐயோ குடும்ப மானம் (?) சாந்தி சிரிக்கிதே'ன்னு தற்கொலை செய்துக்கலியே? எல்லாம் தெரிஞ்ச அர்ஜூன் சிங் இப்போதும் ஆரோக்கியமா அம்சமா மூணு வேளை சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்காரு? நான் சொல்ல வருவது இதுவே: வங்கியில் கல்விக்கடன் விவசாயக்கடன் வண்டிக்கடன் போன்று வாங்கி திரும்பி அடைக்க முடியாத சாமானியன் எவனும் வெட்கப்படவோ வேதனைப் படவோ அவசியம் இல்லை, அது உங்கள் பணம்தான், நமது பணம்தான். இறுதியாக: அரசு வங்கிகள் எல்லாம் எட்டு, ஒன்பது சதவீதத்துக்கு கல்விக்கடன் வீட்டுக்கடன் வழங்கும்போது பதிமூணு பதினாலு சதவீத வட்டி கொள்ளையடிக்கும் பகல்கொள்ளை icici முதலாளிக்குத்தான் மேன்மைமிகு இந்திய அரசாங்கம் சமீபத்தில் பத்மபூஷன் அல்லது அதுபோன்ற விருதுகளை வழங்கி கவுரவப் படுத்துவது இந்திய மக்களை இளிச்சவாயன் ஆக்குவதுதானே? நீங்களும் நானும் கடனை திருப்பிக் கொடுக்க வக்கில்லாம போன ஜப்தி, நோடீசு, ஏலம்...420 போன்ற கேவலங்கள், ஆனால் கோட்டும் சூட்டும் போட்டு இங்கிலீசுல பொளந்து கட்டி ஊற ஏமாத்துனா ஜனாதிபதியே விருது கொடுப்பாரு!
    இக்பால்

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள இக்பால்,
    எனது சிறுகதையை முன்வைத்து நீங்கள் வைத்திருக்கிற வாதங்கள் மிகவும் காத்திரமானவை. இந்த சமுதாயத்தின் அடித்தளமான சுவாசத்தை அடையாளம் காட்டுபவை. இந்த நாட்டின் ஏமாற்றுவித்தைகள் எல்லைகடந்து விட்டன. அயோக்கியத்தனங்கள் ஆராதிக்கப்படுகின்றன. மேட்டிமைத்தனங்கள் மெச்சப்படுகின்றன.

    விவசாயிகள் தற்கொலையின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள். தயாரிக்கப்படும் கயிறுகள் தற்கொலைகளுக்கே போதவில்லை. துக்குக்கயிறுகளின் மொத்த நீளத்தில் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் வெட்கங்கெட்ட முன்றாந்தர அரசியல்வாதிகள்,

    இந்தியாவுக்கு ஜனநாயகம் பொருந்தாது என்பார் பெரியார். ஏனெனில் இந்தியாவில் படிப்பறிவே இல்லாத தற்குறிகள் (வேறு வழியில்லாமல் இந்த வார்த்தையைக் குறிப்பிடுகிறேன்) ஏராளம். எப்படி ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட முடியும் என்பது அவர் கருத்து. இன்று நிலைமை இன்னும் மோசம். படித்தவர்கள் என்று கருதப்படுகிறவர்களின் யோக்கியதை என்னவாக இருக்கிறது? உலகமயப்பின்புலத்தில் படிப்பறிவு உள்ளவர்களின் பண்பாடு சிதைக்கப்பட்டிருக்கிறது. வேரடிமண்ணில் வெந்நீர். திட்டமிட்டுத் திசைதிருப்பப்படுகிறார்கள். தெரு முனைகளில் வைக்கப்பட்டிருக்கிற சந்கிகாப்பான்களின் மீது கால்கள் துக்கி முத்திரம் பீய்ச்சி அடிக்கின்றன நாய்கள்… பாவம் ஜனநாயகம்.

    ஆனாலும் உலக அயோக்கியத்தனங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமலே தற்கொலகள் புரிந்துகொண்டிருக்கின்றனர் நாட்டின் கதாநாயகர்கள். அந்தக் கதாநாயகத்தனத்தின் ஒரு சிதறல்தான் சாய்வுநாற்காலியில் கடைசிநாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற என் நண்பனின் அப்பா.

    என்னை மேலும் சிந்தனைச் சுழலுக்குள் தள்ளுகிற - உள்ளம் தோய்ந்த - உங்கள் கருத்துகளுக்கு நா தழுதழுக்க நன்றி.
    நா. வே. அருள்.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள இக்பால்,

  4. அன்புள்ள இக்பால்,

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்